*செய்தி :*
12.09.2021
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் பொதுசபை கூட்டம் இன்று தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் மஃஸூம் மஹாலில் நடைப்பெற்றது.
இதில் ஜமாஅத் தேர்தல் அதிகாரிகளாக
1.முத்துவாப்பா என்கிற சுல்தான் அப்துல்காதர் (நடுத்தெரு)
2.முஹம்மது ஜான் (ஜெயம் தெரு)
3.A.P.ஜெஹபர் அலி (நடுத்தெரு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2.தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து கூரிய வழிவகைகளை பொதுசபைக்கு அனுப்பி ஒப்புதல் அளிப்பது என்றும்
3.தேர்தல் பணிகளை துவக்கி புதிய ஜமாஅத் நிர்வாகம் அமைக்க உரிய நடவடிக்கைகளை துவக்க அனுமதி அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஜமாஅத் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ஹபிபுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் ஜமாஅத் அங்கத்தினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment