Friday, 29 September 2023
Thursday, 28 September 2023
Tuesday, 26 September 2023
Monday, 25 September 2023
Saturday, 23 September 2023
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - திருவாரூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருவாரூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் ஹோட்டல் காசிஸ் இன் கூட்ட அரங்கில் இன்று (23-08-2023) காலை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை வரவேற்புரை ஆற்றினார்.
மண்டல பொறுப்பாளரும், மாநில செயலாளருமான ஆடுதுறை ஷாஜஹான் பங்கேற்று கூட்டத்தின் நோக்கம், உறுப்பினர் சேர்க்கை, புதிய நிர்வாகிகள் தேர்வு பற்றி விளக்கி உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பார்கள் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அமீர் நூருல்லாஹ், இளைஞரணி மாநில பொருளாளர் அபுபாரிஸ், நாகூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஷாஹா மாலிம் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், திருவாரூர், விஜயபுரம், கொடிக்கால் பாளையம், அத்திக்கடை, பொதக்குடி, புலிவளம், நெடுங்குளம், தண்ணீர் குன்னம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பிரைமரி நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் மாவட்ட பொதுக்குழுவை கூட்டி அங்கீகாரம் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
*மாவட்ட தலைவர் :*
V.S.N முஹம்மது ஆதம், கொடிக்கால் பாளையம்
*கௌரவ தலைவர்:*
A M. தமீம் அன்சாரி, தண்ணீர் குன்னம்
*மாவட்ட செயலாளர்:*
முகைதீன் அடுமை, முத்துப்பேட்டை
*மாவட்ட பொருளாளர்:*
K.M. சாதிக் பாட்சா, பொதக்குடி
*மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்:*
A. முகம்மது பாரூக், தண்ணீர் குன்னம்
M. முகம்மது ஷிப்லி ரஹ்மத்துல்லாஹ், கொடிக்கால் பாளையம்
*துணைத் தலைவர்கள்:*
S.P.T. ஹாஜா நஜிமுதீன், புலிவளம்
S.S. பரக்கத் அலி, முத்துப்பேட்டை
KPM. பஷீர் அஹமது, கொடிக்கால் பாளையம்
M. அமீர் அலி, விஜயபுரம்
*துணைச் செயலாளர்கள்:*
H. பைஜுர் ரஹ்மான், நெடுங்குளம்
A. முஹம்மது ஆதம், கூத்தாநல்லூர்
M. முஹம்மது உமர் பாரூக், அத்திக்கடை
M. தாஜுதீன், அடியக்கமங்கலம்
*இளைஞரணி:*
தலைவர்:
S. முஹம்மது யூசுப்தீன், விஜயபுரம்
செயலாளர்:
K. நூர் முகம்மது, அத்திக்கடை
பொருளாளர்:
A. நிசாருதீன், திருவாரூர்
*மாணவரணி அமைப்பாளர்:*
K.F. பாவா பக்ருதீன், கூத்தாநல்லூர்
*மகளிரணி அமைப்பாளர்:*
A. ஷஃபானா நஸ்ரின், கூத்தாநல்லூர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர் குன்னம் முகம்மது பாரூக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.