திருவாரூர் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ,திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட காச நோய் மையம், திருவாரூர் மெடிக்கல் சென்டர் இணைந்து பொது மக்களுக்கு கண் இலவச பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம் சர்க்கரை காச நோய் மேலும் நுரையீரல்
புற்றுநோய் பெண்கள் நலம் சார்ந்த நோய்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேட் ஜெஹபர் சாதிக் தலைமையில் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் துவக்கிவைத்தார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பெனாசீர் ஜாஸ்மின், கஸ்தூரி மணி ராவ், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் ஜெஹபர் சேக் அலாவுதீன், ஜமாஅத் ஆடிட்டர் முஹம்மது சுல்தான், ஹாஜி தி இப்ராம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி நிஜாமுதீன்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முஹம்மது ஆதம், அடியக்கமங்கலம் ஜமாஅத் தலைவர் புருகானுதீன், உதவும் கரங்கள் முஹம்மது அப்துல் வஹாப்,தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சலீம் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment