Thursday, 5 July 2018

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர் ஹெல்மெட் ; காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்


கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் கூறி உள்ளது.

கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை முதலில் போலீசார் கடைபிடிக்க வேண்டும். கேரளாவை போன்று தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளன அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என கூறி உள்ளது.

No comments:

Post a Comment