இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு திருமணப்பதிவு சட்டத்தின் படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில்
திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் திருமண பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்யாதவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு என சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. திருமண பதிவை பதிவு செய்யாதவர்கள் திருமண சலுகைகள் பெற முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment