Sunday, 30 July 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 30/7/2017

நமதூர் நடுத்தெரு J..P ஜியாவூதீன் ,முஹம்மது ஜெகபர்,முஹம்மது ஷரீப் இவர்களின் சகோதரரும், நஜூபுதீன் மற்றும் பஷீர் அஹமது இவர்களின் மாமனாருமான முஹம்மது யூசுப் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நல்லடக்கம் நேரம்: 30/7/2017  இரவு 9 மணி
இடம்:முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
கொடிக்கால்பாளையம்.

Saturday, 29 July 2017

தேடப்படும் குற்றவாளியாக மத போதகர் ஜாகீர் நாயக் அறிவிப்பு

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் தங்கி இருந்த ஒரு ஓட்டலில் கடந்த 1–ந் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார்.இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அதையடுத்து, ஜாகீர் நாயக், கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர், இந்தியா திரும்பவில்லை
இந்நிலையில், ஜாகீர் நாயக் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதற்கு முந்தைய தினம், ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது.  வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகியவை ஜாகீர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

இதற்கிடையில், ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது; அதைத் தொடர்ந்து, அவரது சொத்துகளை முடக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 28 July 2017

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 28/7/2017

#ஜனாஸா_அறிவிப்பு பதிவு நாள் 27.07.17
#குவைத்

குவைத் ரவ்தா பகுதியில் பணிபுரிந்து வந்த திருவாரூர் மாவட்டம் காட்டூரை சேர்ந்த முஹம்மது ஹாரிஸ் (39) த/பெ ஷேக்தாவூத் அவர்கள் கடந்த 25/7/2017 அன்று மாரடைப்பால் காலமானார்.

ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முஹம்மது சித்திக் மற்றும் கொடிக்கால்பாலையம் சுல்தான் சிக்கந்தர் அவர்களும் செய்து முடித்தை தொடர்ந்து..

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 28/7/2017 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு குவைத் சுலைபிகாத் மையவாடியில் அடக்கம் செய்யப்படும். இயலுமான சகோதரர்கள் ஜனாஸாவில் கலந்து கொள்ளவும்.

Sunday, 23 July 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 23/7/2017


     நமதூர் வடக்கு தெரு நறியம் வீட்டு ஹஸன்குத்தூஸ் அவர்களின் மனைவியும். அஜ்மல்கான். அய்யூப்கான். அவர்களின் தாயாருமாகிய கமருன்நிஷா  மௌத்.
 அவர்களின் மறுமை வாழ்விற்க்காக துவா செய்யுங்கள்
23/7/2017 அன்று காலை 11 :30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 21 July 2017

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியிலும் 50 வருட சாதனையை மீரா குமார் உடைத்தார்

ஜனாதிபதி பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

பதிவான மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 69 ஆயிரத்து 358. இதில், ராம்நாத் கோவிந்த் 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று, எதிர்பார்த்தது போலவே அமோக வெற்றி பெற்றார். அவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 2,930 பேர் ஓட்டுப்போட்டு இருந்தனர். இவர்களில் 522 பேர் எம்.பி.க்கள் ஆவார்கள். ராம்நாத் கோவிந்த் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்தார்.
மீராகுமார் 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

அவருக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 1,844 பேர் ஓட்டுப் போட்டு இருந்தனர். இவர்களில் 225 பேர் எம்.பி.க்கள் ஆவார்கள்.

தோல்வியிலும் 50 வருட சாதனையை எதிர்க்கட்சிகள் தரப்பில் களமிறக்கப்பட்ட மீரா குமார் உடைத்து உள்ளார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இரண்டாவது இடத்தில் அதிகமான வாக்குகளை வாங்கியவர்கள் என்ற நிலையை எட்டிஉள்ளார். கடந்த 1967-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் தலைமை நீதிபதி கோகா சுப்பா ராவ், அனைத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தவர். போட்டியிட்டு ஜாகிர் ஹுசைனிடம் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் களமிறங்கி 3.63 லட்சம் வாக்குகளை பெற்று சாதனைப் படைத்தார். அதனை 50 வருடங்களுக்கு பின்னர் மீரா குமார் உடைத்து உள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் சுப்பா ராவின் இரண்டாவது சாதனையான 43 சதவித வாக்கு என்பது இன்றும் உடைக்க முடியாத வரலாறாக உள்ளது. இப்போது மீரா குமார் 34 சதவித வாக்குகளை பெற்று உள்ளார். பாரதீய ஜனதாவின் முதல் ஜனாதிபதி ஆகிஉள்ளார் ராம்நாத் கோவிந்த்.

