Friday, 30 April 2021
Thursday, 29 April 2021
Wednesday, 28 April 2021
Tuesday, 27 April 2021
மௌத் அறிவிப்பு 27.04.2021
கொடிக்கால்பாளையம் ஹாலா வீட்டு மர்ஹூம் G.செய்யது சாஹிப் அவர்களின் மருமகனும், மஞ்சக்கொல்லை V.N.அப்துல் வாஹிது அவர்களின் மகனும், S.அப்துல் ரஷீது மற்றும் S.அபூபக்கர் ஆகியோரின் மச்சானும், S.லியாகத் அலி, S.ஹசன் அப்துல் குத்தூஸ் மற்றும் S.ஷாகுல் ஹமீது ஆகியோர்களின் தகப்பனாரும், சென்னை K.முஹம்மது ரபீக் அவர்களின் மாமனாருமாகிய *V.N.A.ஷர்புதீன் அஹமது* அவர்கள் மேலத்தெருவில் மௌத்
. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
மௌத் அறிவிப்பு 27.04.2021
நமதூர் வடக்கு தெரு தாடி வீட்டு மர்ஹூம்V.M.அப்துல் மஜீத் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.O.P.M.பக்கீர் முஹம்மது அவர்களின் மருமகனும் V.M.A.ஹாஜா மைதீன், மர்ஹூம்.V.M.A தாஜூதீன் இவர்களின் சகோதரரும் S.ஹாஜா குத்புதீன் அவர்களின் மாமனாரும் அ.முஹம்மது ரிபாவுதீன் அவர்களின் தகப்பனாருமான *துரை என்கிற V.M.A.அன்வருதீன்* அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 26 April 2021
மௌத் அறிவிப்பு 26.04.2021
நமதூர் நடுத்தெரு மலுக்கன் வீட்டு ஹாஜி V.M .கமாலுதீன் அவர்களின் மனைவியும் ,K.சுல்தான் அப்துல் காதர், K.குத்புதீன், K.பிஸ்மில்லாஹ் ,K.ரஹ்மத்துல்லா இவர்களின் தாயாரும் A.யூசுப்தீன் அவர்களின் சகோதரியுமான ஹாஜியா ஜூனைதா பேகம் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Sunday, 25 April 2021
*வெளியூர் மௌத் அறிவிப்பு* 25.04.2021
நமதூர் கருத்துணி வீட்டு ஹாஜி. மு.முஹம்மது ஜெஹபர் அவர்களின் சம்மந்தரும் டாக்டர். மு.ஹாஜா அப்துல் நசீர் அவர்களின் மாமனாரும் S.நியாஸ் அஹமது அவர்களின் தகப்பனாருமான க.மெ.சேக் அலாவுதீன் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெருவில் மௌத்.
Saturday, 24 April 2021
*மௌத் அறிவிப்பு* 24.04.2021
நமதூர் தெற்கு தெரு பச்சைகிளி வீட்டு மர்ஹூம் A. முஹம்மது அபுசாலி அவர்களின் மகனாரும் மர்ஹூம் சி.ப.அ.முஹம்மது ஹாமீது அவர்களின் மருமகனும் ஹாஜா நஜ்புதீன், இதயத்துல்லா ,முஜிபுர் ரஹ்மான் இவர்களின் மச்சானும், அப்துல் பத்தாஹ் அவர்களின் சகோதரரும்,இப்ராஹிம் பஹத் அவர்களின் தகப்பனாருமாகிய செல்லத்தம்பி என்கிற செய்யது அமீருதீன் அவர்கள் வடக்கு தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் காலை 11 மணிக்கு நடைபெறும் .
Thursday, 22 April 2021
Wednesday, 21 April 2021
Tuesday, 20 April 2021
நமதூர் மௌத் அறிவிப்பு 20.04.2021
நமதூர் நடுத்தெரு மணப்பறையா வீட்டு மர்ஹூம் ஹாஜி அ.மீ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனாரும் , அடியக்கமங்கலம் A.தாஜூதீன், கட்டிமேடு H.நைனா முஹம்மது இவர்களின் மாமனாரும், E.நிஜாமுதீன், ஹாஜா தமீஜூதீன், ஷேக்யமானி இவர்களின் தகப்பனாரும் புதுமணைத்தெரு ஹாஜி A.M.ரபீயுத்தீன அவர்களின் மச்சானுமாகிய ஹாஜி அ.மீ.மு.முஹம்மது இலியாஸ் அவர்கள் நடுத்தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 11:30க்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 19 April 2021
Sunday, 18 April 2021
Saturday, 17 April 2021
Friday, 16 April 2021
Thursday, 15 April 2021
Wednesday, 14 April 2021
Tuesday, 13 April 2021
Sunday, 11 April 2021
Saturday, 10 April 2021
Thursday, 8 April 2021
நமதூர் மௌத் அறிவிப்பு 08/04/2021
நமதூர் மேலத் தெரு கப்பக்காரவீட்டு ஹாஜி K. S. M. அஹமது அவர்களின் தங்கச்சியும், கீழவீட்டு E. M. முஹம்மது ஜுபைர் அவர்களின் மனைவியும், E. M. ஜிப்ரில், E. M. அக்பர் இவர்களின் தாயாரும், ஆசாத் நகர் A. ஹபீப் ரஹ்மான் தெற்குத் தெரு செ.மு.முஹம்மது ஷாபி இவர்களின் மாமியாரும், M. ஆசிப் ஷாபி ஆசாத் நகர் H. பாசில் இவர்களின் பாட்டியாருமான ஹாஜியா E. M. மெஹருன்னிசா அவர்கள் இன்று 8/4/2021 வியாழன் காலை தெற்குத் தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 -மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசலபள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் செய்யப்படும்.
