Thursday, 9 March 2017

3 மக்களவை தொகுதிகள், 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்


ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முறையே ஏப்ரல் 9,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  கேரளாவில் மலப்புரம் மக்களைவை தொகுதி எம்.பியாக இருந்த ஈ அகமது பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து மலப்புரம் தொகுதி காலியானது. இந்த மக்களவைதொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தனது மக்களை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டார். இதனால், மெகபூபா முப்தி மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அனந்த்நாக் தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி ஸ்ரீநகர் மக்களவை தொகுதி எம்.பி ஹமீத் கரா தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனால், காலியான ஸ்ரீநகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 


இடைத்தேர்தல் நடைபெறும் சட்டசபை தொகுதிகளின் விவரம் வருமாறு:- தேமாஜி (அஸ்ஸாம்), போராஞ்ச் (இமாச்சல பிரதேசம்), பந்தவார்க்(மத்திய பிரதேசம்),காந்தி தஷ்கின்(மேற்கு வங்காளம்), தோல்பூர்(ராஜஸ்தான்), நாஞ்சான்குட், குண்டல்பேட்( கர்நாடாகா) , லிதிபாரா(ஜார்கண்ட்), அப்பர் புர்டக்(சிக்கிம்), ஆர்.கே நகர் (தமிழ்நாடு) ராஜவுரி கார்டன்( டெல்லி)

No comments:

Post a Comment