Thursday, 11 March 2021

TNElection2021 | AC168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி

 






வரிசை எண்: 168

சிறப்புகள்: பண்டைய தமிழகத்தின் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.
கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிச்சோழன் மூவரும் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் திருவாரூர். திருவாரூரையும் தியாகராஜ சுவாமி கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது. காவிரி ஆற்றின் வளமான வண்டல் பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் 5 ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் திருவாரூர் தொகுதி 2-ஆவது இடத்தில் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: திருவாரூர் நகராட்சி முழுவதும் மட்டுமின்றி திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட 34 ஊராட்சிகள், கூத்தாநல்லூர் நகராட்சி முழுவதும், மன்னார்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளும், கோட்டூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளும், கொரடாச்சேரி பேரூராட்சி முழுவதும் மட்டுமின்றி இந்த ஒன்றியத்தில் 5 ஊராட்சிகள் தவிர மற்ற ஊராட்சிகள் அனைத்தும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
கிராம ஊராட்சிகள்: குடவாசல் வட்டம் (பகுதி): காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி.
வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுககுடி, விஸ்வநாதபுரம், பெருமாள் அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குன்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள்.
நீடாமங்கலம் வட்டம் (பகுதி): வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகை பேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள்.
வாக்காளர்கள்: ஆண்கள் - 1,36,740, பெண்கள் -  1,44,762 திருநங்கைகள் - 32 2,81,534  என மொத்தம்  பேர்.(பிப்ரவரி 2021)
மொத்த வாக்குச்சாவடிகள்: 303
இதுவரை எம்.எல்.ஏக்கள்....
1962 அம்பிகாபதி - காங்கிரஸ்
1967 தனுஷ்கோடி - மார்க்சிஸ்ட்
1971 தாழை மு. கருணாநிதி - திமுக
1977 தாழை மு. கருணாநிதி - திமுக
1980 எம். செல்லமுத்து - மார்க்சிஸ்ட்
1984 எம். செல்லமுத்து - மார்க்சிஸ்ட்
1989 வி. தம்புசாமி - மார்க்சிஸ்ட்
1991 வி. தம்புசாமி - மார்க்சிஸ்ட்
1996 ஏ. அசோகன் - திமுக
2001 ஏ. அசோகன் - திமுக
2006 உ. மதிவாணன் - திமுக
2011 மு. கருணாநிதி - திமுக
2016 மு.கருணாநிதி - திமுக
2019 பூண்டி கே.கலைவாணன் - திமுக (இடைத்தேர்தல்)
இத்தொகுதியில், 1962 முதல் 2019 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 8 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

No comments:

Post a Comment