Tuesday 31 December 2013

.வெல்கம் 2014............


தேர்தல் ஆண்டே வருக நிலையான ஆட்சி தருக

2014 ம் ஆண்டு இன்று பிறந்து உள்ளது .இந்தியாவின் அடுத்த 5 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் யாரை அமர்த்த போகிறோம் என்பதை தீர்மானிக்கும் ஆண்டு பிறந்து உள்ளது.

இப்பொழுது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மீண்டும் ஆள முடியுமா அல்லது பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரபாய் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலருமா அல்லது தமிழக முதல்வர் ஜெயலலிதா ,முலாயம் சிங், மாயாவதி, கருணாநிதி தலைவர்களின்  மூன்றாம் அணி ஆட்சி கனவு பலிக்குமா என்பதை மக்கள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வாக்கு பதிவு இயத்திரத்தில் முடிவு செய்வார்கள் .இனி வரும் ஆறு மாதம் காலம் முழுவதும் மக்கள் நிறைய காட்சிகளை கண்டு களிக்காலம்.கட்சிகள் நடத்தும் மாநாடுகள் ,சமுதாய அமைப்புகள் ,அரசு சார்ந்த சங்கங்கள்  கோரிக்கைகள் கொண்டு மக்களை திரட்டும் போராட்டம் ,தேர்தல் புறக்கணிப்பு, நோட்டா வில் வோட்டை பதிவுசெய்ய வேண்டுகோள்  என பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .இவைகள் எல்லாம் நாடு முழுவதும் காணும் நிகழ்வுதான் .ஆனால் வோட்டுக்கு எவ்வளது பணம் கிடைக்கும் அதுவும் கட்சிகாரர்கள் கமிஷன் வெட்டாமல் கிடைக்குமா எது மக்களின் எதிர்பார்ப்பு .வளர்ச்சி திட்டம் எல்லாம் இந்த 500 ருபாய்  அப்பறம் தான்.

 

தேர்தல் முலமாக நிலையான அரசு அமைய வாய்ப்பு குறைவுதான் .காங்கிரஸ் முலமாக கடந்த 10 ஆண்டுகளாக பயன் அடைத்த பெரும் பணக்காரர்கள் இப்போது மோடிக்கு ஊடகம் முலமாக பிரசாரம் செய்கிறார்கள் .

2014 ம் ஆண்டு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயம் இல்லை என் என்றால் தமிழக கட்சிகள் தற்போதிய நிலைகள் மாறிவரும் சூழ்நிலைகள் அதிரடிகள் எல்லாம் வரும் நாட்களில் காணலாம் . பேஸ்புக் முக்கியமாக இடத்தில இருந்து தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்

.வெல்கம் 2014

Kodikkalpalayam- Thiruvarur திருவாரூர் விஜயபுரம் ஜமாஅத் சார்பாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள புதிய பள்ளிவாசல்


Saturday 28 December 2013

"காரைக்காலில் அடுத்த 15 மாதத்தில் விமான தளம் அமையும்'

 
காரைக்காலில் 1.8 கி.மீ. நீளமுள்ள ஓடுபாதையுடன் அடுத்த 15 மாதத்தில் விமான தளம் அமையும் என, காரைக்கால் ஏர்போர்ட் நிறுவனத் தலைவர் ஜே.வி. சௌத்திரி நம்பிக்கை தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டம், பொன்பேத்தி, புத்தக்குடி கிராமத்தில் விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான அனுமதியை காரைக்கால் ஏர்போர்ட் நிறுவனம் பெற்றுவிட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஜே.வி. சௌத்திரி புதன்கிழமை தெரிவித்தது:

காரைக்காலில் விமான தளம் அமைவதற்கு சுற்றுச்சூழல் துறையைத் தவிர எல்லா துறையின் அனுமதியும் கிடைத்துவிட்டது. கட்டுமானப் பணியின்போதே சுற்றுச்சூழல் துறை ஆய்வு மேற்கொண்டு அனுமதி அளிக்கும். காரைக்காலில் 1.8 கிலோ மீட்டர் ஓடுபாதை கொண்ட தளம் அமைக்க, சிவில் ஏவியேஷன் ஸ்டியரிங் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரூ. 116 கோடி செலவாகும். இதற்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஷேர் ஹோல்டர்ஸ் முன் வருகிறார்கள். நிறுவனத்திடம் நிலையம் அமைக்க 180 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. சிறிதளவு நிலம் மட்டுமே கூடுதலாக கிடைக்க வேண்டும். இது நீதிமன்ற வழக்கில் உள்ளது. வழக்கை விரைவாக முடிக்க உதவுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பேசியுள்ளோம். முதல்வர் அடிக்கல் நாட்டிவிட்டால், அடுத்த 15 மாதத்தில் ஓடுபாதை மற்றும் விமான தளத்துக்கு அவசியமான கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும்.

பி7, பி37, ஏ320 ஆகிய 150 முதல் 190 இருக்கைகள் கொண்ட விமானமும், கியூ400, ஏடிஆர் 72 என்ற 60 முதல் 70 இருக்கைகள் கொண்ட விமானமும் காரைக்கால் நிலையத்தில் இருந்து இயக்க முடியும். தவிர, ஐ.எல்.76 டிடி90 என்ற கார்கோ விமானமும் இயக்க முடியும் என்றார் சௌத்திரி.


விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் காரைக்காலை சுற்றி இருக்கும் வழிபட்டு தலகலும் மேலும் வெளிநாட்டு சென்று வருபவர்களும் பயன் அடைவார்கள் .மத்திய அரசும் புதுவை அரசும் விரைந்து செயல்படவேண்டும் என்பது மக்களின் ஆவல் ! செயல்படுமா ?
 

Monday 23 December 2013

Kodikkalpalayam Nikkah -பள்ளிவாசல் சான்றிதழ்களை திருமணப் பதிவாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தல்

பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களின் சான்றிதழ்களை திருமணப் பதிவாக ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும் நாடாளுமன்றத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தல்
 
புது...டெல்லி, டிச.18-
 
பள்ளிவாசல், கோவில், தேவாலயங்களில் நடை பெறும் திருமணங்களின் பதிவுச் சான்றுகளை ஏற்று பாஸ்போர்ட் வழங்க விதி களை தளர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் மத்திய -மாநில அரசுகளுக்கு வலியுறுத் தியவாறு சில மாநிலங்களில் திருமணப் பதிவு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
 
இதனால் தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங் களில் பாஸ்போர்ட் பெறுவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாதவாறு பாதிக்கப்பட்டு வருகின்றனர். காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இது தொடர் பாக பல முறை முயற்சி மேற் கொண்டு வலியுறுத்தி வந்துள் ளார்.
 
இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ. அஹமது சாஹிப் வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் பிரிவு உயர் அதி காரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உத்தர வுகள் பிறப்பித்தும் இன்னமும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது பாரம்பரிய அடிப்படையில் உள்ளூர் திருமண சான்றிதழ் களை இணைத்திருந்தாலும், திருமணப்பதிவாக சார்பதிவா ளர் அலுவலக சான்றையே கேட் கின்றனர். இல்லையேல், பாஸ் போர்ட் வழங்காமல் விண்ணப் பத்தை நிராகரித்து விடுகின்ற னர். இப்பிரச்சினையை நேற்று (டிசம்பர் 17) நாடாளுமன்ற மக்களவையில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., எழுப்பினார்.
 
விதி எண். 377-ன் கீழ் அவர் முன்வைத்த கோரிக்கை வருமாறு-திருமண கட்டாய பதிவுச் சட்டம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழகத்தில் 2009-ஆம் ஆண்டு திருமண கட்டாய பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், மக்கள் மத்தியில் இச் சட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை. இதனால் இச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யாதோர் மீது அரசு நடவடிக்கை ஏதும் எடுப்ப தில்லை. வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு பொது மக்கள் விண் ணப்பிக்கும் போது இந்த சட்டத்தை சுட்டிக்காட்டி பெரும் சிக்கலை பாஸ்போர்ட் அதிகாரி கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின் றனர்.
 
