காரைக்கால் மாவட்டம், பொன்பேத்தி, புத்தக்குடி கிராமத்தில் விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான அனுமதியை காரைக்கால் ஏர்போர்ட் நிறுவனம் பெற்றுவிட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஜே.வி. சௌத்திரி புதன்கிழமை தெரிவித்தது:
காரைக்காலில் விமான தளம் அமைவதற்கு சுற்றுச்சூழல் துறையைத் தவிர எல்லா துறையின் அனுமதியும் கிடைத்துவிட்டது. கட்டுமானப் பணியின்போதே சுற்றுச்சூழல் துறை ஆய்வு மேற்கொண்டு அனுமதி அளிக்கும். காரைக்காலில் 1.8 கிலோ மீட்டர் ஓடுபாதை கொண்ட தளம் அமைக்க, சிவில் ஏவியேஷன் ஸ்டியரிங் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரூ. 116 கோடி செலவாகும். இதற்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஷேர் ஹோல்டர்ஸ் முன் வருகிறார்கள். நிறுவனத்திடம் நிலையம் அமைக்க 180 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. சிறிதளவு நிலம் மட்டுமே கூடுதலாக கிடைக்க வேண்டும். இது நீதிமன்ற வழக்கில் உள்ளது. வழக்கை விரைவாக முடிக்க உதவுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பேசியுள்ளோம். முதல்வர் அடிக்கல் நாட்டிவிட்டால், அடுத்த 15 மாதத்தில் ஓடுபாதை மற்றும் விமான தளத்துக்கு அவசியமான கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும்.
பி7, பி37, ஏ320 ஆகிய 150 முதல் 190 இருக்கைகள் கொண்ட விமானமும், கியூ400, ஏடிஆர் 72 என்ற 60 முதல் 70 இருக்கைகள் கொண்ட விமானமும் காரைக்கால் நிலையத்தில் இருந்து இயக்க முடியும். தவிர, ஐ.எல்.76 டிடி90 என்ற கார்கோ விமானமும் இயக்க முடியும் என்றார் சௌத்திரி.
விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் காரைக்காலை சுற்றி இருக்கும் வழிபட்டு தலகலும் மேலும் வெளிநாட்டு சென்று வருபவர்களும் பயன் அடைவார்கள் .மத்திய அரசும் புதுவை அரசும் விரைந்து செயல்படவேண்டும் என்பது மக்களின் ஆவல் ! செயல்படுமா ?
No comments:
Post a Comment