*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களின் அறிக்கை......*
வல்ல இறைவனின் நல்லருள் நம் யாவருக்கும் உரித்தாகட்டும்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் மிக நேர்மையுடனும், எந்த நிர்பந்தங்கள் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குக் கொஞ்சமும் இடமளிக்காமலும், வக்பு சட்டப்படி பணிகளாற்றுவதில் எந்த சமரசம் காட்டாமலும், இறையச்சமிக்க
வாழ்வே மிக உயர்ந்தது என்ற உறுதிப்பாட்டுடனும் பணிகள் ஆற்றி வந்திருக்கிறோம்.
இந்த உறுதிப்பாட்டில் நிலைத்திருக்க பல சவால்களையும், விமர்சனங்களையும் சந்திக்கவேண்டும் என்பதும் யதார்த்தம். இது எல்லா தரப்பினருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான்.
ஆனாலும் சமூகப் பொறுப்புகளோடு ஆற்றிவரும் கடமைகளில் இன்னும் அதிக உழைப்பும், ஈடுபாடும், சமுதாய நலன் சார்ந்த அந்த அர்ப்பணிப்பு பணி அவசியத்தேவை. அது காலத்தின் கட்டாயம் என்பதை ஆழ்ந்த கவனத்தில்கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையின் ஒப்புதலோடும், வழிகாட்டுதலோடும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு 19/08/2024 மாலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளேன்.
மிகச் சிறப்பான ஆட்சிக்குத் தனி அடையாளமாய்த் திகழும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பணிகளுக்கு என்றும் துணைநிற்போம்; மக்களுக்குப் பணிகளாற்றுவதில் சவால்களையும் தாண்டி சாதனைகள் புரிவோம்.
இன்ஷா அல்லாஹ்.
செவ்வனே பணிகளாற்ற ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கிய தமிழ்நாடு அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், மாண்புமிகு துறை அமைச்சர் மற்றும் வாரிய உறுப்பினர்களுக்கும், வாரிய அலுவலர்களுக்கும், பல்வேறு வக்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி.
எம். அப்துல் ரஹ்மான்
மாநில முதன்மை துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
No comments:
Post a Comment