இதுபோன்று புதிய பாஸ்போர்ட் கோரியோ அல்லது தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவோ விரும்பி விண் ணப்பிப்போர், தங்களின் தொடர்புடைய கோயில்கள், மஸ்ஜித்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் உள்ளூர் நிர்வா கத்திடமிருந்து பெறப்பட்ட பாரம்பரிய திருமணச் சான்றி தழை விண்ணப்பத்துடன் இணைத்திருந்தாலும், சார்பதிவாளரிடமிருந்து சான் றிதழ் பெறப்படவில்லை எனக் காரணம் கூறி விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தினர் நிராகரித்து விடுகின்றனர்.பாஸ்போர்ட் அதிகாரிகளின் நிர்பந்தத்தின் பேரில் சார்பதி வாளர் அலுவலகங்களில் திரு மணங்களை பதிவு செய்ய முன் வருகின்றபோது, திருமணமாகி 90 நாட்களுக்குள் மட்டுமே பதிவு செய்ய முடியும். இல்லையேல் பதிவு செய்ய முடியாது என கூறி விடுகின்றனர்.
 
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யாமல் பாரம்பரிய நடை முறைப்படி திரும ணங்கள் செய் துள்ளோர் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது இதுபோன்ற சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.திருமண கட்டாய பதிவுச் சட்டத்தை மாநில அரசே தண்டனைக்குரிய குற்றமாக கருதாமல் இருக்கும்போது , பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிராகரிப்பதன் மூலம் பாஸ் போர்ட் நிர்வாகத்தால் தாங்கள் தண்டிக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
 
எனவே, நடைமுறை சாத்திய மாக தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தினரிடமிருந்தும் இருந்து வரக்கூடிய வழக்கமான மஸ்ஜித், கோயில், தேவாலயங் களில் நடைபெறும் திருமணங் களில் அந்தந்த நிர்வாகங்கள் தரக்கூடிய திருமண பதிவுச் சான்றை ஆதாரமாக கொண்டு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். அல்லது பாஸ்போர்ட் விதி முறைகளில் ஒன்றான கணவன் - மனைவி புகைப்படம் ஒட்டப் பட்ட உறுதி மொழி பத்திரத்தை (அபிடவிட்) ஏற்று பாஸ்போர்ட் வழங்க வேண்டும். திருமண சான்று பிரச் சினையால் பாஸ்போர்ட் கிடைக் காமல் பாதிக்கப்படுகின்றோர் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து கொண்டிருக்கும் சூழ் நிலையை கருத்தில் கொண்டு அரசு இனியும் காலம் தாழ்த்தா மல் பாஸ்போர்ட் வழங்கும் நட வடிக்கைகளில் விதிமுறை களை தளர்த்தி இதுதொடர்பாக உரிய உத்தரவை விரைந்து பிறப்பிக்க மத்திய வெளியுறவு விவாகரங்களுக்கான அமைச் சகத்தை வேண்டுகிறேன். இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. கூறினார்.

Saturday 21 December 2013

சமையல் எரிவாயு மானியத்தை வங்கி கணக்கில் பெறும் வழிமுறை :



1.முதலில் தமது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வங்கிக்கு செல்ல வேண்டும்
2.பின்னர் கேஸ் விநியோகஸ்ரரிடம் சென்று ஆதார் எண்ணை அளிக்க வேண்டும்

ஆதார் வராமல் அல்லது எடுக்காதவர் நிலை என்ன ? கேஸ் நுகர்வோர் வெளிநாட்டில் இருந்தால் நிலை என்ன ? குழப்பம் இல்லாமல் இல்லை அரசு தெளிவு படுத்த வேண்டும் செய்வார்களா?

இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்டு இல்லை... உள்தாள்தான்: தமிழக அரசு உத்தரவு



சென்னை: ரேசன் கார்டில் 2014ம் ஆண்டிற்கும் உள்தாளின் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.உணவு துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன...் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசியதாவது:

31.12.2013 அன்றுடன் முடிவடைய உள்ள புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றார்.2014ம் ஆண்டிற்கு ஏற்கனவே உள்தாள் ஒட்டப் பட்டுள்ளதால் இதனையே பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

9 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் ரேஷன் அட்டை பலரிடம் கிழிந்து கந்தலாகிவிட்டது. வரும் ஆண்டிலாவது புதிய அட்டை கிடைக்கும் என்று எண்ணியிருந்த மக்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ல் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை அதற்கான எந்த பணியும் தொடங்கப்படாமலே உள்ளது. ஸ்மார்ட் அட்டை கிடைக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.

