Sunday, 31 March 2019
Saturday, 30 March 2019
*தேர்தல் 2019* நாகப்பட்டினம் தொகுதி வாக்காளர்கள் விபரம்
*நாகப்பட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் விபரம் 26/03/2019 நிலவரப்படி*
*168.திருவாரூர்*
ஆண்கள் 1,31,879
பெண்கள் 1,37,255
மூன்றாம் பாலினம் 22
மொத்த வாக்காளர்கள் 2,69,156
*நாகப்பட்டினம்*
ஆண்கள் 92,328
பெண்கள் 97,541
மூன்றாம் பாலினம் 6
மொத்த வாக்காளர்கள் 1,89,875
*கீழ்வேளூர்(தனி)*
ஆண்கள் 83,532
பெண்கள் 86,462
மூன்றாம் பாலினம் 2
மொத்த வாக்காளர்கள் 1,69,996
*வேதாரண்யம்*
ஆண்கள் 90,681
பெண்கள் 93,507
மூன்றாம் பாலினம் 2
மொத்த வாக்காளர்கள் 1,84,190
*திருத்துறைப்பூண்டி(தனி)*
ஆண்கள் 1,13,541
பெண்கள் 1,16,384
மூன்றாம் பாலினம் 1
மொத்த வாக்காளர்கள் 2,29,926
*நன்னிலம்*
ஆண்கள் 1,30,902
பெண்கள் 1,29,008
மூன்றாம் பாலினம் 7
மொத்த வாக்காளர்கள் 2,59,917
ஆக கூடுதலாக
29. *நாகப்பட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை*
*ஆண்கள் 6,42,863*
*பெண்கள் 6,60,157*
*மூன்றாம் பாலினம் 40*
*மொத்த வாக்காளர்கள் 13,03,060*
தகுதி பெற்று இருக்கிறார்கள்
30.03.2019
*USEFUL INFORMATION GROUP*
நமதூர் மௌத் அறிவிப்பு 30.03.2019
நமதூர் காட்டுப்பள்ளி தெரு அத்தா வீட்டு மர்ஹூம் கனி மு.முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகனார் பிஸ்மி சேட் என்கிற ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு
Friday, 29 March 2019
Thursday, 28 March 2019
Wednesday, 27 March 2019
பாஜக கூட்டணிக்கு 300 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு: தென் மாநிலங்களில் நிலை என்ன?- சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்
மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக அமைத்த கூட்டணியால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 300 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் செய்திநிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட 2-ம் கட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தேர்தலுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கும் கூட்டணி தேசிய அளவில் 42 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தரும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 30.4 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும், வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது அதிகமான பலனைத் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தி சிவோட்டர் மற்றும் ஐஏஎன்எஸ்' செய்தி நிறுவனம் இணைந்து, 2-வதுகட்ட மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை நடத்தியது. கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 543 தொகுதிகளில் உள்ள 70 ஆயிரம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இந்த முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உ.பி.யில் அடி
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த போட்டியால், உ.பியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த தேர்தலைப் போல் அல்லாமல் இந்த முறை பாஜக, 35.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த முறை 80 இடங்களில் 72 இடங்களில் வென்ற பாஜககூட்டணி இந்த முறை 28 இடங்களை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது
நிதிஷ் கூட்டணியால் அதிகரிக்கும்
பிஹார் மாநிலத்தில் 52.6 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெறும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி இணைந்து 40 தொகுதிகளில் 36 இடங்களைக் கைப்பற்ற முடியும்.
ராஜஸ்தான், ம.பி., குஜராத்தில் ஆதரவு
ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 50.7 சதவீத வாக்குகளுடன், 25 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தபோதிலும்கூட மக்களவைத் தேர்தலில் அதிகமான இடங்களைப்பெறக்கூடும். மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில் 23 தொகுதிகளில் பாஜகவும், 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெல்லக்கூடும்.