Wednesday, 7 April 2021
திருவாரூர் மாவட்டத்தில் 76.57 சதவீதம் வாக்குகள் பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் 76.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
Tuesday, 6 April 2021
Monday, 5 April 2021
Sunday, 4 April 2021
#தமிழ்நாடு தேர்தல்2021 |
தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே தந்துள்ள வாக்காளர் தகவல் சீட்டையும், இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 அடையாள ஆவணங்களில் எதையாவது ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, முக கவசம் அணிந்து, வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சமூக இடைவெளிக்கான வட்டம் வரையப்பட்டு இருக்கும். அந்த வட்டத்திற்குள் வந்து வரிசையில் நிற்க வேண்டும். உங்களுக்கான வாய்ப்பு வரும்போது உள்ளே செல்ல வேண்டும். அங்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள். எதிரே, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கான தேர்தல் முகவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அந்த தொகுதி மற்றும் வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் இருக்கும். முதல் அலுவலரிடம் உங்கள் பெயர், வார்டு எண் போன்ற வாக்காளர் தகவல் சீட்டில் தரப்பட்டிருந்த தகவல்களைக் கூற வேண்டும். அவர் அதை தன்னிடம் இருக்கும் பட்டியலுடன் சரிபார்ப்பார். உங்கள் பெயர் இருக்கும்பட்சத்தில் அதை சத்தமாக படிப்பார். அதை வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்ப்பார்கள். அதைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 ஆவணங்களில் ஒன்றை அளிக்க வேண்டும். உங்கள் பெயரை டிக் செய்துவிட்டு 2-ம் அலுவலரிடம் உங்களை முதல் அலுவலர் அனுப்பி வைப்பார். அங்குள்ள மேஜையில் உங்களின் இடது கையை வைக்க வேண்டும். அந்த அலுவலர் உங்களின் இடது கை ஆள்காட்டி விரலின் நகத்தையும், தோலையும் இணைத்து மை வைப்பார். அதை துடைக்கக் கூடாது. சில நொடிக்குள் நன்றாக காய்ந்துவிடும். பின்னர் உங்களிடம் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் ஆவணம் ஒன்றில் உங்களின் கையெழுத்தைப் பெறுவார். பின்னர் 3-ம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அந்த சீட்டை பெற்றுக்கொண்டு உங்களின் விரலில் மை இருப்பதை உறுதி செய்வார். கொரோனா பரவல் காலம் என்பதால் வலது கைக்கான கையுறையை அவர் வழங்குவார். அதை கையில் போட்டுக்கொண்டு 4-ம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் நீங்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு எந்திரத்தை தயார் செய்து வைப்பார். உடனே நீங்கள் அட்டைப்பெட்டிகளால் மறைக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தயார் நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரமும், அதன் அருகே விவிபேட் என்ற நீங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரமும் வைக்கப்பட்டு இருக்கும். உங்களுக்கு பிடித்தமான வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள நீல நிறை பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அதன் அருகே இருக்கும் சிவப்பு விளக்கு எரிவதோடு, நீண்ட பீப் சத்தமும் கேட்கும். அப்போது விவிபேட் எந்திரத்தின் கண்ணாடியாலான சிறிய திரையின் பின்புறம் ஒரு துண்டு தாள் அச்சாகி வரும். அதில் நீங்கள் ஓட்டளித்த சின்னம், எண், பெயர் காணப்படும். இது 7 விநாடிகள் நீடிக்கும். பின்னர் அது எந்திரத்திற்குள் விழுந்துவிடும். உங்கள் வாக்கு சரியான வேட்பாளருக்கு சென்று சேர்ந்ததை இதன் மூலம் உறுதி செய்யலாம்.
Saturday, 3 April 2021
Friday, 2 April 2021
#TNelections2021 | சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க. பாதுகாப்பு அரணாக விளங்கும் - அமைச்சர் காமராஜ் உறுதி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நன்னிலம் கடைவீதி, பஸ் நிலையம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் இரா.காமராஜ் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். நன்னிலம் பஸ் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தபோது அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் அமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து கொல்லுமாங்குடியில் இஸ்லாமிய மக்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. செய்துள்ள பணிகள் குறித்து பேசினார்.
Thursday, 1 April 2021
வெளியூர் மௌத் அறிவிப்பு 01.04.2021
நமதூர்மேலத்தெரு *ஹாலா* *வீட்டு* மர்ஹும் முஹம்மது அலி சாஹிப் அவர்களின் மகனாரும் மர்ஹும் தம்பி சாயபு என்கிற M.A.செய்யது முபாரக், மர்ஹும் M.A.ஹாஜா சாஹிப் ஆகியோரின் சகோதரருமான *M.A.தாஹா சாஹிப்* அவர்கள் நாகப்பட்டினம், நூல் கடைத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை 02/04/2021 காலை 8.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்.