Monday 9 December 2013

2014 நாடாளுமன்ற தேர்தலை எதிர் நோக்கி

5 மாநில தேர்தல் முடித்து வரும் 2014 ஏப்ரல் -மேயில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர் நோக்கி மக்களை மீடியாக்கள் கொண்டு செல்ல தயார் ஆகி வருகிறார்கள் .
 
 
அதை விட பிஜேபி -காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தேர்தல்அறிக்கைகளை பொது மக்கள் நேரடியாக பங்குகொள...்ள தங்களின் இணைய தளங்களின் வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன .
 
இதை பயன்படுத்தி இந்த கட்சிகளில் ஒருவர் 2014 ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதால் உங்கள் எண்ணங்களை தெரிவிக்காலமே உங்கள் பார்வைக்கு இந்த தளங்களின் சென்றால்...
 
 
 

கேஸ் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு இந்திய அரசு அறிவிப்பு


 வரும் 2014 ஜனவரி 1 முதல் திருவாரூர் மாவட்டத்தில் மார்க்கெட் விலையில் கேஸ் கிடைக்கும் என்றும் மானிய விலையில் வாங்க ஆதார் அட்டை எண்ணை கொடுத்து அதனை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்...டும் என்பது அறிவிப்பு .

மார்க்கெட் விலை என்றால் ரூபாய் 1100 வரை இருக்குமே அதனை சாதாரணமான ஏழை நடுத்தர மக்களால் வாங்கமுடியுமா அதைவிட வங்கியில் எப்போது மானிய தொகை வரும் எண்பதும் கேள்விகுறி .

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கும் இவ்வேளையில் ஆதார் எண் இல்லாமல் இருக்கும் மக்கள் நிலை என்ன ?

பாவம் மக்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் ?

Wednesday 4 December 2013

பல கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட ஆசிரியர் பிடிபட்டார்

நாகையில்

பல கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட ஆசிரியர் பிடிபட்டார்

பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு


திருவாரூர், டிச.4-

நாகையில் பல கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட ஆசிரியரை போலீசார் பிடித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆசிரியர்

நாகை மாவட்டம் ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தாவூத்கான் மகன் அக்பர்அலி(வயது34). இவர் ஏனங்குடி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் பணம் கட்டுபவர்களுக்கு இணையதளம் மூலமாக பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், அந்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி இருந்தார். இதை நம்பி கேதாரிமங்கலம், ஏனங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் பணம் கட்டி இருந்தனர். இந்த நிலையில் பணம் கட்டியவர்களுக்கு அவர் பணத்தை இரட்டிப்பு செய்து கொடுக்கவில்லை, பணத்துக்கான வட்டியும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் பணம் கொடுத்தவர்கள் கேட்டனர். ஆனால் பணத்தை கொடுக்காமல் அக்பர்அலி தலைமறைவாகி விட்டார். அவர் ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது அவர் வேலைக்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கடத்த முயற்சி

இந்த நிலையில் அக்பர்அலியை நேற்று சிலர் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி நாகை, திருவாரூர் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூர் நோக்கி வாழவாய்க்கால் அருகே 2 கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. அதை சுற்றிவளைத்து பிடித்த போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து போலீசார் அந்த கார்களில் இருந்த அனைவரையும் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

ரூ.45 கோடி மோசடி?

விசாரணையில் அக்பர்அலியை, நாகூர்கனி, காதர்நிஜாமுதீன், முகமதுயூசப், முகமதுநஜீம், பஜ்ருதீன் உள்பட 7 பேர் கடத்தி செல்ல முயன்றதும், அந்த 7 பேரும் அக்பர்அலியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் போலீசாரிடம் பிடிபட்ட அக்பர்அலி, நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்கப்படுகிறார். அவர் ரூ.45 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளனர்.

இந்த நிலையில் பணம் மோசடி செய்ததாக தேடப்பட்ட அக்பர்அலி பிடிபட்டது தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
DAILYTHANTHI DATED 4/12/2013.

Tuesday 3 December 2013

பருவமழை: தமிழகம் முழுவதும் இன்று மின்வெட்டு இல்லை

பருவமழை காரணமாக தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.3) மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 வாரங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையே இடைவெளியில்லாமல் இருந்தது. எனவே, தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல் கிராமப் பகுதிகளிலும் கூட செவ்வாய்க்கிழமை மின்வெட்டு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பருவமழை பெய்யாதது, பராமரிப்புப் பணிகள் மற்றும் போதிய நிலக்கரி இல்லாதது போன்ற காரணங்களால் தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், நவம்பர் 2-வது வாரத்திலிருந்து சென்னையைத் தவிர பிற இடங்களில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருந்தது. இந்த நிலையில், மின்வெட்டைக் குறைப்பதற்காக சென்னையில் திங்கள்கிழமை (டிச.2) முதல் சுழற்சி முறையில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்செய்யப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருவதால் மின் பயன்பாடு குறைந்தது. இதனால், கடந்த 2 நாள்களாகவே மின் நிலைமை மேம்பட்டுள்ளது.

சென்னையில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு பல இடங்களில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், செவ்வாய்க்கிழமை மின்வெட்டு செய்ய வேண்டிய அவசியமே எழவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, அவர்கள் மேலும் கூறியது:
மின்வெட்டு இல்லாத நிலைமைக்கு பருவமழையே முக்கிய காரணம். மழை நீடித்தால் மின்வெட்டு இருக்காது.
அதோடு, வல்லூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 4 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நன்றாக உள்ளது. இந்த யூனிட்டுகளில் மட்டும் 1,350 மெகாவாட் மின்சாரம் செவ்வாய்க்கிழமை உற்பத்தி செய்யப்பட்டது.

இதனால், மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வடசென்னை இரண்டாவது ஸ்டேஜில் உள்ள 2-வது யூனிட்டில் கிறிஸ்துமஸýக்குப் பிறகு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது உலையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் உற்பத்தி திங்கள்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கினால் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை வெகுவாகக் குறையும் என அவர்கள் தெரிவித்தனர்

Friday 29 November 2013


கொடிநகர் ஜனாசா 28/11/2013


நமதூர் தெற்கு தெரு சூபி வீட்டு அப்துல் மஜீத் அவர்களின் மகனார் நூருல் அமீனின் கைக்குழந்தை நடு கொத்த தெருவில் மௌத் .

ஜனாசா நல்லடக்கம் அசார் தொழுகைக்கு பிறகு மாலை 4:45 மணிக்கு    

மேலதெரு பள்ளிவாசல்



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நகரசபை கூட்டத்தில் கோரிக்கை

திருவாரூரில்

கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

நகரசபை கூட்டத்தில் கோரிக்கை


திருவாரூர், நவ.26-

திருவாரூரில் கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நகரசபை கூட்டம்

திருவாரூர் நகராட்சி கூட் டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் ரவிச்சந் திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில், நகராட்சி ஆணையர் தர்ம லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

ஜாகீர்உசேன்(காங்கிரஸ்):-

கொடிக்கால்பாளையம் பள்ளிக்கூடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு டெண் டர் விடப்பட்டும் பணிகளை தொடங்கவில்லை.

ஆர்.டி.மூர்த்தி (அ.தி. மு.க.):- திருவாரூர் நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதற்கு அனைத்து வார்டு களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மடப்புரம் சம்பத் (காங்கி ரஸ்):- திருவாரூர் பேட்டையில் குடியிருக்கும் துப்பரவு பணி யார்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

கோமாரி நோய்

செந்தில் (துணைத்தலை வர்):- நாய் தொல்லை அதிக மாக உள்ளது. வெறி நாயால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ஜமால்முகமது(தி.மு.க.):-

கோமாரி நோயால் மாடுகள் பாதிக்கபட்டு வருகின்றன. கோமாரி நோயை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வரதராஜன்(சுயேச்சை):- ராமநாதன் நகரில் சாலை மிகவும் பழதடைந்து உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோகன் (தி.மு.க.):- கிடாரங்கொண்டான் பை-பாஸ் சாலையை மேடு, பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும். திருவாரூர் பகுதிகளில் மழை வெள்ளம் வடிந்தோடும் வகையில் வடிக்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ரவிச்சந்திரன் (தலைவர்):-

திருவாரூர் நகரில் 15 நாட் களில் ஆக்கிரமிப்புகள் அகற் றப்படும். உறுப்பினர் களின் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.