திருவாரூர் BSNL வாடிக்கையாளர் சேவை...
=========================================
கிட்டத்தட்ட BSNL அகன்ற கற்றை (பிராட் பேண்ட்) இணைய இணைப்பை குறைந்தது பத்து வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருபவர்களின் நானும் ஒருவன், சென்னையில் என் வீட்டில் ஏர்டெல் அகன்ற கற்றை இணைப்பு உள்ளது கடந்த மூன்று வருடங்களாக இதுவரை ஒரு இணைப்பு பழுது வந்து நானறியேன். இணைப்பு வேகமும் பன்மடங்கு அதிகம்.
திருவாரூர் வீட்டில் உள்ள இணைப்பு ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு முறை பழுதாகி விடும். திருவாரூர் BSNL அலுவலகத்தில் இருந்து மாதம் மூன்று அல்லது நான்கு முறை வந்து பார்ப்பார்கள். பார்த்து விட்டு அவர்கள் சொல்லும் பதில்கள்/நிவாரணங்களின் தொகுப்பு இது..
1. ஸார்...ADSL ஸ்ப்ளிட்டர் சரியில்ல மாத்திடுங்க..இதனை குறைந்த பட்சம் ஒரு 50 முறை கேட்டிருக்கிறேன்.
2. லைன் கிடைக்குதா..அப்படீன்னா இண்டர்நெட்ல ஒண்ணும் பிரச்சனை இருக்காதே..?
3. ஸார்..இது JE தான் பார்க்கணும்..கூட்டிட்டு வரேன்.
4. ஸார்..ஒயர் பழசு..மாத்திடுவோம்.. (எப்ப பன்னுவீங்க..தெரியாது ஸார்..இந்த வாரத்துல முடிச்சுடுவோம்)
5. JE போன் பண்ணி : ஹலோ 240232 ங்களா..ஆமா ஸார்..லைன் கிடைக்குதா..(நான் ஒரு பதில் சொல்ல)..ஒகே..ஸார்..ஒகே ஸார் பாத்துடுவோம் (எப்போ தெரியாது..?)
6. மோடம் பால்ட்டுன்னு நினைக்கிறேன். நான் - ஸார் மோடம் புதுசு..அப்படியா..ஆபீஸ்ல செக் பண்ணிட்டு சொல்றேன்.
7. மாதம் ஒரு லைன் மேன் மாறுவார்கள்..அவர்களின் திரும்ப முதல்ல இருந்து நாம சொல்லணும். அவங்க எந்த லைன் அதிக புகார்கள் வருகிறது என்றெல்லாம் படித்து தெரிந்து கொள்ள மாட்டார்கள் போல அவ்வளவு செய்யும் பணியில் பொறுப்புணர்வு.
இவர்கள் எவருக்கும் நான் கணினிப் பொறியாளன் என்பதோ அல்லது கணினி நெட்வொர்க் பற்றி எனக்கும் நன்கு தெரியும் என்பதோ தெரிய வாய்ப்பில்லை. அது ஓர் புறம் இருக்க இவர்களின் கணினி நெட்வொர்க் குறித்த அறிவே என்னை வியப்பில் ஆழ்த்துகிறது, ஒரு பிரச்சனைக்கு முடிவே தேடாமல். ஒரு வாடிக்கையாளர் மாதம் மூன்று அல்லது நான்கு புகார்கள் அளிக்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 36 புகார்கள். தொடர்ந்து நான்காண்டுகள் என்றால் 164 முறை புகார் வந்தும் தற்காலிகத் தீர்வை நோக்கியே வாடிக்கையாளரை தள்ளும் ஓர் நிறுவனம் எப்படி முன்னேற முடியும்.
இவர்களுக்கு வாடிக்கையாளர் குறித்தோ, அவரின் புகார் குறித்தோ அதன் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளின் back log என்றாவது இந்த JE க்கள் ஆராய்ந்தது உண்டா..KEDB என்று சொல்வார்கள் எங்கள் பணியில் (Known Error Database) அது இருக்கிறதா இல்லையா..? ஒரு வாடிக்கையாளரின் புகார் தொடர் புகார்கள் குறித்த RCA ( Root Cause Analysis) செய்வார்களா..இவைகள் எல்லாம் ITIL பரிந்துரைக்கும் விதிமுறைகள். Service Delivery ல் இருக்கும் என் போன்றோருக்கு வேதம் பைபிள் குரான் எல்லாம் இவைகள். இவைகளில் இருந்து பிழன்றால் எங்களுக்கு வேலை இல்லை.
அவர்களுக்கு அதெல்லாம் இருக்காது என்றே கருதுகிறேன். ஏனெனில் யார் எப்படிப் போனால் என்ன அரசாங்க உத்தியோகம். அப்படியே இருக்கையை தேய்த்து விட்டு எழுந்து போய்விட வேண்டியது தான். திருவாரூரில் ஏர்டெல் பிராட்பேண்ட் போன்ற கம்பிவட இணைப்பு இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும். இதனை தலைமுழுகி விடலாம் என்று இருக்கிறேன்.
இவர்கள் திருந்த வாய்ப்பில்லை... (இந்தப் பதிவை இடும் இவ்வேளையிலும் என் திருவாரூர் வீட்டில் BSNL மீண்டும் பழுது..? என்று என் மகன் தெரிவிக்கிறான்.)
I'm tired of this guys. Really .

No comments:
Post a Comment