Friday, 26 August 2022

மௌத் அறிவிப்பு



26.08.2022


நமதூர் சூஃபி நகர் தெற்குத்தெரு S.சாகுல் ஹமீத், S.ஹாஜா நஜுபுத்தீன் ஆகியோரின் தாயாரும், முகமது அன்சாரி அவர்களின் மாமியாரும், மர்ஹும் ஷேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியுமான *புர்கான் பிவி* அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு  9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Monday, 22 August 2022

மதரஸா வுக்கு மாணவர்கள் அழைக்கும் நிகழ்ச்சி


 நமதூர் மதரஸா மத்லபுல் கைராத்  சார்பில்  நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் நடைபெறும் மக்தப் மதரஸாவில் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்து மார்க்க கல்வியை அனைவரும் பயில வேண்டும்  என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிவாசல் தெரு மற்றும் தெற்கு தெருவில் உள்ள வீடுகள் தோறும் அழைக்கும்  நிகழ்ச்சி இன்று அசர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. பெற்றோர்கள் அதை மகிழ்வோடு வரவேற்றதுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ்... 



எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பிள்ளைகளுக்கு ஈருலக கல்வியை நிரப்பமாக தந்தருள் புரிவானாக ஆமீன்.






Sunday, 21 August 2022

மௌத் அறிவிப்பு



21.08.2022



நமதூர் பர்மா தெரு துக்கான் வீட்டு நூர் முஹம்மது, ஹாஜா நஜ்புதீன்,ஜெஹபர் சாதிக் ஆகியோர்களின் மாமானரும், சிங்கப்பூர் செய்யது அஹமது அவர்களின் சகலரும் , மர்ஹூம் நூர் மைதீன் மற்றும் ஜெய்னுல்லாபுதீன் ஆகியோர்களின் மச்சானும் , ஜாவித் இம்தியாஸ் அவர்களின் பாட்டானருமாகிய ஹாஜி சிராஜூதீன் அவர்கள் பர்மா தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா இன்று மதியம் 1 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 20 August 2022

மௌத் அறிவிப்பு



நமதூர் மேலத்தெரு அத்தா வீட்டு மர்ஹூம் கனி P. S. அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், பகாவுதீன், மர்ஹும் அலாவுதீன், ஹாஜா அமீர்தீன் அவர்களின் தாயாருமாகிய S. P. ராபியத்தும்மாள் அவர்கள் காயிதே மில்லத் தெரு அவர்கள் இல்லத்தில்  மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா  20.08.2022 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.