Sunday, 28 February 2021
Saturday, 27 February 2021
#ThiruvarurMLA2021 | திருவாரூர் சட்டமன்ற தொகுதி |286 வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள்
Friday, 26 February 2021
Thursday, 25 February 2021
Wednesday, 24 February 2021
Tuesday, 23 February 2021
Monday, 22 February 2021
நமதூர் மௌத் அறிவிப்பு
22.02.2021
*நமதூர் சூபிநகர் தெற்குத் தெரு அப்துல் முத்தலீப் அவர்களின் மனைவி சம்சுல்ஹீதா அவர்கள் மெளத்.*
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
Sunday, 21 February 2021
Saturday, 20 February 2021
*வெளியூர் மௌத் அறிவிப்பு.* 20.02.2021
நமதூர் தெற்கு தெரு. S.தாஜூதீன் அவர்களின் சகலர் S.M.அன்வர் அவர்கள் பொதக்குடி ஜிந்தாமந்தர் தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு பொதக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Friday, 19 February 2021
சிங்கப்பூர் மௌத் அறிவிப்பு
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
19/02/2021
நமதூர் காயிதே மில்லத் தெரு மூங்குடியார் வீட்டு S உபயதுல்லா அவர்களின் மனைவியும் U முஹம்மது மர்ஜுக்,U ஜாஹிர் ஹூசைன் அவர்களின் தாயாரும் அப்துல் முனாஃப் அவர்களின் மாமியாரும் மில்லுகார வீட்டு மர்ஹும் குலாம் ரசூல்,ஹாஜா மெய்தீன் அவர்களின் சம்பந்தியுமான *ஹலிமா* *பீவி* அவர்கள் *சிங்கப்பூரில் மௌத்*
அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்
. *நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்*
கொடிக்கால்பாளையம் ஹாஜா பாவா கஞ்சி
இன்ஷாஅல்லாஹ் (19/02/2021) இன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு நமதூர் ஹாஸ்பாவா தர்ஹாவில் ஆஜ்மீர் ஹாஜா மெய்னுதீன் சிஸ்டி அவர்களின் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைப்பெறும்.
வெளியூர் மௌத் அறிவிப்பு 19.02.2021
நமதூர் பள்ளிவாசல் தெரு கறிவேப்பிலை வீட்டு M.M.அப்துல் ரஷீத் அவர்களின் சகலரும் சி.ப.அ.மு.ஹாஜா நஜ்புதீன் அவர்களின் சம்மந்தரும் அ.சேக் தமீம் அன்சாரி ,அ.சேக் சம்சுதீன் இவர்களின் தகப்பனருமான அ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆழியூர் வடக்கு தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 18 February 2021
Wednesday, 17 February 2021
Tuesday, 16 February 2021
Monday, 15 February 2021
Sunday, 14 February 2021
வெளியூர் மௌத் அறிவிப்பு
*வெளியூர் ஜனாஸா அறிவிப்பு......* நமதூர் ராமகே ரோடு செய்யது ஜெகபர் சாதிக் அவர்களின் சகோதரியும் அடியக்கமங்கலம் நடுத்தெரு (மர்ஹும்)அணிப்பிள்ளை வீட்டு ஜப்பார் அவர்களின் மனைவியும், ஹாஜா நஜ்முதீன் அவர்களின் தாயாரும், ஹாஜா ஷேக்அலாவுதீன்,முஹம்மது யூசுஃப்,கௌது ஹமீது ஆகியோர்களின் மாமியும், அமீர்அலி, அன்வர்அலி ஆகியோர்களின் சகோதரியுமான மெஹருன்னிசா அவர்கள் ரஹ்மானியாத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
அன்னாரின் ஜனாஸா இன்று(14/02/2021) இரவு 7:00 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
நமதூர் மௌத் அறிவிப்பு
*நமதூர் மௌத் அறிவிப்பு* 14/02/2021 நமதூர் பர்மாத்தெரு M.அபுசாலி அவர்களின் மாமியாரும், M.ஷேக் அப்துல்காதர் அவர்களின் கொழந்தியாவும், வயல் வீடு M.H.மெஹபூப் அலி அவர்களின் சிறிய தாயாரும், M.இம்ரான் அவர்களின் சிறிய பாட்டியாவும், கொல்லாப்புரம் மர்ஹும் A.செய்யது முபாரக் அவர்களின் மனைவியுமாகிய *S.M.சல்மா நாச்சியா* அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை *3:30* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
#TNelections2021 : பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை| மெட்ரோ ரயில் திறந்து வைத்தார்
சென்னை
பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயில் பகுதி 1 விரிவாக்கம் திறந்து வைத்தார்
Saturday, 13 February 2021
தமிழக அரசின் "1100" சேவை எண் திட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, “முதல்- அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டத்தை” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
Friday, 12 February 2021
Thursday, 11 February 2021
Wednesday, 10 February 2021
Tuesday, 9 February 2021
Monday, 8 February 2021
Sunday, 7 February 2021
Saturday, 6 February 2021
நமதூர் மௌத் அறிவிப்பு 06.02.2021
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் OPM பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும். A P ஜெஹபர்அலி. மர்ஹூம் கா செ மு செய்யது அஹமது. V M A அன்வர் தீன் ஆகியோரின் மாமியாரும் செல்லதுரை என்கிற சேக் அலாவுதீன். செய்யது அபுதாஹீர. முஹம்மது நத்தர் ஆகியோரின் தாயாருமாகிய ரெஜினா பீவி அவர்கள் நடுத்தெருவில் வபாத்தாய்விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மதியம்1:30 மணிக்கு நடைபெறும்.
நமதூர் நிக்காஹ் தகவல் 07.02.2021
நமதூர் ராமகே ரோடு அல்ஹாஜ் S.முஹம்மது ஜபருல்லாஹ் அவர்களின் மகனார் M.J.அஜ்மல் கான் மணமகனுக்கு திருவாரூர் விஜயபுரம் காந்தி சாலை ஹாஜி.S.முஹம்மது ஹனிபா அவர்களின் மகளார் M.மெகராஜ் நிஷா மணமகளுக்கு நிக்காஹ் உடன்படிக்கை இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1442 ம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் பிறை 24 (07.02.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு திருவாரூர் பை பாஸ் ரோடு மல்லிகா மஹால் திருமண அரங்கத்தில் நடைப்பெற உள்ளது.
மணமக்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) வாழ்த்திய துஆ
பாரக்கல்லாஹு ல(க்)க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.
Friday, 5 February 2021
நமதூர் மௌத் அறிவிப்பு 06.02.2021
நமதூர் நடுத்தெரு வெற்றிலைக்காரவீட்டு மர்ஹூம் S.அப்துல் ரெஜாக் அவர்களின் மகளாரும் மர்ஹூம் S.அமானுல்லா அவர்களின் மனைவியும்மான ஜன்னத்துன்னிஸா அவர்கள் நடுத்தெரு ஜலீல் காலனியில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா 6.2.2021 சனிக்கிழமை காலை 11:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
திருவாரூர் : ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
உலக தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைவலாம் அவர்கள் பற்றிய அவதூறு பரப்பியவர்களை கண்டித்து திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Thursday, 4 February 2021
மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திருவாரூர் கீழவீதியிலிருந்து புறப்பட்டு புதிய ரயில் நிலையம் சென்றடையும். இதில் நமதூர் பெண்கள் மற்றும் முதியவர்கள் கலந்து கொள்ள வசதியாக நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலிருந்து மாலை 3 மணி முதல் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
Wednesday, 3 February 2021
நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்*
*தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய அச்சங்கள் தொடர்பான உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு பதில் அளித்து உள்ளது. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு, தேசிய மக்கள்தொகை பதிவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மக்களிடையே இருந்த மிகுந்த அதிருப்தியும், அச்சமும் இருப்பதை சுட்டிக்காட்டியது. தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி ) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பல மாநிலங்கள் தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) பயிற்சியை செயல்படுத்தப்போவதில்லை என்று கூறியிருந்தன. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து தனிநபர் தகவல்களும் ரகசியமானவை. மக்கள் தொகை கணக்கெடுப்பில், பல்வேறு நிர்வாக மட்டங்களில் ஒருங்கிணைந்த தரவு மட்டுமே வெளியிடப்படுகிறது. முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 ஐ வெற்றிகரமாக நடத்துவதற்கும் நிறைவு செய்வதற்கும் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த பரந்த விளம்பர நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனையில் தேசிய மக்கள்தொகை பதிவு உடன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கேள்வித்தாள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை உருவாக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது அரசு பல் வேறு நேரங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவில் சரியான மற்றும் தெளிவான செய்தியைத் தொடர்புகொள்வதற்கான 360 டிகிரி அணுகுமுறை பின்பற்ற அரசு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஐ சுற்றியுள்ள தவறான தகவல்தொடர்பு மற்றும் வதந்திகளைச் சமாளிக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மக்கள்தொகை பதிவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஐ சுற்றியுள்ள தவறான தகவல்தொடர்பு மற்றும் வதந்திகளைச் சமாளிக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும், கொரோனா தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இன் முதல் கட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவு புதுப்பித்தல் மற்றும் பிற தொடர்புடைய கள நடவடிக்கைகள் அடுத்த உத்தரவுகள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
Tuesday, 2 February 2021
#பட்ஜெட்2021 :மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல்
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 01.02.2021 அறிவித்த பட்ஜெடின் முக்கிய அம்சங்களில் சில வருமாறு:
• சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும். • மதுரையில் தொழில் வழித்தடம். • தமிழகத்தில் 3,500 கி.மீ. புதிய சாலை அமைக்கப்படும். • தமிழக சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி. • தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா. • மதுரை டூ கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை. • சென்னை , கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். • வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். • உள்கட்டமைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி. • புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும். • கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் நிதி. • பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகம் • சுயசார்பு இந்தியா : ரூ.27 லட்சம் கோடிக்கு புதிய திட்டங்கள். • சுகாதார துறைக்கு ரூ. 2.23. லட்சம் கோடி நிதி. • மேலும் 2 கொரோனா மருந்து வரவுள்ளது. • காகிதமில்லா பட்ஜெட்டால் ரூ.140 கோடி மிச்சம். • தேசிய மொழி பெயர்ப்பு திட்டம் உருவாகும். • புதிதாக 100 சைனிக் பள்ளிகள் திறக்கப்படும். • எல்.ஐ.சி., ஏர்இந்தியா, நிறுவன பங்குகள் விற்க முடிவு. • சூரிய சக்தி கழகத்திற்கு ரூ.ஆயிரம் கோடி நிதி. • அரசு வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. • இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதமாக உயர்வு. • மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு. • வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. • தங்கம் இறக்குமதி வரி குறைப்பு. • குறைந்தவிலை வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை. • என்.ஆர்.ஐ., களுக்கு இரட்டை வரி விதிப்பு ரத்து. • வருமான வரியில் மூத்த குடிமக்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டும் நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். • தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படும் (ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம்). தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். • ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும். • நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும். • காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு • கொரோனா தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது. • சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. • காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. 20 ஆண்டுகளான இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம். • ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம். • முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு. • தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. • மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. • இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். • அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும். • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 1,18,101 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம். இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும். • நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். • 139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. • முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. • பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும். • வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். • உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது. • காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது. • நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது. • நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளவும், குறைகளைத் தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. • கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. • எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன. • மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம். • அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும். • விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது. • வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. • நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். • வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு. • வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன. • தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. • வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி • அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது. • கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. • அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது. • மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள். • அடுத்த 6 ஆண்டுகளில் பட்டியலின மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • பட்டியலின மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம். • தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு. • இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது. • 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது. • ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும். • தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. • தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். • நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. • வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. • 2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம். • வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம். • நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம். • 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். • பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது. • மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. • தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம். • கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். • வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும். • புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது. • பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம். • பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு • உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு #Budget2021