இந்த இரு மாநிலங்களிலும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தபோதிலும் அங்கு காங்கிரஸ் கட்சி பெரியஅளவுக்கு வெற்றிபெறாது எனத் தெரியவந்துள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா
பாஜக வலுவாக இருக்கும் குஜராத் மாநிலத்தில் 58.2 சதவீத வாக்குகளை பாஜக பெறும். மாநிலத்தில் உள்ள 26 இடங்களில் 24 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றும் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் 48.1 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெறக்கூடும். அங்குள்ள 48 தொகுதிகளில் 34 தொகுதிகளில் பாஜக, சிவசேனா கூட்டணியும், 14 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் பெறக்கூடும்.
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 42.6 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும். இங்குள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெல்ல சாத்தியம் உண்டு.
தமிழகம், கேரளா
தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக கூட்டணி மிகவும் பலவீனமடைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி 35.8 சதவீத வாக்குகளைப் பெற்றபோதிலும் பாஜக கூட்டணி 8 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. மீதமுள்ள 31 இடங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி 44.4 சதவீத வாக்குகளுடன் 31 இடங்களைக் கைப்பற்ற முடியும்.
கேரள மாநிலத்தில் பாஜக 19.6 சதவீத வாக்குகள் பெற்றாலும், அங்குள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியைக் கூட பாஜகவால் வெல்ல முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு 46 சதவீத வாக்குகளும் 17 இடங்களும் கிடைக்கக்கூடும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுஜனநாயகக் கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம்.
கடும்போட்டி
கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸ்மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே கடுமையாக போட்டி இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இங்குள்ள 28 தொகுதிகளில் 44.2 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக 15 இடங்களையும், 43 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும் வெல்லலாம்.
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மொத்தமுள்ள 17 இடங்களில் 16 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி ஒரு இடத்திலும் வெல்லும். வாக்கு சதவீதத்தில் 42 சதவீதத்தை டிஆர்எஸ் கட்சி பெறும் , காங்கிரஸ் கட்சி 28 சதவீதத்தைப் பெற்றாலும் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாது.
ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகளில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சிக்கு 15 இடங்களும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கலாம். இங்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு எந்தவிதமான தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பில்லை.
மே.வங்கத்தில் உயர்வு
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ்,பாஜக இடையே கடும் போட்டி இருக்கக்கூடும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 41.6 சதவீத வாக்குகள் பெற்று 42 தொகுதிகளில் 34 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புண்டு. 35 சதவீத வாக்குகளைப் பெறும் பாஜக கூட்டணி 8 இடங்களைப் பெறக்கூடும். கடந்த முறை 2 எம்.பி.க்களை பெற்ற பாஜக இந்த முறை 8 இடங்களைப் பெறக்கூடும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் எந்த இடமும் கிடைக்காது எனத் தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 இடங்களில் ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி 11 இடங்களையும், பாஜக 10 இடங்களையும் கைப்பற்றக்கூடும்.
மகாகட்பந்தன் இல்லாவிட்டால்...
உத்தரப்பிரேதேசத்தில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி இணைந்து மகாகட்பந்தன் கூட்டணி அமைக்காவிட்டால், பாஜக கூட்டணி 80 இடங்களில் 72 இடங்களைப் பெறும். தனித்துப்போட்டியிட்டால் சமாஜ்வாதி 4 இடங்களையும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் தலா 2இடங்களை மட்டுமே பெற முடியும்.
இதேபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் 4 இடங்களையும், பாஜக 3 இடங்களிலும் வெல்லக்கூடும்.
300 இடங்கள்வரை
சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தலுக்கு முந்தைய பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் 261 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்தது. இப்போது 2-வது கட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தனித்து 264 இடங்களையும், கூட்டணியுடன் சேர்ந்து, 305 இடங்களைப் பெறும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 141 இடங்களிலும், மற்ற கட்சிகள் 97 இடங்களிலும் வெல்லக்கூடும்.
