Saturday, 2 December 2023

KEIA கூட்டம்



நமது கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷனின் வருடாந்திர குடும்ப ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி ஏக வல்லோனின் திருநாட்டத்தினால் துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது. மதிய விருந்திற்கு பிறகு நமதூர் கூட்டம் J. முஹம்மது அலி அவர்களின் மகள் கிராஅத்துடன் தொடங்கியது. வரவேற்புரை முஹம்மது ரஸ்வி வழங்க, Dr. அப்துல்காதர் ஒரு சமூகமாக எவ்வாறு சமுதாயத்திற்கு நன்மைகள் செய்து இறைவனின் திருப்பொருத்தை பெறுவது என்று   சிறப்புரையாற்றினார். தலைமையுரை தலைவர். சுபுஹத்துல்லாஹ் ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து சிறப்பித்த நமதூர் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் ஊர் உறவின் முறை ஜமாத் தலைவர் ஹலிக்குல் ஜமான் அவர்கள் சிறிய உரையோடு, முஹம்மது அலி அவர்கள் நமது அசோஷியேசனின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் பற்றிய உரையாற்றினார். பின்னர் கீழ்காணும் புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


தலைவர்: S. சுபுஹத்துல்லாஹ்

து. தலைவர்: P. முனவர் ஜமான்

செயலாளர்: A. முஹம்மது இஸ்மாயில்

து. செயலாளர்: மக்பூல் அஹமது

பொருளாலர்: J. முஹம்மது அலி

து. பொருளாலர்: S. முஹம்மது யாஸின்

ஆடிட்டர்: A. ஹாஜா மொய்னுதீன்


நிர்வாக குழு உறுப்பினர்கள்


1. H. ஃபைரோஸ் கான்

2. M. ஷாகுல் ஹமீது

3. A. முஹம்மது யூசுஃப்

4. K. முஹம்மது முஹப்பத்

5. A. முஹம்மது ஷேக் அக்ரம். 


இறுதியாக G. முஹம்மது கஜ்ஜாலி அவர்களின் நன்றியுரையுடன் ஏக வல்லோனிடம் துஆவுடன் கூட்டம் மகிழ்ச்சியுடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துல்லில்லாஹ்.

No comments:

Post a Comment