Friday, 2 April 2021

#TNelections2021 | சிறுபான்மையினருக்கு அ.தி.மு.க. பாதுகாப்பு அரணாக விளங்கும் - அமைச்சர் காமராஜ் உறுதி


 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நன்னிலம் கடைவீதி, பஸ் நிலையம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் இரா.காமராஜ் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். நன்னிலம் பஸ் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தபோது அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் அமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து கொல்லுமாங்குடியில் இஸ்லாமிய மக்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்  சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. செய்துள்ள பணிகள் குறித்து பேசினார். 

No comments:

Post a Comment