தேர்தலுக்கு பிந்தய கூட்டணி
ஒருவேளை தேர்தலுக்குபின் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (10இடங்கள்), டிஆர்எஸ் கட்சி(16), பிஜு ஜனதா தளம்(10), மிசோ தேசிய முன்னணி ஒரு இடம், ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உண்டு இந்த கட்சிகள் மூலம் 36 இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
தேர்தலுக்கு முன் பாஜக மிகவும் சாதுர்யமாக மகாராஷ்டிராவில் சிவசேனா, அசாமில் போடோலாந்து மக்கள் முன்னணி, பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம், தமிழகத்தில் அதிமுக, உ.பியில் அப்னாதளம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணி மூலம் பாஜகவுக்கு கூடுதலாக 47 இடங்கள் பெறக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tuesday, 26 March 2019
Monday, 25 March 2019
திருவாரூர் இடைத்தேர்தல் :கொடிக்கால்பாளையம் அமானுல்லா மனுத்தாக்கல்
☪ KOM NEWS ONLY 🕌
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கொடிக்கால்பாளையம் மலாயத்தெரு அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் அமானுல்லா சுயோட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
25.03.2019
கொடிக்கால்பாளையம் செய்திகள்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கொடிக்கால்பாளையம் மலாயத்தெரு அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் அமானுல்லா சுயோட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
25.03.2019
கொடிக்கால்பாளையம் செய்திகள்
Sunday, 24 March 2019
Saturday, 23 March 2019
Friday, 22 March 2019
நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் மௌத்தான வர்களுக்கு யாசின் ஓதி துவா
☪ *KOM NEWS ONLY* 🕌
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் சுபுஹூ தொழுகைக்கு பிறகு யாசின் ஒதப்படும் என்பது நாம் அறிந்ததே.
இன்றைய சுபுஹூ தொழுகைக்கு யாசின் ஓதும் போது நியூஸிலாந்து நாட்டில் இரு பள்ளிவாசல்களில் கடந்த வாரம் ஜூம்மா தொழுகையின் போது துப்பாக்கி சூட்டில் மௌத்தான அனைவருக்கும் துவா செய்யப்பட்டது.
22.03.2019
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் சுபுஹூ தொழுகைக்கு பிறகு யாசின் ஒதப்படும் என்பது நாம் அறிந்ததே.
இன்றைய சுபுஹூ தொழுகைக்கு யாசின் ஓதும் போது நியூஸிலாந்து நாட்டில் இரு பள்ளிவாசல்களில் கடந்த வாரம் ஜூம்மா தொழுகையின் போது துப்பாக்கி சூட்டில் மௌத்தான அனைவருக்கும் துவா செய்யப்பட்டது.
22.03.2019
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
Thursday, 21 March 2019
Wednesday, 20 March 2019
Tuesday, 19 March 2019
மீண்டும் பாஜக ஆட்சி அமையும் .கருத்துகணிப்பில் தகவல்
*மீண்டும் பாஜக ஆட்சி..! கருத்து கணிப்பில் தகவல்*
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஆங்கில ஊடகம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகமான *டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்.* இணைந்து மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து கருத்துக் கணிப்பில் ஈடுபட்டன. நாடு முழுவதும் 17,000 பேரிடம் கருத்துகளை கேட்டதாகவும் இந்த கருத்து கணிப்பில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்குமென கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 135 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 125 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 35 தொகுதிகளிலும், பா.ஜ.க இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணிக்கு 52.20 சதவிகித வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 37.20 சதவிகித வாக்குகளும் கிடைக்க கூடுமென கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளிலும், ஆளும் இடது சாரி கூட்டணி 3 தொகுதிகளிலும், பா.ஜ.க கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆளும் தெலுங்கு தேசம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
17 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 13 தொகுதிகளும், பா.ஜ.க கூட்டணிக்கு 2 தொகுதிகளஙும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுமென கூறப்பட்டுள்ளது.
