Tuesday, 21 December 2021

மௌத் அறிவிப்பு


21.12.2021

புலிவலம் மர்ஹீம் நைனா மரைக்காயர் அவர்களின் மகனாரும் தமீம் மற்றும் முஹம்மது ஃபாதிர் ஆகியோரின் தகப்பனாருமாகிய

 *N.அபூபக்கர்* அவர்கள் அப்துல்கலாம் நகரில் மெளத்.


இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.


இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம் மலேசியா நிக்காஹ் 21.12.21


 

Tuesday, 14 December 2021

#கொடிக்கால்பாளையம் பாச்சோற்றுப்பெருவிழா


 








கொரோனா ஊரடங்கு 31-12-2021 வரை நீடிப்பு

முத்துப்பேட்டை ஹந்தூரி விழா உள்ளுர் விடுமுறை

*


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா 720 வது ஆண்டு ஹந்தூரி விழாவையொட்டி வரும் 15.12.2021 புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை* *பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை, அதற்கு பதிலாக 08.01.2022 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்.* *-திருவாரூர் மாவட்ட ஆட்சியர்*

Friday, 10 December 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு

 

10.12.2021

 

கொடிக்கால்பாளையம் ராமகே ரோடு எஸ்.ஏ.சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும்,

 உமருல் பாரூக், மர்ஹூம் ஜமால் முஹம்மது,முஹம்மது இஸ்மாயில்,அப்துல் ரெஜாக் இவர்களின் தாயாரும் 

மர்ஹூம் கோ.மு.முஹம்மது, மர்ஹூம் கோ.மு.முஹம்மது இபுராஹிம், மர்ஹூம் கோ.மு.நூஹூ, மர்ஹூம் கோ.மு.உபையதுல்லா இவர்களின் சகோதரியுமான ராபியத்தாம்மாள் அவர்கள் சென்னையில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.

 வெளியூர் மௌத் அறிவிப்பு 


10.12.2021


 நமதூர் வடக்கு தெரு தாடி வீட்டு வி.எம்.ஏ.ஹாஜா மெய்தீன், மர்ஹூம் வி.எம்.ஏ.தாஜூதீன் ,மர்ஹூம் வி.எம்.ஏ.அன்ருவருதீன் இவர்களின் சகோதரியும் ஆழியூர் அப்துல் ஜலீல் அவர்களின் மனைவியும் இப்பூனுதீன் அவர்களின் தாயாருமான ஹாஜியா ஹைஜா நாச்சியா அவர்கள் ஆழியூரில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, 1 December 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் மேலத்தெரு முஹம்மது தாஹா அவர்களின் மனைவியும் ஹாஜாஅலி மற்றும் ஷேக்ராஜா ஆகியோரின் தாயாருமான ராபியத்துல் பஜ்ரியா அவர்கள் மெளத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

அன்னாரின் ஜனாசா02.12.2021 காலை 11:30மணிக்கு மேலத்தெரு நல்லடக்கம் செய்யப்படும்

உலக எய்ட்ஸ் தினம்

Sunday, 28 November 2021

கொடிக்கால்பாளையம் பைத்துல் மால் கூட்டம்

 கொடிக்கால் பாளையம் பைத்துல் மால் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நாளை 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4.45 க்கு நமது பள்ளிவாசல் மஹ்ஷூம் மஹாலில் நடைபெறும். பைத்துல் மால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

இப்படிக்கு, கொடிக்கால் பாளையம் பைத்துல் மால்

Friday, 26 November 2021

தேசிய அரசியலமைப்பு தினம்


 இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறதா? உலகின் மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம் என்ற பெருமை பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் முகப்புரையோடு 8 அட்டவணைகள், 22 பகுதிகள் 395 சரத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்டு தற்போது 24 பகுதிகளையும் 450 சரத்துக்களையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறைவனால் அருளப்பட்டதல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இன்னமும் சொல்லப்போனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, தென்ஆப்பிரிக்கா மற்றும் சுவிட்ஷர்லாந்து நாடுகளின் அரசமைப்பு சட்டங்களின் கூட்டுக்கலவை. பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம், 1930 நவம்பர் முதல் 1932 டிசம்பர் வரை லண்டனில் நடைபெற்ற மூன்று வட்ட மேஜை மாநாடுகளின் விளைவாக அடித்தளம் அமைக்கப்பட்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1933ல் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் 18 மாத பரிசீலனைக்குப்பின் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டு, 1935 ஜனவரி 22ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட 1935 இந்திய அரசாங்க சட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அமெரிக்க அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி வரையப்பட்டதாகும். அடிப்படை கடமைகள் ரஷ்ய அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும், வழிகாட்டு நெறிமுறைகள் அயர்லாந்து அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும், சமதர்ம முகப்புரை பிரான்ஸை பின்பற்றியும் உருவாக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போர் 1945 ஆகஸ்ட் 15 அன்று முடிவுக்கு வந்த பின்னர் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று அட்லி பிரதமரானார். 1946 துவக்கத்தில் இந்தியாவில் மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் அறிவித்தார். பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவில் அரசியல் நிலையை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் முடிவு செய்தது. பிரிட்டிஷ் அமைச்சரவையில் இந்திய விவகாரச் செயலர் பெதிக் லாரன்ஸ் மற்றும் சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்ஸாண்டர் ஆகியோரடங்கிய அமைச்சரவை தூதுக்குழு 1946 மார்ச் 23 அன்று இந்தியா வந்தது. காங்கிரஸ் & முஸ்லிம் லீக் தலைவர்களை பலமுறை சந்தித்து பேசி மே 16 அன்று தனது பரிந்துரைகளை வெளியிட்டது. இந்திய கூட்டாட்சி அமைக்கப்படும், அதற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் அரசமைப்பு சட்ட மன்றத்திற்கு பத்து லட்சம் பேருக்கு ஒரு பிரதிநிதி வீதம் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்; அந்தந்த வகுப்பாரின் மக்கள் தொகையை பொறுத்து பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் தீர்மானிக்கப்படும்; புதிய அரசியலமைப்பு சட்டம் வரையப்படும் வரை இடைக்கால அரசு நாட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் என்ற சரத்துக்கள் அந்த பரிந்துரையில் இடம் பெற்றிருந்தன. அந்த அமைச்சரவை தூதுக்குழு பரிந்துரைபடியே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மாகாண சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மொத்தம் 389 பேர். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்த எண்ணிக்கை 299 ஆக குறைந்தது. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று நடைபெற்றது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்களில் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, 114 நாட்களில் எழுதி முடிக்கப்பட்டு, மூன்று முறைவாசிக்கப்பட்டு, திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதி வடிவத்தை அங்கீகரித்து 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்டவர்களில் காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம்.அஹமது இபுராகிம் சாகிப், பி.