Sunday, 10 December 2023
Friday, 8 December 2023
Thursday, 7 December 2023
Wednesday, 6 December 2023
வெளியூர் மௌத் அறிவிப்பு
06.12.2023
கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு மல்கம் வீட்டு பாட்ஷா என்கிற M.ஹாஜா ஹமீதுல்லா அவர்களின் மாமனாரும், திருவாரூர் விஜயபுரம் அம்மையப்னார் வீட்டு மர்ஹூம் K.P.M. ஜெஹபர் அவர்களின் மூத்த மகனாரூம் J.பஷீர் அஹமது, அலாவுதீன், J.குத்புதீன்,J. அஷ்ரப் அலி,J.ஹாஜா அன்சாரி இவர்களின் மூத்த சகோதரரும்,M.I. சாகுல் ஹமீது அவர்களின் தகப்பானாருமான J. முஹம்மது இக்பால் அவர்கள் விஜயபுரம் கொடிக்கால் தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Tuesday, 5 December 2023
Monday, 4 December 2023
Sunday, 3 December 2023
Saturday, 2 December 2023
KEIA கூட்டம்
நமது கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷனின் வருடாந்திர குடும்ப ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி ஏக வல்லோனின் திருநாட்டத்தினால் துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது. மதிய விருந்திற்கு பிறகு நமதூர் கூட்டம் J. முஹம்மது அலி அவர்களின் மகள் கிராஅத்துடன் தொடங்கியது. வரவேற்புரை முஹம்மது ரஸ்வி வழங்க, Dr. அப்துல்காதர் ஒரு சமூகமாக எவ்வாறு சமுதாயத்திற்கு நன்மைகள் செய்து இறைவனின் திருப்பொருத்தை பெறுவது என்று சிறப்புரையாற்றினார். தலைமையுரை தலைவர். சுபுஹத்துல்லாஹ் ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து சிறப்பித்த நமதூர் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் ஊர் உறவின் முறை ஜமாத் தலைவர் ஹலிக்குல் ஜமான் அவர்கள் சிறிய உரையோடு, முஹம்மது அலி அவர்கள் நமது அசோஷியேசனின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் பற்றிய உரையாற்றினார். பின்னர் கீழ்காணும் புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: S. சுபுஹத்துல்லாஹ்
து. தலைவர்: P. முனவர் ஜமான்
செயலாளர்: A. முஹம்மது இஸ்மாயில்
து. செயலாளர்: மக்பூல் அஹமது
பொருளாலர்: J. முஹம்மது அலி
து. பொருளாலர்: S. முஹம்மது யாஸின்
ஆடிட்டர்: A. ஹாஜா மொய்னுதீன்
நிர்வாக குழு உறுப்பினர்கள்
1. H. ஃபைரோஸ் கான்
2. M. ஷாகுல் ஹமீது
3. A. முஹம்மது யூசுஃப்
4. K. முஹம்மது முஹப்பத்
5. A. முஹம்மது ஷேக் அக்ரம்.
இறுதியாக G. முஹம்மது கஜ்ஜாலி அவர்களின் நன்றியுரையுடன் ஏக வல்லோனிடம் துஆவுடன் கூட்டம் மகிழ்ச்சியுடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துல்லில்லாஹ்.


