Saturday, 11 June 2016

உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல்

 


 திருவாரூர் நகரில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 6 பள்ளி ஆட்டோக்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து திருவாரூர் நகரில் வெள்ளிக்கிழமை பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தது. அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 6 பள்ளி ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு மேக்ஸிகேப் வாகனங்களுக்கு விளக்க அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் எம். ராஜேந்திரன், திருவாரூர் நகரக் காவல் ஆய்வாளர் ராஜா, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment