Thursday, 14 June 2018
Wednesday, 13 June 2018
ரமலான் பிறை 29 வது இரவு
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
*கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நோன்பு கால நேரங்கள்*
🌙🌙🌙🌙🌙🌙🌙
பிறை 29 (14/06/2018)
🕌🕌🕌🕌🕌🕌
கியாமுல் லைல் 1:50
ஸஹர் முடிவு 4:07
சுபுஹூ பாங்கு 4:25
நோன்பு திறப்பு 6:40
மகரிப் பாங்கு 6:45
இஷா இகாமத் 8:45
தராவிஹ் 9:00
பித்ரா தொகை ₹100 (நபர் ஒருவருக்கு)
🌙விடைப்பெறும் ரமலான்🌙
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நோன்பு கால நேரங்கள்*
🌙🌙🌙🌙🌙🌙🌙
பிறை 29 (14/06/2018)
🕌🕌🕌🕌🕌🕌
கியாமுல் லைல் 1:50
ஸஹர் முடிவு 4:07
சுபுஹூ பாங்கு 4:25
நோன்பு திறப்பு 6:40
மகரிப் பாங்கு 6:45
இஷா இகாமத் 8:45
தராவிஹ் 9:00
பித்ரா தொகை ₹100 (நபர் ஒருவருக்கு)
🌙விடைப்பெறும் ரமலான்🌙
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Tuesday, 12 June 2018
வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங் அன் உறுதி
சிங்கப்பூர்
உலக நாடுகளின் எதிர் பார்ப்புகளின் படி திட்டமிட்ட படி இன்று காலை சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.
சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக வடகொரியா மாறும் என்று டிரம்ப்பும் உலகின் மிகப் பெரிய மாற்றத்தைக் காண பழைய சம்பவங்களை மறப்போம் என கிம்மும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இரு தலைவர்களும் கையெழுத்திட்ட ஆவணம் என்ன என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.
டிரம்ப் இது குறித்து கூறும் போது "அழகான விரிவான ஆவணம்," என் அகூறினார் ஆனால் அதில் உள்ளவிவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
செய்தியாளர்கள் மாநாட்டில் "இந்த பெரிய ஆவணம்" மற்றும் அது பகிரங்கமாக வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.டிரம்ப் அவர் கிம் உடனான "சிறப்பு பத்திரத்தை" உருவாக்கியதாக கூறினார்.
வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என அதன் தலைவர் கிம் அறிவித்து உள்ளார்
Sunday, 10 June 2018
புனித காபாவில் பிரான்ஸ் நாட்டுக்காரர் தற்கொலை
சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியானது, இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான இஸ்லாமிய யாத்ரீகர்கள் உலகம் முழுவதும் இருந்து மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மெக்காவில் உள்ள இந்த மசூதியின் மூன்றாவது தளத்தில் இருந்து ஒருவர் திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. மேலும் அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று சவுதி மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புனித நகரமான மெக்காவில் இப்படி நடைபெறுவது இது முதல் முறை அல்ல. கடந்தாண்டு சவுதியைச் சேர்ந்த, ஒருவர் மெக்கா மசூதியின் காபா முன்பு தீக்குளிக்க முயன்றார். ஆனால், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ஸாம் மதம், மற்ற மதங்களைப் போல தற்கொலைக்குத் தடை செய்கிறது. புனித ரமலான் மாதத்தில், மெக்கா மசூதியில் நிகழ்ந்த இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Saturday, 9 June 2018
Thursday, 7 June 2018
Wednesday, 6 June 2018
Tuesday, 5 June 2018
Sunday, 3 June 2018
வெளியூர் மௌத் அறிவிப்பு 4/6/2018
அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு மர்ஹூம் கமாலுதீன் அவர்களின் பேத்தியும்
வவ்வாலடி முஹம்மது ஆரிப் அவர்களின் மகளும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியுமான பௌஜீல் இனாயா அவர்கள் ஏனங்குடி தனது இல்லத்தில் வாபத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்.
அன்னாரின் ஜனாசா 4/6/2018 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Friday, 1 June 2018
ரமலான் பிறை 17 பதுரு சஹாபாக்கள் தினம்
- நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் இன்ஷாஅல்லாஹ் இன்று தராவிஹ் தொழுகைக்கு பிறகு பதுரு போரில் பங்கு கொண்ட சஹாபாக்களை நினைவு கூறும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சி யில் அனைவருகளும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
Thursday, 31 May 2018
அஞ்சல் ஊழியர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் பணிகள் பாதிப்பு
ஜி.டி.எஸ். கமிட்டி ஊழியர் ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிற் சங்க உறுப்பினர் சரி பார்ப்பை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 9-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் துறை ஊழியர் சங்க நிர்வாகி தர்மதாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் நடந்த போராட்டத்தினால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.
நேற்று 9-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் துறை ஊழியர் சங்க நிர்வாகி தர்மதாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் நடந்த போராட்டத்தினால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.
Wednesday, 30 May 2018
Tuesday, 29 May 2018
Sunday, 27 May 2018
Saturday, 26 May 2018
பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் கலெக்டர் தகவல்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உடன் இருந்தார். அப்போது ஆழித்தேர் வடிவமைப்பு, ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்ட இரும்பு சக்கரம் மற்றும் தேர் சக்கர முட்டுக்கட்டை வடிவமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து தேரோடும் 4 வீதிகளிலும் தேர் சுற்றி வர தேவையான வசதிகள் உள்ளதா? என்றும், தேருக்கு இடையூறு ஏற்படாமல் மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டனர். மேலும் சாலையின் குறுக்கே மின்சார கம்பிகள், தொலைபேசி இணைப்பு கம்பிகள் செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வடம் பிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு கூட்டங்கள் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, விழா சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நகராட்சி மூலம் 50 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேருக்கு முன்னும், பின்னும் வாகனத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தேரோடும் 4 வீதிகளிலும் 7 தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தேரோடும் வீதியில் 2 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் 3 அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 2 உதவியாளர்கள் அடங்கிய 4 மருத்துவக்குழுக்களும், தேருக்கு பின்னால் 2 மருத்துவக்குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆழித்தேரோட்டத்திற்கு 1 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Friday, 25 May 2018
கொடிக்கால்பாளையம் நோன்பு நேரம்
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
*கொடிக்கால்பாளையம் நோன்பு கால நேரங்கள்*
🌙🌙🌙🌙🌙🌙🌙
பிறை 9 (25/05/2018) வெள்ளிக்கிழமை
🕌🕌🕌🕌🕌🕌
ஸஹர் முடிவு 4:08
சுபுஹூ பாங்கு 4:30
நோன்பு திறப்பு 6:34
மகரிப் பாங்கு 6:40
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*கொடிக்கால்பாளையம் நோன்பு கால நேரங்கள்*
🌙🌙🌙🌙🌙🌙🌙
பிறை 9 (25/05/2018) வெள்ளிக்கிழமை
🕌🕌🕌🕌🕌🕌
ஸஹர் முடிவு 4:08
சுபுஹூ பாங்கு 4:30
நோன்பு திறப்பு 6:34
மகரிப் பாங்கு 6:40
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Subscribe to:
Posts (Atom)


























