Tuesday, 18 July 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 18/7/2017



நமதூர்  கொடிக்கால்பாளையம் (ஓடக்கரை)
தாஜ்பிராக்ஷா தெரு  ஐயனார் வீட்டு மர்ஹும் V. S. A. நெய்னா முஹம்மது  அவர்களின்  மனைவியும், N. ஷேக் அலாவுதீன், N. அப்துல் காதர், N. ஹாஜா, N. முஹம்மது உசேன்  இவர்களின் தாயாருமான  ராபியத்துல் பஜ்ரியா  அவர்கள்  இன்று  வபாத்தாகிவிட்டார்கள்.  "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்" அன்னாரின்  ஜனாஸா நாளை  இன்ஷாஅல்லாஹ்  நல்லடக்கம்  செய்யப்படும். மறைந்த  மர்ஹூமா அவர்களின்  பிழை  பாவங்கள் குற்றம் குறைகள்  யாவையும்  பொருத்து  இறைவா ! அவர்களை  மன்னித்து  அவர்களின்  கப்ரின் வேதனையை  லேசாக்கி  அவர்களின் இறப்பை ஏற்று  மறுமையில் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ்  எனும்  சுவர்க்கத்தில் இடமளித்து  அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக ! ஆமீன் ! அன்னாரின்  பிரிவால்  துயருறும்  அவர்களின்  குடும்பத்தார்களுக்கு  சபுர் எனும்  பொருமையை  தந்தருள்வாயாக ! என  துவாச்  செய்வோமாக !  ஆமீன் !
-----------------------------------------------------------------------------------



 )

Tuesday, 11 July 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: தமிழக மாட்டு வியாபாரிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த மே மாதம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிட்டது.
மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பல்வேறு தொண்டு நிறுவனத்தினரும், மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த நிலையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ‘தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்’ சார்பில் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொழில் பாதுகாப்பு உரிமை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசின் அறிவிக்கை எங்களுடைய தொழிலை ஆபத்துக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இது எங்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. இந்த புதிய அறிவிக்கை தனி மனித உரிமையை பறிக்கின்ற சட்டவிரோதமான செயல் மட்டுமின்றி, இந்திய அரசியல் அமைப்புக்கும் எதிரானது.
பொள்ளாச்சி மாட்டுச் சந்தை முக்கியமான மாட்டுச் சந்தையாகும். ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பதும், வாங்குவதும் பல்லாண்டுகளாக நடந்து வரும் நிலையில் அரசின் தடை விவசாயிகள், மாட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக சங்கத்தினர் கூறுகின்றனர். எனவே அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தங்களது முறையீட்டில் கோரியுள்ளனர்.

Monday, 10 July 2017

நகைக்கு பாலீஸ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன மோசடி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது


திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள காளியாகுடியை சேர்ந்தவர் வசந்தி (வயது 52). சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு வந்த 2 வாலிபர்கள் நகைக்கு பாலீஸ் போடுவதாக கூறி வசந்தியிடம் நகையை கேட்டுள்ளனர். இதற்கு அவர் தன்னுடைய 3¾ பவுன் சங்கிலியை பாலீஸ் போட கொடுத்துள்ளார். அப்போது வசந்தியின் மகன் செந்தில் வீட்டுக்கு வந்துள்ளார். பாலீஸ் போட்ட உடன் நகையின் எடையை செந்தில் சரிபார்த்த போது 3 பவுன் இருந்தது தெரியவந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பேரளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன்குமார்ராம் (22), பவன்குமார்ராம் (22) என்பதும், வசந்தியின் நகைக்கு பாலீஸ் போடுவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Sunday, 9 July 2017

வெளியூர் மௌத் அறிவிப்பு 9/7/2017

நமதூர் நடுத்தெரு க.செ.மு தாஜூதீன் அவர்களின் சம்மந்தரும் ,மா.மீ.மு.முஹம்மது சாதிக்,"மர்ஹும்" மா.மீ.மு. முஹம்மது மெய்தீன்,மா.மீ.மு.முஹம்மது சபியுல்லாஹ்,மா.மீ.மு.ஹைதர்அலி ஆகியோர்களின் தகப்பனாரும், S.M.T. அமீருதீன் அவர்களின் மாமனாருமான   மாசப்பா மா.மீ.முஹம்மது ஃபாருக் அவர்கள் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு (நாகை மெயின் ரோடு) தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!



 (09/07/2017)பிற்பகல் 3:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்ஷாஅல்லாஹ்!

Tuesday, 4 July 2017

திருமண பதிவை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் சட்ட கமிஷன் பரிந்துரை


இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.

இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு  திருமணப்பதிவு சட்டத்தின் படி  திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.  இந்த நிலையில் 
திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் திருமண பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்யாதவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு என சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. திருமண பதிவை பதிவு செய்யாதவர்கள் திருமண சலுகைகள் பெற முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.