Monday 31 March 2014

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 31/03/2014




        நமதூர் ஜெயம் தெரு   குஜ்ஜலி வீட்டு   மர்ஹும் அ மு செ மு ஹாஜா மெய்தீன் அவர்களின் மருமகனும், H ஆஷிக் ஹசன் அவர்களின் மச்சானும் ,கொய்யா வீட்டு பாபு என்கிற சபியுதீன் அவர்களின் சகலையுமாகிய மஞ்சகொல்லை சம்சுதீன் அவர்கள் துபையில் மௌத் .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா 3/4/2014 அன்று மாலை 4.30 மணிக்கு துபாய் அல் கூஸ்( Al QUAZ) அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

தமிழக தேர்தல் துறையின் இணையதளம்


நடைபெற உள்ள 16வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் ,வாக்குசாவடிகள்,தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பற்றிய தகவல்கள் ,
கட்டுப்பட்டு அறை எண்கள் ,வேட்பாளர்களின் பிரமான உறுதிமொழி பத்திரங்கள் ,தேர்தல் புகார்கள் என தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் முழு விபரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .
இணையதளத்தை பயன்படுத்தும் அனைவரும் தேர்தல் பற்றி அறிந்து கொள்ளும் தமிழக தேர்தல் துறையின் இணையதளம் லிங்க் இதுதான்

http://www.elections.tn.gov.in/loksabha2014.htm


பயன்படுத்தி கொள்ளவும்

உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்து பட்டியல்கள் ,வழக்கு விபரங்கள் ,இன்னும் பிற தகவல்கள் இனி உங்களிடம் இருக்கும் .

 

Sunday 30 March 2014

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு 30/03/2014



           நமதூர் தூக்கான் வீட்டு  மர்ஹும்  முகம்மது ஜெஹபர் அவர்களின் மனைவியும் , நூர் முஹம்மது ,  ஹாஜா நஜுபுதீன் இவர்களின் தாயாருமாகிய பதுருன்னிஷா அவர்கள் சூபி நகர் வடக்குத்தெரு தனது இல்லத்தில் மௌத் .






இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 31/03/2014 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது .


Saturday 29 March 2014

தேர்தல் களம் 2014

இஸ்லாமிய கட்சிகள் நிலை

     நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் ,இயக்கங்கள் தங்களின் நிலையை அறிவித்து உள்ளன .இதில் தமிழகத்தில் உள்ள அ இ அ தி மு க  மற்றும் தி மு க இடையே முக்கிய போட்டி நிலவுகிறது .இரு பக்கமும் இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து வருகிறது .

இதில் முதலில் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையில் இயங்கும் அண்ணா தி மு க 40 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது .இராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சியின் சிறுபாண்மை பிரிவு மாநில செயலாளர் அன்வர்ராஜா அவர்கள் போட்டி இடுகிறார் .
மேலும் பி ஜைனுலாபுதீன் தலைமையில் உள்ள  தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் , பாக்கர் ரின் இந்திய தௌஹீத் ஜமாஅத் ,தமிழ் மாநில முஸ்லிம் லீக் சேக் தாவூத் , இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் தாவூத் மியா கான் ,இந்திய தேசிய லீக் பஷீர் அஹமது என கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறது .

தி மு க தலைவர் மு கருணாநிதி தலைமையில் இருக்கும் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதியும் ,மனித நேய மக்கள் கட்சி க்கு மயிலாடுதுறை தொகுதியும்
 ஓதுக்க பட்டுள்ளது  .இதை தவிர திருப்பூர் அல்தாப் தமிழ் மாநில முஸ்லிம் லீக் , லியாகத் அலி கான்













தி மு க வேட்பாளர் பட்டியலில் இராமநாதபுரம் தொகுதி - முஹம்மது ஜலீல், புதுச்சேரி -நாஜீம் , அ இ அ தி மு க சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா , மயிலாடுதுறை தொகுதியில் ம ம க சார்பில் ஹைதர் அலி ,வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரஹ்மான் M P, எஸ் டி பி ஐ  சார்பில் வடசென்னை -நிஜாம் முஹையதீன்  , இராமநாதபுரம் -நூர் ஜியாவுதீன் ,திருநெல்வேலி -முபாரக் என தற்போதைய நிலையில் தமிழக தேர்தல் களம்





 
மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்க போவது இட ஒதிக்கீட்ட அல்லது விலைவாசி உயர்வா ?

