Saturday, 31 August 2024
Friday, 30 August 2024
Thursday, 29 August 2024
Wednesday, 28 August 2024
Tuesday, 27 August 2024
Sunday, 25 August 2024
Saturday, 24 August 2024
Friday, 23 August 2024
Thursday, 22 August 2024
Wednesday, 21 August 2024
Tuesday, 20 August 2024
வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் ராஜினாமா
*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களின் அறிக்கை......*
வல்ல இறைவனின் நல்லருள் நம் யாவருக்கும் உரித்தாகட்டும்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் மிக நேர்மையுடனும், எந்த நிர்பந்தங்கள் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குக் கொஞ்சமும் இடமளிக்காமலும், வக்பு சட்டப்படி பணிகளாற்றுவதில் எந்த சமரசம் காட்டாமலும், இறையச்சமிக்க
வாழ்வே மிக உயர்ந்தது என்ற உறுதிப்பாட்டுடனும் பணிகள் ஆற்றி வந்திருக்கிறோம்.
இந்த உறுதிப்பாட்டில் நிலைத்திருக்க பல சவால்களையும், விமர்சனங்களையும் சந்திக்கவேண்டும் என்பதும் யதார்த்தம். இது எல்லா தரப்பினருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான்.
ஆனாலும் சமூகப் பொறுப்புகளோடு ஆற்றிவரும் கடமைகளில் இன்னும் அதிக உழைப்பும், ஈடுபாடும், சமுதாய நலன் சார்ந்த அந்த அர்ப்பணிப்பு பணி அவசியத்தேவை. அது காலத்தின் கட்டாயம் என்பதை ஆழ்ந்த கவனத்தில்கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையின் ஒப்புதலோடும், வழிகாட்டுதலோடும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு 19/08/2024 மாலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளேன்.
மிகச் சிறப்பான ஆட்சிக்குத் தனி அடையாளமாய்த் திகழும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பணிகளுக்கு என்றும் துணைநிற்போம்; மக்களுக்குப் பணிகளாற்றுவதில் சவால்களையும் தாண்டி சாதனைகள் புரிவோம்.
இன்ஷா அல்லாஹ்.
செவ்வனே பணிகளாற்ற ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கிய தமிழ்நாடு அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், மாண்புமிகு துறை அமைச்சர் மற்றும் வாரிய உறுப்பினர்களுக்கும், வாரிய அலுவலர்களுக்கும், பல்வேறு வக்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி.
எம். அப்துல் ரஹ்மான்
மாநில முதன்மை துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
Monday, 19 August 2024
Sunday, 18 August 2024
Saturday, 17 August 2024
வெளியூர் மௌத் அறிவிப்பு
17.08.2024 சனிக்கிழமை
கொடிக்கால் பாளையம், நடுத்தெரு, மர்ஹும் யெ.மா.அப்துல் முஹம்மது அவர்களின் மருமகனும், யெ.மா.அ.அகமது ஹுசைன் அவர்களின் மச்சானும், அடியக்கமங்கலம் ‘காட்டுராஜா’ என்கிற (மர்ஹூம்) பகுருதீன், ஜவாஹிருதீன் இவர்களின் சகோதரரும், M.முஹம்மது மஹ்சூம் அவர்களின் தகப்பனாருமான *முஹம்மது கமால்தீன்* அவர்கள் அடியக்கமங்கலம்,ஹைஸ்கூல் ரோடு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா காலை 11 மணிக்கு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
Friday, 16 August 2024
மௌத் அறிவிப்பு
16.08.2024
#கொடிக்கால்பாளையம் பள்ளிக்கூட தெரு மர்ஹும் அப்துல் ரஷீத் அவர்களின் மகனும் அஜ்மல்ஷா அவர்களின் தகப்பனாரும் ஆலிம்சா வீட்டு மர்ஹும் செய்யது ஜெகபர் அவர்களின் மருமகனும் சிராஜுதீன்,
மஹபூப்அலி ஆகியோர்களின் மச்சானுமாகிய சபீர் அஹமது அவர்கள் தனது இல்லத்தில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
Thursday, 15 August 2024
Wednesday, 14 August 2024
Tuesday, 13 August 2024
மௌத் அறிவிப்பு
13.08.2024
நமதூர் காட்டுப்பள்ளி தெரு மர்ஹும் அப்துல் ஜெமீல் அவர்களின் மகனும் முஹம்மது நத்தர் அப்பா அவர்களின் சகோதருமான ஷேக் அலாவுதீன் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.