21.07.2024
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்தின் தற்போதைய நிர்வாகத்தின் பொறுப்பு காலம் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1446 ரபீவுல் ஆகிர் பிறை 11அன்றுடன் நிறைவடைகிறது.
இதற்கான புதிய நிர்வாக சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்வு செய்ய ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் இன்று ஜமாஅத் தலைவர் ஹாஜி கா.மெ.மு.அ.முகம்மது ஜபரூதீன் அவர்கள் தலைமையில் மஃஸூம் மஹாலில் நடைப்பெற்றது.
இதில் தேர்தல் அதிகாரிகளாக கீழ் காணும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
1.ஜனாப். ப.மு.ஹபிபுல்லாஹ்
(நடுத்தெரு)
2.ஹாஜி V.S.N.M முஹம்மது இஸ்மாயில்
(ஆசாத்நகர்)
3.ஜனாப் B.முஹம்மது கஜ்ஜாலி (புதுமனைத்தெரு)
இதில் ஏராளமான ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment