கொடிக்கால்பாளையம் பர்மா தெருவில் ஏறத்தாழ 45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸூஃபி மன்ஜில் மதரஸத்துல் காதிரிய்யா புதிய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று காலை ஸூஃபி மன்ஜில் கௌரவ தலைவர் தலைமை கலீபா ஹாஜி.K.M.A.முஹம்மது மெய்தீன் அவர்கள் தலைமையில் செயல் தலைவர் ப.மு.ஹபிபுல்லா , செயலாளர் M.R.சாதிக் அலி, பொருளாளர் லேனா சலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் பள்ளிவாசல் இமாம் அப்துல் சலாம் பாகவி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க துணைத் தலைவர் A.K.அலி அக்பர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இமாம் ஹாஜி அ. முஹம்மது நாசர் வாஹிதி அவர்கள் ஸூஃபி மன்ஜில் மதரஸத்துல் காதிரிய்யா கடந்து வந்த பாதையை பற்றியும் இனிமேல் செல்ல வேண்டியவை குறித்து உரையாற்றி துஆ செய்தார்கள்.
இந்த நிகழ்வில் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் முக்தார் உசேன், மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் நாட்டாண்மை ஜெய்னுல்லாபுதீன், தாஜ் பிராக் ஷா தைக்கால் மேனேஜிங் டிரஸ்டி முஹம்மது ஆதம், நகர்மன்ற உறுப்பினர்கள் ஷகீலா பானு,பெனாசிர் ஜாஸ்மின், மத்லபுல் கைராத் கல்வி நல குழும தலைவர் முஹம்மது அப்துல் காதர், கொடிக்கால்பாளையம் பைத்துல் மால் தலைவர் பஷீர் அஹமது,தமுமுக நகர செயலாளர் பாஷா மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், பிரதிநிதிகள், ஜமாஅத்தார்கள், பெண்கள் என கலந்து கொண்டனர்.
கூத்தாநல்லூர் ஜாஹிர் ஹூசைன் அவர்களின் ஸூஃபி ஹைடெக் பில்டர்ஸ் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளுகிறது.
No comments:
Post a Comment