Monday, 20 January 2020

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விடவில்லை - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து சென்னை குடிமக்கள் மன்றம் சார்பில் தியாகாராய நகரில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விடவில்லை என்று கூறினார். மேலும் இது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது, விரிவான பதில் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய அவர், இந்திய குடியுரிமை பெற விரும்பும் நபர்களுக்கு அதற்கான அடிப்படை தகுகுதிகள் இருக்கும் பட்சத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment