திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் இனைந்து நடந்திய 1441 ம் இஸ்லாமிய வருடப்பிறப்பு விளக்க பொதுக்கூட்டம் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் சனிக்கிழமை காலையில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் நடைபெற்றது. அத்திகடை வாஹித் பாத்திமா அரபிக்கல்லூரி முதல்வர் பௌஜ் அப்துர் ரஹீம் இன்றைய இந்தியா என்ற தலைப்பிலும் சென்னை பாலவாக்கம் மஸ்ஜித் மஹ்முது இமாம் அபுபக்கர் ஆலிம் ஹிஜ்ரி படிப்பினை என்பது குறித்து சிறப்பு பேருரையை ஆற்றினார்.
இதில் முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ,அடியக்கமங்கலம், விஜயபுரம் ஆகிய பள்ளிவாசல்களின் இமாம்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் ஜமாஅத் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது இல்யாஸ் ஆலிம் ,பள்ளிவாசல் துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் ,பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் வந்து இருந்த இமாம்கள் ,ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்ச்சிகளை நமது பள்ளிவாசல் இமாம்கள் அப்துல் நாசர், முஹம்மது ஆஷிக் , உமர்ஆலிம் ஒருங்கினைத்து செய்தார்கள்.