28 தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தில் பா.ஜ.க கூட்டணி 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் 31 தொகுதிகளிலும், பா.ஜ.க. 11 இடங்களிலும், வெற்றி பெறுமென கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பெரிய மாநிலமும் 80 தொகுதிகளை கொண்டதுமான உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 42 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் பா.ஜ.கவுக்கு 39 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணிக்கு 9 தொகுதிகளிலும், காங்கிரசுக்கு 1 தொகுதியிலும், இதர கட்சிகளுக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
40 தொகுதிகளை கொண்ட பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்குமென கூறப்பட்டுள்ளது.
26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
7 தொகுதிகளை கொண்ட டெல்லியில் அனைத்து இடங்களும் பா.ஜ.கவே கைப்பற்றுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஆங்கில ஊடகம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகமான *டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்.* இணைந்து மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து கருத்துக் கணிப்பில் ஈடுபட்டன. நாடு முழுவதும் 17,000 பேரிடம் கருத்துகளை கேட்டதாகவும் இந்த கருத்து கணிப்பில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்குமென கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 135 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 125 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 35 தொகுதிகளிலும், பா.ஜ.க இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணிக்கு 52.20 சதவிகித வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 37.20 சதவிகித வாக்குகளும் கிடைக்க கூடுமென கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளிலும், ஆளும் இடது சாரி கூட்டணி 3 தொகுதிகளிலும், பா.ஜ.க கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆளும் தெலுங்கு தேசம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
17 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 13 தொகுதிகளும், பா.ஜ.க கூட்டணிக்கு 2 தொகுதிகளஙும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுமென கூறப்பட்டுள்ளது.
28 தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தில் பா.ஜ.க கூட்டணி 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் 31 தொகுதிகளிலும், பா.ஜ.க. 11 இடங்களிலும், வெற்றி பெறுமென கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பெரிய மாநிலமும் 80 தொகுதிகளை கொண்டதுமான உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 42 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் பா.ஜ.கவுக்கு 39 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணிக்கு 9 தொகுதிகளிலும், காங்கிரசுக்கு 1 தொகுதியிலும், இதர கட்சிகளுக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
40 தொகுதிகளை கொண்ட பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்குமென கூறப்பட்டுள்ளது.
26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.
7 தொகுதிகளை கொண்ட டெல்லியில் அனைத்து இடங்களும் பா.ஜ.கவே கைப்பற்றுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, 18 March 2019
Sunday, 17 March 2019
நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூட்டில்49 பேர்கள் இறப்பு
நியூசிலாந்து நாட்டில் நேற்று இருவேறு மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்த நாட்டை உலுக்கி உள்ளன.
முதல் சம்பவம், கிறைஸ்ட்சர்ச் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல் நூர் மசூதியில் நடந்தது. அங்கு நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் உள்ளூர் நேரப்படி மதியம் 1.45 மணிக்கு வழக்கம்போல தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பயங்கரவாதி ஒருவர் தானியங்கி துப்பாக்கியுடன் நுழைந்தார். நுழைந்த வேகத்தில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். சில நிமிடங்களே இந்த துப்பாக்கிச்சூடு நீடித்தது. ஆனால் அதற்குள் குண்டு பாய்ந்து பலரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.
‘பேஸ்புக்’கில் நேரலை
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், அதைத் தன் தலையில் பொருத்தி இருந்த அதிநவீன கேமராவில், படம் பிடித்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பினார். இது உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மத்தியில் அந்த நபர், மசூதியில் இருந்து வெளியே சாலைக்கு வந்து அங்கு சிலரை சுட்டு வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து தனது காருக்கு சென்ற அவர், காரில் இருந்து இன்னொரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மீண்டும் மசூதிக்கு திரும்பினார். ஆனால் அங்கு குண்டு பாய்ந்து பலரும் தரையில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டார். வெளியே வந்த அவர் அங்கே நின்றிருந்த ஒரு பெண்ணை சுட்டார். அதைத் தொடர்ந்து தனது காரில் ஏறினார். காரில் ‘பயர்’ என்ற ஆங்கில ‘ராக் பேண்ட்’ குழுவின் பாடலை ஸ்பீக்கரில் அலற விட்டுச்சென்றார்.
தப்பிய வங்காளதேச கிரிக்கெட் அணி
இந்த மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தபோது, கிறைஸ்ட்சர்ச் நகரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோத இருந்த வங்காளதேச கிரிக்கெட் அணியினர் தொழுகை நடத்த வந்தனர்.
ஆனால் அவர்கள் அங்கு பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருப்பதை அறிந்து மயிரிழையில் அங்கிருந்து தப்பினர்.
2-வது துப்பாக்கிச்சூடு
அடுத்த சில நிமிடங்களில் கிறைஸ்ட்சர்ச் நகரின் புறநகரான லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதிலும் பலர் சிக்கினர்.
குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். அங்கும் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
49 பேர் பலி
இவ்விரு மசூதிகளிலும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்தனர்; படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இவ்விரு துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டில் உள்ள மசூதிகளை மூடி வைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடந்த மசூதி பகுதிகளை போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர்.
பள்ளிகள் மூடல்
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள கதீட்ரல் சதுக்கத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான பேரணியில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
அந்த நகரில் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பெற்றோர்கள் வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் பதற்றமுடன் வந்து குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச்சென்றனர்.
பிரதமர் கண்டனம்
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கண்டனம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “நியூசிலாந்து நாட்டின் கருப்பு நாட்களில் இதுவும் ஒன்று. நடந்திருப்பது அசாதாரணமான, முன் எப்போதும் நடந்திராத வன்செயல் ஆகும். இது பயங்கரவாத தாக்குதல்தான். இத்தகைய செயல்களுக்கு நியூசிலாந்தில் இடம் இல்லை” என்று குறிப்பிட்டார்.
இரு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கும் உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பயங்கரவாதி
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உறுதி செய்தார்.
தாக்குதலையொட்டி பிரெண்டன் டாரண்ட், சமூக வலைத்தளத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கான பின்னணியை விவரிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அகதிகள் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
Saturday, 16 March 2019
Friday, 15 March 2019
Thursday, 14 March 2019
Wednesday, 13 March 2019
Tuesday, 12 March 2019
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி வாகன சோதனை யில்₹ 50 லட்சம் பறிமுதல்
தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே கானூர் என்ற இடத்தில் திருவாரூர் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனா. அப்போது அந்த காரின் பின்புறம் இருந்த பையில் ரூ.50 லட்சம் இருந்தது. அந்த பணம் கொண்டு செல்லப்படுவதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை. இதனால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு வந்த அவர்கள், காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்தவர் நாகையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பதும், அவருடன் 3 பேர் வந்துள்ளதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் அதிகமான பணத்தை எடுத்து செல்வதற்கு அனுமதியில்லை. இந்த நிலையில் கானூர் சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் 24 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் ரவுடி பட்டியலில் உள்ள 78 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 பறக்கும் படைகள், 12 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Monday, 11 March 2019
நமதூர் மௌத் அறிவிப்பு 11/03/2019
☪ KOM NEWS ONLY 🕌
**
நமதூர் மேலத்தெரு ம.மு.வீட்டு மர்ஹூம் ம.மு.ஜெஹபர் ஷேக் அலாவுதீன் அவர்களின் மகனரும் மர்ஹூம் வா.மெ.மு.அப்துல் சத்தார் அவர்களின் மருமகனும் ஜெ.சலாவுதீன் அவர்களின் சகோதரருமான ஜெ.அமீருதீன் அன்சாரி அவர்கள் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
11.03.2019
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
**
நமதூர் மேலத்தெரு ம.மு.வீட்டு மர்ஹூம் ம.மு.ஜெஹபர் ஷேக் அலாவுதீன் அவர்களின் மகனரும் மர்ஹூம் வா.மெ.மு.அப்துல் சத்தார் அவர்களின் மருமகனும் ஜெ.சலாவுதீன் அவர்களின் சகோதரருமான ஜெ.அமீருதீன் அன்சாரி அவர்கள் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
11.03.2019
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
நமதூர் மௌத் அறிவிப்பு 11/03/2019
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.மு.அப்துல் சத்தார் அவர்களின் மகனாரும், மர்ஹூம் ம.மு.அப்துல் சலாம் அவர்களின் மருமகனும் சலீம் அவர்களின் தகப்பனாருமான அ.நூருல் அமீன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் இன்று இரவு 9:30மணிக்கு
11.03.2019
Sunday, 10 March 2019
Saturday, 9 March 2019
Friday, 8 March 2019
Thursday, 7 March 2019
மக்களவைத் தேர்தல் 2019 தேதி: ஏற்பாடுகள் முடிந்தது; ஓரிரு நாட்களில் அறிவிக்க தேர்தல் ஆணையம் தீவிரம்
மக்களவைத் தேர்தல் 2019 ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடித்துள்ள நிலையில், தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏப்ரல் மே மாதம் 2ம் வாரம் வரை மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தன.
