Saturday, 28 December 2019

முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்: திருவாரூர் மாவட்டத்தில் 76.93 சதவீத வாக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் திருவாரூர் ஒன்றியம்-76,025, மன்னார்குடி ஒன்றியம்-1,04,071 கோட்டூர் ஒன்றியம்-84,077, திருத்துறைப்பூண்டி ஒன்றியம்-68,683, முத்துப்பேட்டை ஒன்றியம்-64,513 என மொத்தம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள 838 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-28,157, பெண் வாக்காளர்கள்-30,889, மூன்றாம் பாலினம் 2 பேர் என மொத்தம் 59,048 வாக்குகள் பதிவாகின. இது 75.4 சதவீதமாகும்.

மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-37,086, பெண் வாக்காளர்-42,684 என மொத்தம் 79,770 வாக்குகள் பதிவாகின. இது 72.07 சதவீதமாகும்.

கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-31,128, பெண் வாக்காளர்கள்-34,364 என மொத்தம் 65,492 வாக்குகள் பதிவாகின. இது 74.65 சதவீதமாகும். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குசாவடிகளில் ஆண் வாக்காளர்கள்-25, 737, பெண் வாக்காளர்கள்-27,979 என மொத்தம் 53,716 வாக்குகள் பதவாகின. இது 75.57 சதவீதமாகும்.

முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆண் வாக்காளர்கள்-21,859, பெண் வாக்காளர்கள்-25,828 என மொத்தம் 47,687 வாக்குகள் பதிவாகின. இது 68.61 சதவீதமாகும். முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்கள்-1,43,967, பெண் வாக்காளர்கள்-1,61,744 மற்றும் மூன்றாம் பாலினம் -2 பேர் என மொத்த 3 லட்சத்து 5 ஆயிரத்து 713 வாக்காளர்கள் வாக்குகளை அளித்துள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சராசரியாக 76.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து வாக்குசாவடியில் இருந்து வாக்குப்பதிவு பெட்டிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்கு திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி ஒன்றியத்திற்கு மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி, கோட்டூர் ஒன்றியத்திற்கு கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு முத்துப்பேட்டை பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பாதுகாப்பாக அறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த அறைகளுக்கு அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு போடப்பட்டு சீல் வைத்தனர்

Saturday, 21 December 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 21/12/2019

 நமதூர் வடக்கு தெரு கிடாக்கார வீட்டு மர்ஹூம் வாத்தியார் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் ,முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி,யூசுப்தீன் இவர்களின் தகப்பனாருமான முத்துமாமா என்கிற முஹம்மது ரஃபி அவர்கள் பர்மா தெரு தனது இல்லத்தில் மௌத்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

#CAA2019 - திருவாரூரில் குடியுரிமை சட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


Wednesday, 4 December 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 04.12.2019


மலாயாத்தெரு
மா்ஹும்  வெ.ப.முஹம்மது தாவூத் அவா்களின் மகளும், மா்ஹும் வா.ம.அ. அப்துல் கரீம் அவா்களின் மனைவியும், A.ஹாஜா ஷேக் அலாவுதீன் தாயாரும் மான A. பசீலா பீவி அவா்கள் மலாயாத்தெருவில் மெளத்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்

இன்று இரவு 08:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்