Thursday, 25 July 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 25.07.2019

☪ KOM NEWS ONLY 🕌

நமதூர் மௌத் அறிவிப்பு

நமதூர் புதுமனைத்தெரு ஹாஸ்பாவா வீட்டு ஹாஜா மைதீன் அவர்களின் மாமானாரும் கல்ஃபான் அவர்களின் பாட்டானாருமான காட்டுப்பள்ளி தெரு ஹனிபா அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு மேலத்தெரு வில் நல்லடக்கம் செய்யப்படும்.

25.07.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Tuesday, 23 July 2019

கர்நாடக அரசு கவிந்தது .குமாரசாமி ராஜினாமா

14 மாத கால காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள அரசு கவிழ்ந்தது. முதலமைச்சர் குமாரசாமி முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

Sunday, 21 July 2019

நமதூர் நிக்காஹ் தகவல் 21.07.2019


Kodikkalpalayam - தமுமுக மற்றும் கார்டியன் பார்மஸி இணைந்து நடத்திய மருத்துவ முகாம்









திருவாரூர்  கொடிக்கால்பாளையம் நகரம்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னோற்ற கழகம் மற்றும் திருவாரூர் கார்டியன் பார்மஸி இணைந்து சிறப்பு இலவச அறுவைசிகிச்சை மற்றும் புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம் கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் பொது மற்றும் லேப்ரோஸ்கோப் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜின்ரீவ் டேனியல் மற்றும் புற்றுநோய் சிறப்பு நிபுணர் மருந்துவர் துளசிராமன் இருவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இதில் தமுமுக மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ,முஹ்யித்தீன்  ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம், நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன், நகர செயலாளர் பாஷா , கார்டியன் பார்மஸி முஹம்மது இத்ரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

Tuesday, 16 July 2019

சந்திர கிரகணம்

 : பூரண சந்திர கிரகணம், இன்று நிகழ்கிறது. இதை, இந்தியாவில், வெறும் கண்ணால் பார்க்க முடியும்.சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது. 


அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிகிறது.சந்திர கிரகணத்தன்று, தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும், ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே, சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பின், மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

Friday, 5 July 2019

நமதூர் மௌத் அறிவிப்பு* 5.7.2019

☪ KOM NEWS ONLY🕌

 *

நமதூர் காட்டுப்பள்ளி தெரு பின்னசலா வீட்டு மர்ஹூம் கீ.கா. மு. அப்துல் மஜீத் அவர்களின் மகனாரும் ,சேக் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமான கீ.கா.மு.அ.செய்யது முஹம்மது அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்.

அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

05.07.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Thursday, 4 July 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 4.7.2019

அடியக்கமங்கலம் ‘அச்சக்கரையார் வீட்டு’ அபான் என்கிற மர்ஹூம். பாவாகனி அவர்களின் இளைய மகனும், ஜனாப். நஜீர் அவர்களின் சகோதரருமான  “நவாஸ்தீன்” அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

இன்ஷாஅல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.