போக்கர் சாகிப், மகபூப் அலி சாகிப் ஆகியோரும் அடங்குவர். அரசியல் நிர்ணய சபையில் 22 குழுக்கள் நியமிக்கப்பட்டன. வரைவுக் குழு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலும், அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் குழு சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலும் அமைக்கப்பட்டன. சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லிம்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு, தனித்தொகுதி உள்ளிட்ட அனைத்தையும் அரசியல் நிர்ணய சபையில் தகர்த்தவர் சர்தார் பட்டேல்தான். இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கான பேச்சுக்கள் நடைபெற்ற போது அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டிருந்தார். நேரு அறிவித்த அரசியல் நிர்ணய சபை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் அம்பேத்கர் பெயர் இடம்பெறவில்லை. இதனை அறிந்த முஹம்மதலி ஜின்னா மும்பையிலிருந்த அம்பேத்கரை தொடர்பு கொண்டு, அரசியல் நிர்ணய சபைக்கு வங்கத்திலிருந்து முஸ்லிம் லீக் வேட்பாளராக அவரை நிறுத்துவதாக அறிவித்தார். அவரது வேட்பு மனுவை நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் முஸ்லிம் லீக் அமைச்சராக பதவிவகித்த ஜோகேந்திரநாத் மண்டல் முன்மொழிந்தார். தேசம் விடுதலை பெற்ற பின் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கரும், பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக ஜோகேந்திரநாத் மண்டலும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த நாளே அரசியல் சட்டதினமாகும். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26 ஆகும். அந்நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயிர் நாடியான முகப்புரையில் “இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசை அமைக்கவும், அனைத்து குடிமக்களுக்கும் சமுதாய பொருளாதார அரசியல், நீதி, சிந்தனை, பேச்சு, நம்பிக்கை, பற்று, வழிபாட்டு சுதந்திரம், அந்தஸ்திலும் வாய்ப்பிலும் சமத்துவம், தனிமனித மாண்புடன் சகோதரத்துவம், நாட்டின் ஒருமைப்பாடு ஆகிய அனைத்தும் அனைவரிடமும் வளர்க்க உறுதிபூண்டு இந்த அரசியலமைப்பு சட்டத்தை மனநிறைவுடன் ஏற்று நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தது. இந்த முகப்புரையில் 1976ல் 42வது திருத்தத்தின் மூலமாக சமதர்ம (ஷோசலிஸ்ட்) சமய சார்பற்ற (செக்யூலர்) என்ற சொற்கள் சேர்க்கப்பட்டு 3.1.1977 முதல் அமலுக்கு வந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. சமத்துவ உரிமை, 2. சுதந்திர உரிமை, 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை, 4. சமய சுதந்திர உரிமை, 5. கலாச்சார மற்றும் கல்வி உரிமை, 6. அரசியலமைப்பு தீர்வழி உரிமை. இந்த அடிப்படை உரிமைகள் சட்டத்தின் வழியாக மீறப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் மூலமாக நேரிடையாக தீர்வு காணமுடியும். அடிப்படை உரிமைகளில் ஒன்றான சமய சுதந்திர உரிமை நான்கு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது. 1. மனசாட்சி சுதந்திரம்: இறை நம்பிக்கை என்பது அவரவர் மனசாட்சியை பொறுத்தது. இது ஒருவரது அந்தரங்கமாகும். இதை மற்றவர் மீது திணிக்கக்கூடாது. 2. வெளிப்படையாகக் கூறும் உரிமை: ஒருவருடைய மத நம்பிக்கைகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கு உரிமையுண்டு. இதை எவ்விதத் தடையுமின்றி எவரும் சுதந்திரமாகச் செய்யலாம். 3. பின்பற்றும் உரிமை: மதவழிபாடு, மத விழாக்கள், மத சடங்கு சம்பிரதாயங்கள், மத கோட்பாடுகள், கருத்துக்களை பின்பற்றுதல் சமய சுதந்திரமாகும். 4. மத பிரச்சார உரிமை: ஒருவர் தான் பின்பற்றும் மதத்தின் கொள்கை கோட்பாடுகளை நடவடிக்கைகளை பற்றி பிரச்சாரம் செய்யும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் கட்டாய மதமாற்றம் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான சரத்துக்கள் மத சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துகின்றன. 25வது சரத்து மத நம்பிக்கைகள் மற்றும் மத நடவடிக்கைகள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவை என பறைசாற்றுகிறது. அதேசமயம் மத சம்பந்தப்பட்ட பொருளாதார, நிதி, அரசியல் நடவடிக்கைகளை நெறிபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்றும் கூறுகிறது. பொது நலன், சீர்திருத்தம் கருதி இந்து சமய நிறுவனங்கள் இந்துக்களில் அனைத்து வகுப்பினருக்கும் சாதியினருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என வலியுறுத்தும் இச்சரத்து சீக்கியர், ஜைனர், பொத்தர்கள் இந்துக்களாக கருதப்படுவர் என குறிப்பிடுவதோடு, சீக்கியர்கள் கிர்பான் எனும் கத்தியை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கிறது. 