Thursday, 25 March 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

நமதூர் அப்துல்கலாம் நகர் குட்டாவீட்டு மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும் ,முஹம்மது அபுபக்கர், முஹம்மது அப்துல்லா ,சுல்தான் அப்துல் காதர் ஆகியோர்களின் சகோதரரும் ஷாகுல்ஹமீது அவர்களின் தகப்பனாரும் தாஜூதீன் அவர்களின் மாமனாருமான அ.அஹமது அவர்கள் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

திருவாரூர் தொகுதியில் போட்டியில் உள்ள முக்கிய வேட்பாளர்





 

Wednesday, 24 March 2021

Tuesday, 23 March 2021

வக்பு வாரிய தலைவரும் எம்.பியுமான முஹம்மது ஜான் காலமானார்




 

வெளியூர் மௌத் அறிவிப்பு 23/03/2021





திருவாரூர் தெற்கு வீதி பிரபல ‘ஆடிட்டர்’டாக்டர். S.M.மிஸ்கீன் அவர்கள் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


 இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! 


 அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12:00 மணி வரை ராபியம்மாள் அஹ்மத் மெய்தீன் கல்லூரியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். 


பின்னர் கூத்தாநல்லூர் எடுத்துச்செல்லப்பட்டு இன்று (23/03/2021)இரவு 7 மணிக்குநல்லடக்கம் செய்யப்படும். 


Monday, 22 March 2021

#திருவாரூர் தொகுதியில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்


 168.திருவாரூர் சட்டமன்றதொகுதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல்*

 தேர்தல் நாள் 06.04.2021 செவ்வாய் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 

1.பூண்டி கே.கலைவாணன் திமுக உதயசூரியன் 

2.ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் அஇஅதிமுக இரட்டை இலை 

 3.கோமதி பிஎஸ்பி யானை 

 4. கபிலரசன் மநீம டார்ச்லைட் 

5.விநோதினி நாதக விவசாயி 

6.பன்னீர்செல்வம் அபாஇம தென்னைத்தோப்பு 

 7.தியாகராஜன் புதக தொலைக்காட்சி பெட்டி  

8.நசீமா பானு எஸ்டிபிஐ குக்கர் 


9.தியாகசுந்திரம் தநாஇக மோதிரம் 

10.அமானுல்லாஹ் சுயே கிரிக்கெட் மட்டை  

11.முஹம்மது ஹாலித் சுயே கிரிக்கெட் வீரர் 

12.முத்தரசன் சுயே மின்கம்பம் 

13.அன்பழகன் சுயே தொப்பி 

 14. யாருக்கும் வாக்களிக்க விரும்பம் இல்லை நோட்டா 

 ஆகியோர்கள் போட்டியிடுகிறார்கள் 

22.03.2021

Thursday, 18 March 2021

TNelection2021 |

 நமதூர் மௌத் அறிவிப்பு 18.03.2021 




நமதூர் மேலத்தெரு நானி வீட்டு மர்ஹூம் ப.மு.அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகளும் மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் ஆசியம்மாள் இவர்களின் மகளும் A.R.ஜாபர் அலி அவர்களின் மனைவியும் J.செய்யது யூசுப்தீன் மற்றும் செய்யது ஜபருதீன் ஆகியோர்களின் தாயாருமான சபுருன்னிசா அவர்கள் மலாயத்தெரு தனது இல்லத்தில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

Wednesday, 17 March 2021

 *நமதூர் மௌத் அறிவிப்பு* 17.03.2021 


நமதூர் காயிதேமில்லத் தெரு குளத்தகரையார் வீட்டு மர்ஹூம் K.S. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் S.A. சஹாபுதீன் ஆகியோரின் சகோதரரும் H.ஹூமாயூன் அவர்களின் தகப்பனாருமான S.A ஹசன் அலி அவர்கள் மௌத் .


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா நாளை 18/03/2021 காலை 11:00 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

தமிழ் நாடு தேர்தல்2021 | வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன

Thursday, 11 March 2021

TNElection2021 | AC168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி

 






வரிசை எண்: 168

சிறப்புகள்: பண்டைய தமிழகத்தின் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.
கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிச்சோழன் மூவரும் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் திருவாரூர். திருவாரூரையும் தியாகராஜ சுவாமி கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது. காவிரி ஆற்றின் வளமான வண்டல் பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் 5 ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் திருவாரூர் தொகுதி 2-ஆவது இடத்தில் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: திருவாரூர் நகராட்சி முழுவதும் மட்டுமின்றி திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட 34 ஊராட்சிகள், கூத்தாநல்லூர் நகராட்சி முழுவதும், மன்னார்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளும், கோட்டூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளும், கொரடாச்சேரி பேரூராட்சி முழுவதும் மட்டுமின்றி இந்த ஒன்றியத்தில் 5 ஊராட்சிகள் தவிர மற்ற ஊராட்சிகள் அனைத்தும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
கிராம ஊராட்சிகள்: குடவாசல் வட்டம் (பகுதி): காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி.
வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுககுடி, விஸ்வநாதபுரம், பெருமாள் அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குன்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள்.
நீடாமங்கலம் வட்டம் (பகுதி): வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகை பேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள்.
வாக்காளர்கள்: ஆண்கள் - 1,36,740, பெண்கள் -  1,44,762 திருநங்கைகள் - 32 2,81,534  என மொத்தம்  பேர்.(பிப்ரவரி 2021)
மொத்த வாக்குச்சாவடிகள்: 303
இதுவரை எம்.எல்.ஏக்கள்....
1962 அம்பிகாபதி - காங்கிரஸ்
1967 தனுஷ்கோடி - மார்க்சிஸ்ட்
1971 தாழை மு. கருணாநிதி - திமுக
1977 தாழை மு. கருணாநிதி - திமுக
1980 எம். செல்லமுத்து - மார்க்சிஸ்ட்
1984 எம். செல்லமுத்து - மார்க்சிஸ்ட்
1989 வி. தம்புசாமி - மார்க்சிஸ்ட்
1991 வி. தம்புசாமி - மார்க்சிஸ்ட்
1996 ஏ. அசோகன் - திமுக
2001 ஏ. அசோகன் - திமுக
2006 உ. மதிவாணன் - திமுக
2011 மு. கருணாநிதி - திமுக
2016 மு.கருணாநிதி - திமுக
2019 பூண்டி கே.கலைவாணன் - திமுக (இடைத்தேர்தல்)
இத்தொகுதியில், 1962 முதல் 2019 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 8 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இன்று ஷபே மிஃராஜ் இரவு

TNElections2021 | மமக,முஸ்லிம் லீக் ,போட்டி

#TNelections2021 | திருவாரூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் ANR பன்னீர்செல்வம் மீண்டும் போட்டி

 அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு


நன்னிலம் அமைச்சர் காமராஜ்

திருவாரூர் பன்னீர்செல்வம்

மன்னார்குடி  சிவா ராஜமாணிக்கம்

திருத்துறைப்பூண்டி தனி 

Friday, 5 March 2021

நமதூர் மௌத் அறிவிப்பு



நமதூர் ராமேகே ரோடு அப்துல் அஜிஸ் கார்டன் மர்ஹும் பாவாஜி என்கிற E.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும் S.தாஜுதீன், S.யூசுப்தீன் அவர்களின் தாயாரும் V.S.N.M.முஹம்மது யூசுப் அவர்களின் மாமியாருமாகிய (வா.சு.நெ.மு) ஹாஜியா *உம்மு சல்மா பீவி* அவர்கள் மௌத். 


 அன்னாரின் ஜனாசா  05/03/2021 வெள்ளிக்கிழமை காலை *10* மணிக்கு, மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும். 


 இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன். 

Monday, 1 March 2021

#Tnelections2021 | திமுக கூட்டணி யில் மமக 2 .முஸ்லிம் லீக் 3 தொகுதியில் போட்டி



 

நமதூர் மௌத் அறிவிப்பு தெற்கு தெரு சஹர்வான் பீவி

 



நமதூர் மௌத் அறிவிப்பு தெற்கு தெரு அமீருதீன்



நமதூர் தெற்குத்தெரு இறையான்குடியார் வீட்டு மர்ஹும். S.M.முகம்மது சுல்தான் அவர்களின் மகனாரும் , மர்ஹும். வெ.ப.மு.அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகப்பிள்ளையும்‌‌, M.ஹாஜா மெய்தீன், மர்ஹூம் M.முகம்மது சர்புதீன், M.முகம்மது இபுரஹிம் ஆகியோர்களின் சகோதரரும் B.செய்யது கஜ்ஜாலி J.அர்சத் ஃபர்வேஷ் ஆகியோரின் மாமனாரும் A.சுல்தானுல் ஆரிஃபின், A.ஃபாயிஸ் முஹ்சின் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய M.அமீருதீன்  அவர்கள் மௌத். 


 அன்னாரின் ஜனாசா இன்று மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.