Saturday, 27 February 2021

15வது சட்டமன்றத்தின் நிறைவு கூட்டத்தொடர் முடிந்தது.



 

#TNElections2021 | அஇஅதிமுக - பாஜக- பாமக கூட்டணி

#ThiruvarurMLA2021 | திருவாரூர் சட்டமன்ற தொகுதி |286 வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள்




திருவாரூர் மாவட்டத்தில் 286 வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் சாந்தா கூறினார்.
துணை வாக்குச்சாவடி மையங்கள்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1050-க்கு மேல் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 1,168 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 286 வாக்குச்சாவடி மையங்களில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். 
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியக்கோட்டி, உதவி கலெக்டர் அழகர்சாமி, தேர்தல் தாசில்தார் திருமால் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Saturday, 20 February 2021

*வெளியூர் மௌத் அறிவிப்பு.* 20.02.2021 

 நமதூர் தெற்கு தெரு. S.தாஜூதீன் அவர்களின் சகலர் S.M.அன்வர் அவர்கள் பொதக்குடி ஜிந்தாமந்தர் தெருவில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு பொதக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Friday, 19 February 2021

சிங்கப்பூர் மௌத் அறிவிப்பு

 *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்* 


 19/02/2021 


நமதூர் காயிதே மில்லத் தெரு மூங்குடியார் வீட்டு S உபயதுல்லா அவர்களின் மனைவியும் U முஹம்மது மர்ஜுக்,U ஜாஹிர் ஹூசைன் அவர்களின் தாயாரும் அப்துல் முனாஃப் அவர்களின் மாமியாரும் மில்லுகார வீட்டு மர்ஹும் குலாம் ரசூல்,ஹாஜா மெய்தீன் அவர்களின் சம்பந்தியுமான *ஹலிமா* *பீவி* அவர்கள் *சிங்கப்பூரில் மௌத்*


 அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்


. *நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்*