26 ஆவது சரத்து மதம் மற்றும் மத அறக்கட்டளைகளை ஏற்படுத்தி நடத்தும் உரிமை, மத நடவடிக்கைகளை மேலாண்மை செய்யும் உரிமை, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை இச்சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது. மதக் கல்வியை பற்றி கூறும் 28 ஆவது சரத்து அரசு நிதி உதவிபெறும் கல்விக் கூடங்களில் மதக்கல்வி அளிக்கக்கூடாது என்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எவரையும் அவரது சம்மதமின்றி கட்டாயப்படுத்தக்கூடாது என குறிப்பிடுகிறது. அவர்கள் குழந்தைகளாய் இருப்பின் பெற்றோர் சம்மதத்தை பெற வேண்டும் என்கிறது. கலாச்சார உரிமை வழங்கும் 29 ஆவது சரத்து நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழும் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையுடையவர்கள் என்கிறது. மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கு மட்டுமே உரிய சரத்து 30. மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினர் தங்களது விருப்பப்படி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தவும் நிர்வகிக்கவும் உரிமை பெற்றவர்கள் என கூறுவதோடு, சிறுபான்மையினர் அவர்களின் மொழியிலேயே கல்வி கற்பிக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுவது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு வாசகங்களாகும். பன்முகத்தன்மை கொண்ட இந்திய திருநாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நிலைப்பாடாகும். இந்திய சிறுபான்மையினரில் மத சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் என இருவகைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகளோடு சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டு, மேற்கண்ட சரத்துக்களோடு 347, 350 சரத்துக்களிலும் அவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை கடமைகளாக 11 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. சமயம், மொழி பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து மக்களிடையே சகோதரத்துவ உணர்வு மேலோங்க வேண்டும், பெண்களை பலவீனப்படுத்தும் பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். இந்திய பன்முக கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் இன்று இந்தியாவில் நடைமுறையில் உள்ளதா? அடிப்படை கடமை தவறிய எவர்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பலவீனம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 36 முதல் 51 வரையிலான இந்த சரத்துக்களில் 44ஆவது சரத்துதான் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிடுகிறது. சரத்து 45 நலிவடைந்த மக்களின் கல்வி பொருளாதார உயர்வில் சிறப்பு கவனம், சரத்து 46 பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை அனைத்து கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றுதல், சரத்து 47 மக்களை கெடுக்கும் மதுவை தடை செய்வது பற்றியும், சரத்து 48 மற்றும் 48ஏ ஆகியவை பசுக்களையும், பால்வற்றிய மாடுகளையும் வதை செய்வதை தடுப்பது பற்றியும் குறிப்பிடுகிறது. ஆனால் பிற சரத்துக்களை பற்றி கவலைப்படாத பா.ஜ.க. அரசு சரத்து 44 மற்றும் 48, 48ஏ இந்த இரண்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. நீதிமன்றங்களும் இதற்கு ஒத்து ஊதுகின்றன. ‘வழிகாட்டு நெறிமுறைகள் சேமிப்பில்லாமல் வழங்கப்பட்ட காசோலை; நீதிமுறைக்கு உட்படுத்தவோ சட்டத் தீர்வு காணவோ முடியாத இவை உணர்ச்சிகளின் குப்பை கூடை’ என்றார் அரசியல் நிர்ணய சபை வரைவு குழு உறுப்பினர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரை அடிப்படை உரிமைகள்தான் உச்ச நீதிமன்ற சட்ட பாதுகாப்புக்குரியது. அரசியலமைப்பு சட்டம் நூறு முறை திருத்தப்பட்டு விட்டது. சர்ச்சைக்குரிய 44வது சரத்து அதிலிருந்து அகற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை யினருக்கு அச்சுறுத்தல் அல்ல. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலே ஆளுவோரால்தான். ஆளுவோர் சிறுபான்மையினரை அச்சுறுத்தினால் நீதிமன்றத்தை அணுகலாம். காவியில் கலந்து நீதிமன்றமே அச்சுறுத்தினால் சிறுபான்மையினர் எங்கு முறையிடுவது-? ‘இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறப்பாக இருந்தாலும், அதை அமல்படுத்துவோர் தீயவர்களாக இருந்தால் விளைவுகள் மோசமாகிவிடும்’ என்றார் சட்ட மேதை டாக்டர் அக்பேத்கர். இன்று நடப்பது அதுதானே! - காயல் மகபூப்