Friday 28 March 2014

நாகை தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி நடராசன் அவர்கள் இன்று 28/03/2014 அளித்த பேட்டி .ஊடக மையம் 
நாகை நாடாளுமன்றத் தொகுதியில் 296 வாக்குச் சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சி. நடராசன்.

திருவாரூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாகை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை (மார்ச்.29) தொடங்குகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முற்பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மார்ச்.30,31 விடுப்பு நாள்களாகும். தொடர்ந்து ஏப்.5-ம் தேதி வரை மேற்குறிப்பிட்டுள்ள நேரத்தில் மனுக்கள் பெறப்படும். மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் (என்னிடம்) அல்லது இதே ஆட்சியர் அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (மாவட்ட வழங்கல் அலுவலர்)மனுத் தாக்கல் செய்யலாம்.


மார்ச்.7-ம் தேதி பெறப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மார் ச்.9-ம் தேதி மாலை 3 மணி வரை மனுவைத் திரும்பப்பெறலாம். அன்றைய தினம் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும். ஏப்.24-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளர் அல்லது முன்மொழிபவர்களில் ஒருவர் நேரில் வந்து மேற்குறிப்பிட்ட இடங்களில் தாக்கல் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுடன் 4 பேர் வரலாம். சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் 10 பேருடன் வரவேண்டும். வேட்பு மனுவுடன் உறுதிமொழிப்பத்திரம் (படிவம் 26) ரூ. 20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.


பதட்டமான வாக்குச்சாவடி:

நாகை நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 1,425 வாக்குச் சாவடி மையங்களில் 296 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இம்மையங்களில் மத்திய துணை ராணுவம், நுண்ணின பார்வையாளர், விடியோகிராபர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தவிர வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு அஜய்குமார், நாகப்பட்டினம், கீவளூர், வேதாரண்யம் தொகுதிக்கு ருச்சீர்மெட்டல் ஆகியோர் சனிக்கிழமை முதல் தேர்தல் செலவின பார்வையாளர்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தேர்தல் தொடர்பான புகார்களை 18004257035 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தவிர 94876226601 எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்றார் நடராசன்.

பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன் உடனிருந்தார்.



இந்தியா 2014 மக்களவை தேர்தல்

 
நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் இருக்கும் ஒரே தொகுதிக்கு வரும் 24/04/2014 அன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது .இதில் தேசிய அரசியல் பேச வேண்டிய தேர்தலை நகராட்சி தேர்தல் மாதிரி தமிழ் நாட்டில் நடக்கிறது .காரணம் தனிநபர் அரசியல் மேல்லொங்கி காணபடுகிறது .

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்ள ஷரத்பவாரின்  தேசியவாத காங்கிரஸ் ,பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி , இந்தியன் யூனியன்  முஸ்லிம் லீக் ,கேரளா காங்கிரஸ் கட்சி ,ராஷ்ட்ரிய லோக் தளம் என இப்பொது அமைச்சரவையில் இருக்கிறார்கள் .இதை தவிர திராவிட முன்னேற்ற கழகம் ,திரினாமுல் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன இடையில் ஆதரவை விலக்கி கொண்டன .

என்றாலும்  5 ஆண்டுகளை நிறைவு செய்து 16ம் மக்களவைக்கு 2014 ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளத்தால் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது . டி வி அல்லது செய்தித்தாள்  அல்லது இணைய வழி சமூக தளங்களில் நாட்டில் நடக்கும் கூட்டணி மாற்றம் ,தலைவர்களின் பேச்சுக்கள் ,தொகுதி நிலவரம் என மக்கள்  ஊற்று பார்க்கபடுகிறது .

மக்கள் அடுத்து யார் அல்லது எந்த கூட்டணியை ஆட்சி யில் அமர வைக்க போகிறார்கள் என்பது தான் நம் அனைவரின் பேச்சாக இருக்கிறது.இப்போ நம் ஊடங்கள் பார்வையில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அடுத்ததாக முலாயம் சிங் யாதவ்  சமாஜ்வாடி கட்சி , இடது சாரிகள் ,மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சி ,ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா முழுவதும் போட்டியை தயார் படுத்திவருகிறது

இது மார்ச் மாத கணிப்பு தான்







NDTV யின் கருத்து கணிப்பு 14/03/2014 அன்று வெளியானது



 
15 வது மக்களவையில் உறுப்பினர் தொகுதி நிதியை 100% செலவு செய்த எம் பி கள் 
 



 
 
 
நாளை 29/03/2014 சனிக்கிழமை காலை 11மணி முதல் நாகை தொகுதி 
வேட்புமனு தாக்கல் துவக்குகிறது . இறுதிநாள் 05/04/2014.
வேட்பாளர்கள் செலவு கணக்கு துவக்குகிறது .
 
 
உண்மையாகவே எந்த ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ 272 இடங்கள் பெறும் நிலையில் இல்லை என்பது தான் தற்போதைய நிலைமை .
மோடி அலையும் இல்லை ராகுல் அலையும் இல்லை தெளிவான முடிவை அறிவிக்க மக்கள் தயார் ஆகி வருகிறார்கள் .
 
இப்போது நடைபெற உள்ளது நாடாளுமன்ற தேர்தல் என்பதை கருதி மக்களை தயார் படுத்த வேண்டும் .யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதை விட யார் ஆட்சி செய்ய விட கூடாது என்றும் பிரச்சாரம் அமையவேண்டும் .இனி முடிவு மக்கள் இடம் மட்டுமே உள்ளது .தெரு சண்டைகள்  வேண்டாம் கொள்கை பிரச்சாரம் செய்யுங்கள்
 

Wednesday 26 March 2014

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - சிறுபான்மையினர் பாதுகாப்பு

 
       இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ,சோனியா காந்தி ,ராகுல் காந்தி இன்று 26/03/2014 வெளியிட்டார்கள் .

இதில் பக்கம் 26இல் 7. SAFEGUARDING MINORITIES என்ற தலைப்பில் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்று  7 வாக்குறுதிகள் இடம் பெற்று உள்ளன .

1.மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை ரூ 700 கோடி வரையிலும் வழங்கப்பட்டுள்ளது .மேலும் விடுபட்டுள்ளவர்கள் விரைவில் கிடைக்க செய்யப்படும் .மேலும் திட்டம் தொடர்ந்து செயல்படும்

2.தொழில் தொடக்க கடன் பெறும்  முறை எளிமையக்கபடும்

3. வக்ப் சொத்துகளை பாதுகாக்க தனி சட்டம் கொண்டுவந்த முதல் அரசு இதன் முலம் நடவடிக்கை தொர்டந்து செய்யப்படும்

4.வன்முறை தடுப்பு சட்டம் முன்னுரிமை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபடும்

5.சிறுபாண்மையினர் கல்வி ,அரசு வேலைவாய்ப்பு களில் இட ஓதுக்கிடு அமல் படுத்த சட்ட பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்க பட்டு வருகிறது .

6.மௌலானா ஆசாத் கல்வி திட்டத்தில் இளைஞர்கள் போட்டி தேர்வு களில் கலந்து கொள்ளும் வகையில் தற்போது சில மாவட்டகளில்  அமைக்கப்பட்ட பயற்சி மையம் நாடு முழுவதும் அமைக்க படும்

7.நீதிபதி சர்சார் கமிட்டி யின் பரிந்துரைகள் படிபடியாக நிறைவேற்றபடும் .

 



 

Tuesday 25 March 2014

29 .NAGAPPATTINAM MP- நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர்கள் யார் யார்

 
நாகப்பட்டினம் தொகுதி வாக்காளர்கள் கவனத்திற்கு


நடைபெற உள்ள 16ம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நாகை தொகுதி வாக்காளர்கள் நாம் வாக்களிக்க செல்லும் முன் யார்யார் எல்லாம் வேட்பாளர்கள் என்பதையும் அவர்களின் வாக்குறுதிகள் என்ன என்பதையும் தற்போதைய எம் பி யின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்றும் அலசுவோம்

இதுவரை எம்.பி.ஆக இருந்தவர்கள் விபரம்

1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரஸ்
1962 - கோபால்சாமி - காங்கிரஸ்
1967 - சாம்பசிவம் - காங்கிரஸ்
1971 - காத்தமுத்து - சிபிஐ
1977 - எஸ்.ஜி. முருகையன் - சிபிஐ
1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக
1984 - மகாலிங்கம் - அதிமுக
1989 - செல்வராஜ் - சிபிஐ
1991 - பத்மா - காங்கிரஸ்
1996 - செல்வராஜ் - சிபிஐ
1998 - செல்வராஜ் - சிபிஐ
1999 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
2004 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
2009-   ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
2014 - ??????????????????????????



நோட்டா பற்றியும் தெரிந்து கொள்ளுக்கள் ..

முதலில் தற்போதைய
எம் பி யும் மீண்டும் 4வது முறையாக தி மு க சார்பாக   போட்டி யில் இருக்கும்
AKS விஜயன் அவர்கள் தான்
1999,2004,2009 என தொரடர்ந்து மூன்று முறை வெற்றி
2014 ம் நான்காம் முறையாக போட்டி

2009இல்   மொத்த வாக்குகள்         982988

பதிவானவை                                       762988
77.6 %
ஏ.கே.எஸ். விஜயன் - திமுக         369915
எம் செல்வராசு    இ கம்யூ              321953
முத்துக்குமார்  தேமுதி க                51376

வித்தியாசம்                                           47962


சாதனைகள்

திருவாரூர் இணைக்க காரணமான தஞ்சாவூர், நாகை ,மயிலாடுதுறை ஆகிய ரயில் மார்க்கம் அகல பாதையாக மாற்றபட்டது .

நாகை துறைமுகத்துக்கு மேம்பாடு நிதி



அ இ அ தி மு க சார்பாக போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கே கோபால்
 இவர் முன்னாள் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 




அ இ அ தி மு க வேட்பாளர் கோபாலை ஆதரித்து நாகையில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்கள்
திமுக தலைவர் கருணாநிதி உடன் வேட்பாளர் அறிவிப்புக்கு பின் விஜயன் .உடன் ஸ்டாலின் 

 

எம் பி விஜயன் செயல்பாடு 19இடத்தில இருக்கிறார் 


 
தினத்தந்தி வந்த நாகை தொகுதி நிலவரம் 18/3/2014
 
தினமலர் வந்த நாகை தொகுதி நிலவரம் 18/03/2014
 


 
காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்
டி எ பி செந்தில் பாண்டியன்
(திருவாரூர் டாக்டர் ஆறுமுக பாண்டியன் சகோதரர்)


 
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும்
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்

ஆர் வடிவேல் இராவணன்

மாநிலப் பொதுச் செயலாளர்
. அவரது சுயவிவரக் குறிப்பு :
பெயர் - வடிவேல் ராவணன்
பிறந்த தேதி - 05.04.1952
கல்வித் தகுதி- எம்.ஏ, பி.எல், சமஸ்கிருதத்தில் பட்டயம்.
தந்தை - சண்முகவேல்
தாய் - பொன்னம்மாள்
மனைவி - சுசீலா
பூர்விகம்- கோட்டூர், தேனி மாவட்டம்.
தமிழ்நாடு தேர்வாணையம், தலைமைச் செயலக கல்வித் துறை அலுவலகம், சாத்தூர் கனரா வங்கி ஆகியவற்றில் எழுத்தராகப் பணியாற்றியவர். பின்னர், நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும், திருச்சி வானாலி நிலைய செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றியவர்.
1989-ம் ஆண்டு முதல் பாமகவின் உறுப்பினராக உள்ள வடிவேல் ராவணன், அக்கட்சியின் மதுரை (மேற்கு) மாவட்டச் செயலாளர், தத்துவ அணிச் செயலாளர், கலை இலக்கிய அணித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.
1991-ம் ஆண்டில் நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலும், 1996-ல் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
பாஜக- பாமகவின் கூட்டணி உடன்பாட்டுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர் பட்டியலில், விழுப்புரம் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுத் தேர்தல்
பணியாற்றியவர்.


 
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்
 
                                                                  ஜி பழனிச்சாமி

    முன்னாள் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் நான்கு முறை






உண்மையான போட்டி என்பது திமுகவா ?அ திமுக வா ?
என்பது தான் தொகுதி மக்களின் பேச்சாக உள்ளது விடை மே 16இல் தெரியும் 



"நோட்டா'வுக்கு தனிச் சின்னம் அறிவிப்பு

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை (NOTA) வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே பதிவு செய்வதற்கான தனிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது.

அதன்படி, கருப்பு நிறத்திலான செவ்வக வடிவ வட்டத்துக்குள் நோட்டா என்பது ஆங்கிலத்தில் வெள்ளை நிற எழுத்துகளால் அச்சிடப்பட்டிருக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து,அவர் வெளியிட்ட அறிவிப்பு: யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற முடிவை வாக்காளர்கள் எடுக்கும் போது, அதனை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ரகசியம் காக்கப்படும் வகையில், வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே அதற்கான வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 
அதன்படி, வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய பட்டியல் சீட்டில் "நோட்டா'வுக்கென தனிச் சின்னமும் இடம்பெறும். இந்த சின்னத்துக்கான வடிவமைப்பை தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது. அதன்படி, கருப்பு நிறத்திலான செவ்வக வடிவ வட்டத்துக்குள் (4 விளிம்புகளும் வட்டமாக்கப்பட்டு இருக்கும்) நோட்டா (NOTA )என்பது ஆங்கிலத்தில் வெள்ளை நிற எழுத்துகளால் எழுதப்பட்டும், தமிழ் மொழியில், மேற்காணும் நபர்கள் எவருமில்லை என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.

தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர் பட்டியல் சீட்டு, வெள்ளை நிறத்தில் இருப்பதால், நோட்டா என்ற எழுத்து ஆங்கிலத்தில் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். சட்டப் பேரவைத் தேர்தல்கள் என்றால் வேட்பாளர் பட்டியல் சீட்டு, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனால், நோட்டா என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
எப்படி எழுதப்பட்டிருக்கும்? வேட்பாளர் பட்டியல் சீட்டில், நோட்டா என்பது முதலில் தமிழ் மொழியில், மேற்காணும் நபர்களில் எவருமில்லை என்று எழுதப்பட்டிருக்கும். இந்த வார்த்தையை ஒட்டியபடியே தொடர்ச்சியாக நோட்டாவுக்கான சின்னம் இடம்பெறும்.

 
வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டக்கூடிய வாக்காளர் பட்டியல் சீட்டில், தேர்தலில் போட்டியிடும் வாக்காளரின் பெயர் மற்றும் அவரது சின்னத்துக்கு இடையே ஒரு இடைவெளி விடப்பட்டிருக்கும்.

நோட்டாவில் அந்த இடைவெளி இருக்காது. இதனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களுக்குக் கீழே, இடம்பெறக் கூடிய நோட்டா வாய்ப்பில் வெறும் காலியிடம் மட்டுமே விடப்பட்டிருக்கும். வேட்பாளர்களின் சின்னங்களுக்கு இணையாக நோட்டா சின்னம் இடம்பெறாது என்று பிரவீண்குமார் தனது அறிவிப்பில்
தெரிவித்துள்ளார்.


 உங்கள் ஓட்டு பதிவை வரலாற்று பதிவாக மாற்றுங்கள்

ஜனநாயக உரிமையை கண்டு ஏமாற்றும் அரசியல் வாதிகள் பயப்படவேண்டும் .

உண்மையான மக்களாட்சி மலர வேண்டும்


 

Monday 24 March 2014

கொடிநகர் ஜனாஸா அறிவிப்பு 24/03/2014

         நமதூர் கருவபிள்ளை வீட்டு ஆசியம்மாள் அவர்களின் கணவரும் , முஹம்மது இப்ராகிம் , அப்துல் லத்திப் இவர்களின் மச்சானும்  அப்துல் பத்தாஹ் அவர்களின் பட்டணருமாகிய A O ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜெயம் தெருவில்  தனது இல்லத்தில் மௌத் .




இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 24/03/2014 இரவு 7 மணிக்கு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது

Kodikkalpalayam - மத்லபுல் கைராத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா தொகுப்பு

 


 
 


மத்லபுல் கைராத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 8 வது ஆண்டு விழா நிகழ்ச்சி 23/03/2014 அன்று மாலை 5.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் ஜமாஅத் தலைவர் ரபியுதீன் தலைமையில் நடைபெற்றது .ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் சேக் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்

 
 
இதில் ஜமாஅத் நிர்வாகஸ்தர்கள் ,நகர்மன்ற உறுப்பினர்கள் ,ஊர் பெரியவர்கள் ,தாய்மார்கள் பெற்றோர்கள் என அனைவருகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள் .
மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன 
 
 

Sunday 23 March 2014

நாகை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்

நாடாளுமன்ற தேர்தல் 2014 நாகை தொகுதி யில் பதிவான வாக்குகளை திருவாரூர் கிடாரன் கொண்டான் திரு வி க அரசு கலை கல்லூரியில் பாதுக்காப்பாக வைக்க படுகிறது .பின்னர் 16/05/2014 அன்று காலை முதல் வாக்கு  எண்ணிக்கை  நடைபெற உள்ளது .

இதற்க்கான முன் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி நடராசன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் காளிராஜ் ,மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் 22/03/2014 அன்று  பார்வையிட்டார்கள் .





Saturday 22 March 2014

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு 22/03/2014

நமதூர் மர்ஹும் செ சா முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளாரும் A .அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய சர்புன்னிஷா அவர்கள் வடக்குத்தெரு தனது இல்லத்தில் மௌத் .

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 22/03/2014 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது .

Friday 21 March 2014

நமதூர் நிக்காஹ் தகவல் 23/03/2014

 
          முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் அனுமதி பெற்று நடைபெறும் திருமணம் :



         நமதூர் நடுத்தெரு VTA ஹாஜா ஷேக் அலாவுதீன் அவர்களின் மகனார்
H ஹசன் குத்தூஸ் மணமகனுக்கும் ,  கூத்தூர் R A முஹம்மது மரைக்காயர் அவர்களின் மகளார் M நிலோபர் நிஷா மணமகளுக்கும் நிக்காஹ் 
இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி 1435ம் ஜமாஅத்துல் அவ்வல் மாதம் பிறை 21 (23/03/2014)   ஞாயிற்றுக்கிழமை பகல் 11:45 மணிக்கு
கூத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற உள்ளது .


.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

 
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

 நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

 ... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

 பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

Thursday 20 March 2014

சமூக வலைதளங்களுக்கு வழிகாட்டு நெறிகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு

 
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், அரசியல் விளம்பரம் தொடர்பாக இந்த வலைதளங்களுக்கு விரிவாக வழிகாட்டு நெறிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முக்கிய சமூக வலைதளங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இது தொடர்பக தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் திரேந்திர ஓஜா கூறுகையில், "தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு இன்டெர்நெட் அடிப்படையிலான அனைத்து சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.
 
தேர்தல் விளம்பரங்களை வெளியிடும் முன் அவற்றை மாநில மற்றும் மாவட்ட அளவில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பித்து சான்றளிப்பு பெறுமாறு எல்லா சமூக ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம். இவற்றையும் மீறி சட்டவிரோத கருத்துகள் சமூக ஊடக விளம்பரங்களில் இருந்தால் தேர்தல் ஆணையமே அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
 
"தேர்தல் நடைமுறைகளில் ஊடகங்களின் பங்கு" என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஓஜா, "வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களில் தங்களின் விளம்பர செலவு தொடர்பாக கணக்கு பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
 
 
இந்நிகழ்ச்சியில் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி விஜய் தேவ் பேசுகையில், "சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் இயன்றவரை தடுக்கும். அதற்காக சமூக ஊடகங்களின் குரல்வளையை நெரிக்க முயலாது" என்றார்.

Wednesday 19 March 2014

கேள்விப்பட்டீர்களா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருந்தாலும்கூட, போகிற போக்கில் மன்மோகன் சிங் அரசு சில நல்ல முடிவுகளையும் எடுத்திருக்கிறது. கடைசி நேரத்தில், "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று தேர்தலைக் குறிவைத்துச் செய்ததாலோ என்னவோ, மன்மோகன் அமைச்சரவையின் கடைசிநேர முடிவுகள் மக்களைச் சென்றடையவும் இல்லை; பெற வேண்டிய பாராட்டைப் பெறவும் இல்லை.


ஆம் ஆத்மி கட்சி தில்லியில் அமைத்த மொஹல்லா கமிட்டிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு, மன்மோகன் சிங் அரசை யோசிக்க வைத்ததன் விளைவுதான் "லா பை கான்சென்ட்' என்கிற மக்கள் மன்றக் கலந்தாலோசனைத் திட்டம். மன்மோகன் சிங் அமைச்சரவை எடுத்திருக்கும் இந்த மக்கள் மன்றக் கலந்தாலோசனைத் திட்டம் என்பது ஒரு சில நாடுகளில் ஏற்கெனவே காணப்படும் வழிமுறைதான் என்றாலும், இந்த வழிமுறையை தில்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக நடத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டது முதல்தான் இந்தியாவில் பரவலாக அறியப்பட்டது.


மத்திய அரசு இனிமேல் கொண்டுவர இருக்கும் மசோதாக்கள், அவையில் தாக்கல் செய்வதற்கு முன்னால் மக்கள் மன்றத்தில் பரவலாக விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும் என்பதுதான் அமைச்சரவை எடுத்திருக்கும் முடிவு. எந்தவொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பும், அந்த மசோதாவுடன் தொடர்புடைய அமைச்சகம் பரவலான விவாதத்திற்கு வழிகோலி சம்பந்தப்பட்ட, அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படும், பயனடையும் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கேட்டறிந்த பிறகுதான் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எல்லா துறைகளும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கலந்தாலோசனை, மசோதாக்களுக்கு மட்டுமானதாக இருக்காது. எந்தவொரு சட்டத்தை அமல்படுத்தும்போதும் அதற்காக உருவாக்கப்படும் சட்ட திட்டங்கள், விதிகளுக்கும் இது
பொருந்தும்.


சாதாரணமாக, மசோதாக்கள் அவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால், மக்களவை, மாநிலங்களவை, அந்த மசோதாவுடன் தொடர்புடைய நிலைக்குழு போன்றவை, மக்கள் மன்றத்திடம் கருத்துக் கோரி விளம்பரம் செய்வது வழக்கம். ஆனால், அப்படிக் கருத்துத் தெரிவிப்பவர்களின் ஆலோசனைகள் பெரும்பாலும் படிக்கப்படாமலே குப்பைத் தொட்டிகளுக்குச் செல்வதுதான் இதுவரை வழக்கமாக இருந்தது.


ஒவ்வோர் அமைச்சகத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் உள்ளன. பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில், அந்தந்த அமைச்சகம் சார்ந்த எல்லா மசோதாக்களும் உறுப்பினர்களால் விவாதிக்கப்படுவதும், அந்தப் பிரச்னை தொடர்பான வல்லுநர்கள், பாதிக்கப்படுபவர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டு அவர்களது கருத்து கேட்கப்படுவதும் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இவை அறைக்குள் நடக்கும் ஆலோசனைகளாக இருக்கின்றனவே தவிர, பரவலான விவாதமாக இல்லை.

நிலைக்குழுக்களில் விவாதிக்கப்படும் மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்வரைதான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கான விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் உருவாக்குவது அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விடுகிறது. அந்தச் சட்டத்தால் பயனடையும் மற்றும் பாதிக்கப்படும் பொதுமக்களின் கருத்துகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை.

மக்கள் மன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம், பாலியல் தொந்தரவுத் தடுப்புச் சட்டம் போன்றவை அரசால் கொண்டுவரப்பட்டாலும், பல மசோதாக்கள் பரவலான விவாதம் இல்லாமலேதான் நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்ற அவைகளும் அடிக்கடி அமளியில் மூழ்குவதால், பெரும்பாலான மசோதாக்கள் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே நிறைவேற்றப்பட்ட மசோதாவின் ஷரத்துகள் தெரியுமா என்பது சந்தேகம். பொதுமக்களுக்கோ, அந்தச் சட்டம் அமலுக்கு வந்தபிறகுதான் அதுபற்றிய முழுமையான விவரம் தெரியும் என்கிற நிலைமை.


எந்த மசோதாவாக இருந்தாலும் பரவலான மக்கள் மன்ற விவாதத்திற்குப் பிறகுதான் நிலைக்குழுக்களால் பரிசீலனைக்கே ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற மத்திய அரசின் முடிவு, மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதிகாரிகள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், மக்கள் மன்றம் வரவேற்கும். மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை விவாதக் கலாசாரம்தான். காலம் கடந்த கடைசிநேர முடிவாக இருந்தாலும், மன்மோகன் சிங் அமைச்சரவை எடுத்திருக்கும் உருப்படியான இந்த முடிவு வரவேற்புக்குரியது!

தினமணி 19/03/2014

Tuesday 18 March 2014

Thiruvarur - வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24/04/2014 அன்று நடைபெற உள்ள நாகை  நாடாளுமன்ற மக்களவை தொகுதி பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம் 18/03/2014 அன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நடராஜன் தலைமையில் நடைபெற்றது .

இதில் வாக்கு சாவடியில் அலுவலர்கள் எப்படி பணி ஆற்றுவது குறித்தும்  வாக்கு பதிவு இயந்திரங்களை கையாளும் போது கடைபிடிக்கும் முறை குறித்தும் மாதிரி வாக்கு பதிவை நடத்தி கூறி முறையில் விளக்கங்கள் கூறப்பட்டன .

இதில் பதட்டமான வாக்கு சாவடியில் வெப் கேமரா முலமாக நேரடியாக
கண்காணிக்கபடுவதை செயல் விளக்கம் செய்யப்பட்டன .






Monday 17 March 2014

VAO 2342 பணியிடங்கள் :பரப்புகள் நம் சமுதாய மக்களிடம்


 
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் VAO  தேர்வு வரும் 2014 ஜூன் மாதம் 15ம் நாள் நடைபெற உள்ளது .


மொத்தம் பணியிடங்கள் - 2342


கல்வி தகுதி - 10ம் வகுப்பு முதல்


இதில் திருவாரூர் மாவட்டத்தில் 95 பணியிடங்கள் உள்ளன

இன்று முதல் 17/03/2014 - 15/04/2014 வரை ஆன்லைன் முலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

www .tnpsc .gov .in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் புகைப்படம் ,கையெழுத்து ஆகியன ஸ்கேன் செய்து ரூபாய் 125 மட்டுமே

இதுதான் கடைநிலையில் இருக்கும் அரசு பணி யாகும் பதவி உயர்வு உண்டு

அதிகபட்சமாக வயது 40 வரை விண்ணபிக்கலாம்

உடனே தயார் படுத்துங்கள் உங்கள் வீட்டு செல்வங்களை

நாளைய ஆட்சி பணி அலுவலர்கள் நாம் தான்

பரப்புகள் நம் சமுதாய மக்களிடம்

விழிப்புணர்வு பெறுங்கள்

India Votes 2014 :என்.ஆர்.ஐ.,களில் ஓட்டுரிமை

ஏப்ரல் மாதம் இந்திய பார்லி., தேர்தல் துவங்கவுள்ள நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்தபடியே ஓட்டளிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
இந்த வாய்ப்பு கிடைக்கும்போது பலரும் மகிழ்ச்சி அடைய மத்திய அரசிடம் கேட்டும் பயன் இல்லாததால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு போடப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; 2010ல் திருத்தப்பட்ட மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் செக்ஷன் ( 20 ஏ) யின்படி ஆர்ட்டிக்கிள் 14 படி சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற கருத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இதன் அடிப்படையில் உரிமை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் வாழும் நபர்கள் போலவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் மதிக்கப்பட வேண்டும். இவர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெறாதவர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரவலாக மொத்தம் ஒரு கோடியே 37 ஆயிரத்து 761 பேர் ( 2012 வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அறிக்கை) வசித்து வருகின்றனர். இதில் 11 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள்.


என்.ஆர்.ஐ.,களில் ஓட்டுரிமை பதிந்தவர்களும், பதியாதவர்களும் அடங்குவர். இவர்கள் வெளிநாட்டில் இருந்த படியே இந்திய பார்லி., தேர்தலில் ஓட்டளிக்க வழிவகை செய்ய வேண்டும். பதியாதவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களது உரிமை போற்றப்படும். இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

Thursday 13 March 2014

நாகை மக்களவைத் தொகுதி 2014 - தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம்



இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் 9444178000,


 ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டி. சியாம்சுந்தர் 8428784483,
 தனி வட்டாட்சியர் (தேர்தல்) கோ. காமராஜ் 9842534660.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்:

திருத்துறைப்பூண்டி (தனி) எ. மனோகரன் மாவட்ட வழங்கல் அலுவலர் 9445000295,
 எம். நாகராஜன் வட்ட வழங்கல் அலுவலர் 9445000302.
 திருவாரூர் பொ. பரமசிவம் (திருவாரூர் கோட்டாட்சியர்) 9445000464,

கே. சௌரிராஜன் (கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்) 9443071659.
நன்னிலம் ஜி. ராமசாமி (உதவி ஆணையர் கலால்) 9840950459,
 இ. ராஜாமணி (வட்டாட்சியர் குடவாசல்) 9445000628.

 நாகப்பட்டினம் எ. சிவப்பிரியா (நாகப்பட்டினம் கோட்டாட்சியர்) 9445000461, எஸ். பிரான்சிஸ் (கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்) 9442120229.
கீழ்வேளூர் (தனி) எ. கணபதி (மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்) 9842723080,

டி. முருகன், (தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம்) 9442430945,
வேதாரண்யம் சி. சிதம்பரம் (மாவட்ட வழங்கல் அலுவலர்) 9445000303,

எஸ். கணபதி (தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம்) 9894929971

Wednesday 12 March 2014

Kodikkalpalayam - புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை பணிகள் ஆரம்பம்

புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை  பணிகள் ஆரம்பம்

   நமதூரில் உள்ள தெற்கு தெரு  MABHS சங்கம் எதிரே இருந்த பழைய நிழற்குடை மற்றும் மேடையை  அகற்றிவிட்டு புதியதாக சட்டமன்ற உறுப்பினர் திரு.மு. கருணாநிதி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைய உள்ளது .இதற்கு நமது 7 & 8 வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டு முயற்சியில் பணிகள் இன்று 12/03/2014 முதல் துவங்கி உள்ளது .
பணிகள் வேகமாகவும் துரிதமாகவும் நடக்க உள்ளதாக நகரமன்ற உறுப்பினர் ஜாகிர் ஹுசைன் தெரிவித்தார்கள் .




தெற்கு தெரு சந்திப்பு பழைய நிழற்குடை அகற்றம்