சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நெடுஞ்சாலை அருகே இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள அகரதிருநல்லூர் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் இடம் தேர்வு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னரும், அப்பகுதியில் மதுக்கடை கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.
இதை கண்டித்தும், புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று அகரதிருநல்லூர் கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அகரதிருநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திறக்க கூடாது
அகரதிருநல்லூரில் இதுவரை மதுக்கடை இல்லை. எனவே மதுக் கடையை புதிதாக திறக்க கூடாது. இதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment