Saturday, 7 December 2024

அறிவியல் கண்காட்சி

 





















நமது மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் இஸ்லாமிய மற்றும் அறிவியல் கண்காட்சி இன்று காலையில் பள்ளி வளாகத்தில் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் பள்ளி தலைவர் ஹாஜி எம்.சுல்தான் அப்துல் காதர், ஜமாஅத் துணைத் தலைவர் எ.மா.அ.அஹமது உசேன், ஆடிட்டர் மெ‌.இ.பா.முஹம்மது சுல்தான்,52ப்பணப்பகுதி பொருளாளர் வி.எஸ்.என்.எம்.இஸ்ஹாக்,ஹாஜி.தி.இப்ராஹிம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டியும் மத்லபுல் ஹைராத் கல்வி நல குழுமம் நிர்வாக குழு உறுப்பினர் ப.இ.மு.நிஜாமுதீன், தெற்கு தெரு ஜமாஅத் பிரதிநிதியும் மத்லபுல் ஹைராத் கல்வி நல குழும நிர்வாக குழு உறுப்பினர் ‌ஹாஜி எம்.ஏ.முஹம்மது அப்துல் வஹாப், மத்லபுல் ஹைராத் கல்வி நல குழும பொருளாளர் எம்.முஹம்மது ஜலீல், நிர்வாக குழு உறுப்பினர்கள் எம்.முஹம்மது அன்சாரி,கே.ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட ஜமாஅத் தார்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.


இதில் புனித காபா பள்ளிவாசல்,ஜம்ஜம் நீருற்று, ஜனாஸா  நிலைகள் என இஸ்லாமிய விளக்கங்கள் முக்கிய இடம் பெற்றன. மேலும் அறிவியல் படைப்புகள் மாதிரிகளை 101 மாணவ மாணவிகள் தயார் படுத்திக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.


இதற்காக ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை அமருன்னிசா பேகம், உதவி தலைமை ஆசிரியை விஜயலக்ஷ்மி மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.


இதில் நமதூர் ஹாஜி.தி.இப்ராஹிம்ஷா ராவுத்தர் பெண்கள் அரபிக் கல்லூரி மாணவிகள் மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.