Thursday, 27 April 2017

1,953 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, போட்டித் தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது


அதிமுகவில் திடீர் பரபரப்பு.. 28 எம்.எல்.ஏ.க்கள் ‘திடீர்’ ரகசிய ஆலோசனை


அ.தி.மு.க.வில் எஸ்.சி., எஸ்.டி ஆகிய தாழ்த்தப் பட்ட இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் உள்ளனர். இவர்களில் சோழவந்தான் மாணிக்கம், வாசுதேவநல்லூர் மனோகரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியில் உள்ளனர். மற்ற 30 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடியின் அ.தி.மு.க. அம்மா அணியில் உள்ளனர். 

தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ஆட்சி மற்றும் கட்சிப் பணிகளில் உரிய அங்கீகாரம் தரப்படவில்லை என்று ஆதங்கம் உருவாகியுள்ளது. எனவே அமைச்சரவை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் உரிய பிரதிநிதித்துவம் பெற தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விரும்பு கிறார்கள். 

இதற்காக அ.தி.மு.க.வில் உள்ள எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்துள்ளனர். அவர்களை பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. இரா.தமிழ் செல்வன் ஒருங்கிணைத்துள்ளார். 
அவர் தலைமையில் தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க் கள் அனைவரும் சென்னையில் உள்ள ஒட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் 28 எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஆனால் 10 எம்.எல்.ஏ.க்கள் தான் கலந்து கொண்டனர் என்று ஒருவர் தெரிவித்தார். இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்தனர். 

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒன்றாக இணையும் போது, அமைச்சரவை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில் இடம் பெற முக்கிய இனத்தை சேர்ந்தவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. 

தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 4-ல் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். ஆனால் அதற்கு ஏற்ப தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் இல்லை. 33 எஸ்.சி., எஸ்.டி. எம்.எல்.ஏ.க்களில் பெஞ்சமின், சரோஜா

Sunday, 23 April 2017

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பேசியதாவது:-

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 173 தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் சேர இந்த கல்வி ஆண்டில் 2,353 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் மாணவர்கள் சேர, www.dge.tn.gbv.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில்...

முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அலுவலகம் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் கட்டணம் இன்றி இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Tuesday, 18 April 2017

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நெடுஞ்சாலை அருகே இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள அகரதிருநல்லூர் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் இடம் தேர்வு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னரும், அப்பகுதியில் மதுக்கடை கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

இதை கண்டித்தும், புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று அகரதிருநல்லூர் கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அகரதிருநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திறக்க கூடாது

அகரதிருநல்லூரில் இதுவரை மதுக்கடை இல்லை. எனவே மதுக் கடையை புதிதாக திறக்க கூடாது. இதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர். 

Saturday, 15 April 2017

தமிழகத்தில் கண்டிப்பாக நீட் தேர்வு நடக்கும்: மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலகியிருந்தது. 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா கூறியதாவ்து:-

‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு இல்லை .தமிழகத்தில் நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு தமிழகத்தில் கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கபட்டு உள்ளது.

Friday, 14 April 2017

வருமான வரித்துறை புகாரில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த 7-ந் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் மீது வருமானவரித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறையினர் புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது, பெண் அதிகாரி உள்பட வருமானவரித்துறை அதிகாரிகள் மிரட்டப்பட்டதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை அழித்ததாகவும், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரித்துறை சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. சோதனையில் ஈடுபட்ட பெண் அதிகாரி ஒருவர் துன்புறுத்தப்பட்டது குறித்து அவரும் தனியாக ஒரு புகார் மனுவை காவல் ஆணையரிடம் கொடுத்து உள்ளார். புகாரின் பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. வருமான வரித்துறை புகாரில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுத்தரத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆதாரங்கள் அழிப்பு, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கிராம பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்


Friday, 7 April 2017

அறிவிப்பு

இன்ஷாஅல்லாஹ்

    நாளை புலிவலம் மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு

சென்னை பிரிஸ்டன் இண்டர்நேஷனல் கல்லூரியிலிருந்து வருகிறார்கள்.

காலை 9-30 to 4  வரை பாடத்திற்காண பயிற்சி தருகிறார்கள்.

மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரி
யில்  சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்கள்.
மற்றும் பிரிஸ்டன்  இன்டர்நேஷனல் கல்லூரியில்  B.A. அரபிக்  கரஸில் படிக்க விருப்பம் உள்ளவர்களும்
 நாளை புலிவலம் மர்லியா பெண்கள் அரபிக்கல்லூரிக்கு வருகைத்தரவும்.
---------------------------------
   குறிப்பு.

B.A. அரபிக்
சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும்.
புலிவலம்,
கொடிக்கால்பாளையம்,
அடியக்கமங்கலத்தில்  இருப்பவர்களுக்கு மட்டும்  இச்செய்தியை தெரியப்படுத்து
மாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, 5 April 2017

பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனையா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு


திருவாரூரில் கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவாரூர், 

திருவாரூரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாரூர் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் அலுவலர்கள் பாலுச்சாமி, அன்பழகன், விஜயகுமார், லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், முட்டை வாங்கும்போது விற்பனையாளர்களின் பேட்ச் எண், அனுப்பப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும். மேலும் முட்டையில் ஏதும் சந்தேகம் இருந்தால் உணவு பாதுகாப்பு துறை அலுவலக எண்ணிற்கும், உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

நடவடிக்கை

இந்த எண்கள் விவரங்கள் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் முட்டை எங்கும் விற்பனை செய்யப்படவில்லை. இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். இதனை மீறி விற்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.