இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 93-ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்றைய 43 நிலையில் பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 25 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இன்று 103 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,452-ஆக உயர்ந்திருக்கிறது.
இதனிடையே, புதிய கொவிட் -19 சம்பவங்கள் ஒரு வாரத்திற்குள் ஓர் இலக்க மட்டத்தில் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் நம்புவதாக நூர் ஹிஷாம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
“கட்டம் ஒன்று மற்றும் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளில் நாம் செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் மட்டுமே எண்ணிக்கையை குறைக்க முடியும்.”
இருப்பினும், எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, மக்கள் வீட்டில் தங்குவதை உறுதி செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று நூர் ஹிஷாம் வலியுறுத்தினார்
No comments:
Post a Comment