திருவாரூர் மாவட்டத்தில் 286 வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் சாந்தா கூறினார்.
துணை வாக்குச்சாவடி மையங்கள்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1050-க்கு மேல் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 1,168 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 286 வாக்குச்சாவடி மையங்களில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியக்கோட்டி, உதவி கலெக்டர் அழகர்சாமி, தேர்தல் தாசில்தார் திருமால் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment