Sunday, 24 July 2022

மஹாஜன சபை கூட்டம்

 


24.07.2022 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் இன்று காலை மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் ஹாஜி கா.மெ.மு.அ.முஹம்மது ஜபரூதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

 இதில் மத்லபுல் கைராத் கல்வி நல குழுமத்தின் காலியாக இருந்த செயலாளர் பொறுப்புக்கு கீ.வா.மு.அ.முஹம்மது யூசுப் சாதிக் அவர்களும் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு 

1.முஹம்மது அப்துல் வஹாப் 2.ப.இ.மு.முஹம்மது நிஜாமுதீன் 3.கு.ஜெஹபர் சாதிக் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

 மேலும் தினா அப்பா இப்ராம்சா ராவுத்தர் நினைவிடத்தில் குடியிலிருந்த பஹ்ருதீன் மனுவை ஏற்று தக்க நடவடிக்கை எடுப்பது என்றும் 

 நமதூர் புதுமனைத்தெரு நல்வழி விடுதி புதிய பள்ளிவாசல் கட்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிகளை துவக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment