திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், வேளுக்குடி, சித்தனங்குடி, பூதமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதேபோல ஆறுகளில் தேங்கி கிடந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பம்பு செட் மூலம் பாய்ச்சி விட்டதால் ஆறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
மேலும் விவசாய நிலங் களும் வறண்டு காட்சி அளிக் கிறது. இதனால் புற்கள் கருகி இருப்பதால், கால்நடைகளும் மேய்ச்சலின்றி சிரமப் படுகின்றன. கால்நடைகளுக்கான வைக்கோல் கூட இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
இதுபோன்ற நிலை ஏற்படுவதற்கு பருவ மழை பொய்த்து போனதுதான் காரணம் என்றாலும், தண்ணீர் கிடைக்கின்றபோது அதை முறையாக பராமரித்து பாதுகாத்து வைக்காததும் ஒரு காரணம். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளதால் கூத்தாநல்லூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment