Saturday, 21 December 2013

இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்டு இல்லை... உள்தாள்தான்: தமிழக அரசு உத்தரவு



சென்னை: ரேசன் கார்டில் 2014ம் ஆண்டிற்கும் உள்தாளின் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.உணவு துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன...் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசியதாவது:

31.12.2013 அன்றுடன் முடிவடைய உள்ள புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றார்.2014ம் ஆண்டிற்கு ஏற்கனவே உள்தாள் ஒட்டப் பட்டுள்ளதால் இதனையே பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

9 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் ரேஷன் அட்டை பலரிடம் கிழிந்து கந்தலாகிவிட்டது. வரும் ஆண்டிலாவது புதிய அட்டை கிடைக்கும் என்று எண்ணியிருந்த மக்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ல் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை அதற்கான எந்த பணியும் தொடங்கப்படாமலே உள்ளது. ஸ்மார்ட் அட்டை கிடைக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.

No comments:

Post a Comment