Saturday, 30 June 2018

சிங்கப்பூர் பாராட்டு விழா


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
      நமதூர் கத்தார் வாசிகள் குழு ஒருங்கினைபாளர் ஹாஜி E.M.ஜிப்ரில் மற்றும் நமதூர் பைத்துல்மால் கணக்காளர் வெ.ப.மு.அ.அபுபக்கர் இருவரையும் கவுரவிக்கும் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.இதில் பங்கேற்ற முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் M. ஜஹாங்கிர்,இந்திய முஸ்லிம் பேரவை ஜனாப் M. முஹம்மது கௌஸ் , பென்கூலன் பள்ளி துனை தலைவர் M.ரபீக் ஹாஜியார் மற்றும் நமதூர் அங்கத்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.













Friday, 29 June 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 29/06/2018

அடியக்கமங்கலம் ஜனாஸா அறிவிப்பு!

 நமதூர். தெற்கு தெரு சுண்டைக்காய் வீட்டு        மர்ஹூம் அப்துல் சமது அவர்களின் மகளாரும் அடியக்கமங்கலம் இராஜாத் தெரு ‘அச்சையம்மா வீட்டு’  E. N.A. நூருல் அக்தர் அவர்களின் மனைவி நூர் நிசா அவர்கள்  தனது இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 30/06/2018 சனிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறும்.

KEIAவின் கல்வி விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு விழா அழைப்பு





Thursday, 28 June 2018

நமதூர் நிக்காஹ் தகவல். 28/06/2018

நமதூர் தெற்கு தெரு சுல்தான் கபீர் அவர்களின் மகனார் யாசர் அரபாத் மணமகனுக்கும் மலாயத்தெரு  முஹம்மது ஹூசைன்                      அவர்களின் மகளார் பாஃஜிலா பானு மணமகளுக்கு நடைபெறும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1439 ஷவ்வால் பிறை13 (28/06/2018) வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

Wednesday, 27 June 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 27/06/2018

நமதூர் மேலத்தெரு தண்ணீர் குடத்தார்வீட்டு மர்ஹூம் அப்துல் ரஷீத் அவர்களின் சம்பந்தியும் மௌலா அபுபக்கர் சித்திக் அவர்களின் மாமியாருமான முத்துக்கனி என்கிற மஹபூபாபீவி அவர்கள் அடியக்கமங்கலம் பள்ளிக்கூடத்தெருவில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்.


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 28/06/2018 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு

Tuesday, 26 June 2018

திருவாரூர் BSNL அவலம்

திருவாரூர் BSNL வாடிக்கையாளர் சேவை...
=========================================
கிட்டத்தட்ட BSNL அகன்ற கற்றை (பிராட் பேண்ட்) இணைய இணைப்பை குறைந்தது பத்து வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருபவர்களின் நானும் ஒருவன், சென்னையில் என் வீட்டில் ஏர்டெல் அகன்ற கற்றை இணைப்பு  உள்ளது கடந்த மூன்று வருடங்களாக இதுவரை ஒரு இணைப்பு பழுது வந்து நானறியேன்.  இணைப்பு வேகமும் பன்மடங்கு அதிகம்.

திருவாரூர் வீட்டில் உள்ள இணைப்பு ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு முறை பழுதாகி விடும். திருவாரூர் BSNL அலுவலகத்தில் இருந்து மாதம் மூன்று அல்லது நான்கு முறை வந்து பார்ப்பார்கள். பார்த்து விட்டு அவர்கள் சொல்லும் பதில்கள்/நிவாரணங்களின் தொகுப்பு இது..

1. ஸார்...ADSL ஸ்ப்ளிட்டர் சரியில்ல மாத்திடுங்க..இதனை குறைந்த பட்சம் ஒரு 50 முறை கேட்டிருக்கிறேன்.
2. லைன் கிடைக்குதா..அப்படீன்னா இண்டர்நெட்ல ஒண்ணும் பிரச்சனை இருக்காதே..?
3. ஸார்..இது JE தான் பார்க்கணும்..கூட்டிட்டு வரேன்.
4. ஸார்..ஒயர் பழசு..மாத்திடுவோம்.. (எப்ப பன்னுவீங்க..தெரியாது ஸார்..இந்த வாரத்துல முடிச்சுடுவோம்)
5. JE போன் பண்ணி : ஹலோ 240232 ங்களா..ஆமா ஸார்..லைன் கிடைக்குதா..(நான் ஒரு பதில் சொல்ல)..ஒகே..ஸார்..ஒகே ஸார் பாத்துடுவோம் (எப்போ தெரியாது..?)
6. மோடம் பால்ட்டுன்னு நினைக்கிறேன். நான் - ஸார் மோடம் புதுசு..அப்படியா..ஆபீஸ்ல செக்  பண்ணிட்டு சொல்றேன்.
7. மாதம் ஒரு லைன் மேன் மாறுவார்கள்..அவர்களின் திரும்ப முதல்ல இருந்து நாம சொல்லணும். அவங்க எந்த லைன் அதிக புகார்கள் வருகிறது என்றெல்லாம் படித்து தெரிந்து கொள்ள மாட்டார்கள் போல அவ்வளவு செய்யும் பணியில் பொறுப்புணர்வு.

இவர்கள் எவருக்கும் நான் கணினிப் பொறியாளன் என்பதோ அல்லது கணினி நெட்வொர்க் பற்றி எனக்கும் நன்கு தெரியும் என்பதோ தெரிய வாய்ப்பில்லை. அது ஓர் புறம் இருக்க இவர்களின் கணினி நெட்வொர்க் குறித்த அறிவே என்னை வியப்பில் ஆழ்த்துகிறது, ஒரு பிரச்சனைக்கு முடிவே தேடாமல். ஒரு வாடிக்கையாளர் மாதம் மூன்று அல்லது நான்கு புகார்கள் அளிக்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 36 புகார்கள். தொடர்ந்து நான்காண்டுகள் என்றால் 164 முறை புகார் வந்தும் தற்காலிகத் தீர்வை நோக்கியே வாடிக்கையாளரை தள்ளும் ஓர் நிறுவனம் எப்படி முன்னேற முடியும்.

இவர்களுக்கு வாடிக்கையாளர் குறித்தோ, அவரின் புகார் குறித்தோ அதன் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளின் back log என்றாவது இந்த JE க்கள் ஆராய்ந்தது உண்டா..KEDB என்று சொல்வார்கள் எங்கள் பணியில் (Known Error Database) அது இருக்கிறதா இல்லையா..? ஒரு வாடிக்கையாளரின் புகார் தொடர் புகார்கள் குறித்த RCA  (  Root Cause Analysis) செய்வார்களா..இவைகள் எல்லாம் ITIL பரிந்துரைக்கும் விதிமுறைகள். Service Delivery ல் இருக்கும் என் போன்றோருக்கு வேதம் பைபிள் குரான் எல்லாம் இவைகள். இவைகளில் இருந்து பிழன்றால் எங்களுக்கு வேலை இல்லை.

அவர்களுக்கு அதெல்லாம் இருக்காது என்றே கருதுகிறேன். ஏனெனில் யார் எப்படிப் போனால் என்ன அரசாங்க உத்தியோகம். அப்படியே இருக்கையை தேய்த்து விட்டு எழுந்து போய்விட வேண்டியது தான். திருவாரூரில் ஏர்டெல் பிராட்பேண்ட் போன்ற கம்பிவட இணைப்பு இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும். இதனை தலைமுழுகி விடலாம் என்று இருக்கிறேன்.

இவர்கள் திருந்த வாய்ப்பில்லை... (இந்தப் பதிவை இடும் இவ்வேளையிலும் என் திருவாரூர் வீட்டில் BSNL மீண்டும் பழுது..? என்று என் மகன் தெரிவிக்கிறான்.)

I'm tired of this guys. Really .

Monday, 25 June 2018

நமதூர் நிக்காஹ் தகவல்கள் 25/06/2018

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!


Sunday, 24 June 2018

நமதூர் நிக்காஹ் தகவல்கள் 24/06/2018




மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

Wednesday, 20 June 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 20/06/2018

நமதூர் அப்துல் கலாம் நகர் மூக்குப்பொடி வீட்டு முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமியாரும் அடியக்கமங்கலம் இனயத்துல்லா அவர்களின் மனைவியும் ஜெஹபர் சாதிக் அவர்களின் தாயாருமான எஃகுசான் பீவி அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 21/06/2018 வியாழக்கிழமை காலை 10மணிக்கு

கொடிநகர் கத்தார் வாசி குழுவின் நன்கொடை


Monday, 18 June 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 18/06/2018

நமதூர் வடக்கு தெரு கடாக்கார வீட்டு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் அலி அக்பர் ,முஹம்மது ஹூசைன் ,நூருல் மஜீத் இவர்களின் தாயாரும் தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் ஹாஜா நஜிபுதீன் அவர்களின் மாமியாரும் ,முஹம்மது சலாவுதீன் அவர்களின் பாட்டியாருமான பேபி என்கிற நூருநிஷா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 19/06/2018 செவ்வாய் காலை 11 மணிக்கு

கொடிக்கால்பாளையம் ஆறு நோன்பு கஞ்சி