பிரதமர் மோடி நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிடுவதற்காக தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்தநிலையில் எந்தநேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
மக்களவைத் தேர்தலுக்கான வாகன ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வந்தது. ஏற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன. இதனால் எந்தநேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அநேகமாக இந்த வார இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. செவ்வாய் கிழமைக்கு முன்பாக மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும்.
இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
17வது மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை 7 அல்லது 8 கட்டங்களாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இருக்க வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெறும் எனத் தெரிகிறது.
எனினும் காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என தெரிகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும், 10 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
Wednesday, 6 March 2019
Tuesday, 5 March 2019
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகிறது ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் உத்தேச பட்டியல்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் வலுவான கூட்டணியை தி.மு.க. அமைத்துள்ளது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 10 (புதுச்சேரி உள்பட), இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இதைவைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் தி.மு.க. 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்று தெரிகிறது. சின்னத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 25 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
மேலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உத்தேச பட்டியல் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. (19 தொகுதிகள்) - வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி.
காங்கிரஸ் (10 தொகுதிகள்) - புதுச்சேரி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணி, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி.
ம.தி.மு.க. (2 தொகுதிகள்) - திருச்சி, ஈரோடு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) - மதுரை, திருப்பூர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) - நாகப்பட்டினம், தென்காசி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி (2 தொகுதிகள்) - சிதம்பரம், விழுப்புரம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1 தொகுதி) - ராமநாத புரம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1 தொகுதி) - பொள்ளாச்சி
இந்திய ஜனநாயக கட்சி (1 தொகுதி) - கள்ளக்குறிச்சி.
இது உத்தேச பட்டியல் தான். இதில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Monday, 4 March 2019
Saturday, 2 March 2019
எல்லையில் பதற்றம்: நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் - தலைமை தேர்தல் கமிஷனர்
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்துடன் முடிவடைய இருப்பதால், அதற்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லாவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உத்தரபிரதேசம் சென்று, அந்த மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 3 நாட்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனை முடிந்ததை தொடர்ந்து சுனில் அரோரா லக்னோ நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக, நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுனில் அரோரா பதில் அளிக்கையில், இது தொடர்பாக மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், எந்த குழப்பமும் இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்றும் கூறினார்.
தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது? என்று கேட்டதற்கு, ‘‘உள்துறை அமைச்சகத்துடன் அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்று பதில் அளித்தார்.
சுனில் அரோரா மேலும் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதில் தேர்தல் கமிஷன் உறுதியாக இருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கலாம். அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும்.
நாடு முழுவதும் அமைக்கப்படும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 331 ஓட்டுச்சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்யும் எந்திரம் பயன்படுத்தப்படும்.
முதல் தடவையாக இந்த தேர்தலில், வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தாருக்கும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சொத்து விவரங்கள் பற்றிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்படுகிறது.
அந்த பிரமாண பத்திரத்தில் உள்ள விவரங்களை தேர்தல் கமிஷன், வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கும். அதன்பிறகு அந்த சொத்துகள் விவரம் சரிதானா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த சொத்து விவரங்கள் தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
Friday, 1 March 2019
Subscribe to:
Posts (Atom)