இன்று புதன் கிழமை (18-02-2026) தமிழ்நாட்டில் பிறையை எப்படி பார்ப்பது ?
எந்த திசையில் ? எந்த நேரத்தில் பிறை தெரியும் ?
🎯 எப்போது பார்க்கலாம் (நேரம்) ?
தமிழ்நாட்டில் இன்று சூரியன் 6:15 PM முதல் 6:30 PM வரை மறைகின்றது. மாவட்டத்தை பொருத்து நேரம் மாறுபடும்.
உதாரணத்திற்கு சென்னையை எடுத்துக் கொள்வோம். சூரியன் மாலை 6:15 PM மணிக்கு மறைகின்றது. அதன் பின்னர் 50 நிமிடங்கள் கழித்து 7: 05 PM மணிக்கு சந்திரன் மறைகின்றது. எனவே 6: 30 PM முதல் 6: 55 PM வரை பிறை தெரிய வாய்ப்பிருக்கின்றது. தமிழ்நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும் அதிக பட்சம் ஒரு 15 நிமிடங்கள் கூட / குறைய இருக்கும்.
🎯 எங்கு, எப்படி பார்ப்பது (திசை) ?
மேற்கு (அல்லது கிப்லா) பக்கமாக பிறையை தேடவும். இந்த பதிவில் உள்ள படத்தை பார்க்கவும்.
⏰ மாலை 6: 30 PM மணிக்கு மேற்கு திசையில் (சற்று இடது பக்கமாக) அடிவானத்திற்கு சற்று மேலே பார்க்கும் போது ஒரு நட்சத்திரம் தெரியும், உண்மையில் அது நட்சத்திரம் இல்லை Venus வெள்ளி கிரகம்.
👉 சூரியன் மறையும் நேரத்தில் அடிவானத்தில் தெரியும் வெள்ளி கிரகத்தை (Venus) கணக்கு வைத்து கொள்ளுங்கள். அதற்கு சற்று நெருக்கமாக வலது புறத்தில் பிறையை தேடுங்கள். பிறையை பார்த்து விடலாம். இன்ஷா அல்லாஹ்
👉 சந்திரனுக்கு (பிறைக்கு) சற்று மேலே, புதன் கோளும் (Mercury) இருக்கும், அதையும் கணக்கு வைத்து கொண்டு சற்று கீழே (சற்று இடது பக்கமாக) பிறையை தேடுங்கள். பிறையை பார்த்து விடலாம். இன்ஷா அல்லாஹ்
🎯 உயரமான இடங்கள், வெட்டவெளி இடங்களில் இருந்து கவனமாக பார்ர்த்தால் பிறை தெரிய அதிக வாய்ப்பு உள்ளது. மேக மூட்டங்கள் இருந்தாலோ, அடர்த்தியாக வளி மண்டலம் இருந்தாலோ பிறையை கண்ணால் பார்ப்பதில் சிரமம் ஏற்படும். ஏனென்றால் 50 நிமிடம் மற்றும் 0.8 % ஒளிர்திறன் என்பது எளிதில் பார்க்க கூடிய வகையிலான அளவு அல்ல, கூர்ந்து கவனமாக பார்க்க வேண்டும்.
✍️ ஆக்கம் : S.சித்தீக் M.Tech
https://www.facebook.com/siddique.mtech/posts/pfbid02xFiyXosi8GQbyyZuRuodgsE6vBNKJY6CBb1DqD49MXAriWhCJQM8fnFqtmnTXdocl
No comments:
Post a Comment