Sunday 31 May 2015

மாகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு


நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான மாகி நூடுல்ஸில் நச்சுப்பொருள் கலந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த நிறுவனத்தின் மீது, உத்தரப் பிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு, மருந்து தரக் கட்டுப்பாட்டு நிர்வாகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதவிர, அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக, ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாராபங்கி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரி வி.கே.பாண்டே கூறியதாவது:
மாநில உணவுப் பாதுகாப்பு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரி பி.பி.சிங்கின் அனுமதியுடன், நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு எதிராக பாராபங்கி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெஸ்லே நகால் கலன் தொழிற்சாலை, தில்லியைச் சேர்ந்த நெஸ்லே இந்தியா, தில்லியில் உள்ள ஈஸி டே தலைமை விற்பனையகம், பாராபங்கியில் உள்ள ஈஸி டே விற்பனையகம், அந்த நிறுவனத்தின் மேலாளர்களான மோகன் குப்தா, ஷபாப் ஆலம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் வி.கே.பாண்டே.
முன்னதாக, பாராபங்கியில் உள்ள ஈஸி டே விற்பனையகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாகி நூடுல்ஸ் மாதிரிகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், மோனோ சோடியம் குளூடேமேட், காரீயம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, 17 மடங்கு அதிகமாக காரீய நச்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடேயே, மாகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக, அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட 3 பேர் மீது உள்ளூர் வழக்குரைஞர் ஒருவர் பாராபங்கி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
திரையுலகைச் சேர்ந்த இந்த பிரபலங்கள், அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, மாகி நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு என விளம்பரங்களில் நடித்துள்ளனர்.
இது, குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர் நலனில் விளையாடும் செயலாகும் என்றார் அந்த வழக்குரைஞர்.

திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் நகரசபை தலைவர் தகவல்


திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் கூறினார்.
நகரசபை கூட்டம்திருவாரூர் நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் சிவசங்கரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
செந்தில் (துணைத்தலைவர்):– ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் தான் திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். ராணுவ நகரில் ஒரு மாதத்துக்கு மேலாக பாதாள சாக்கடை குழாயில் கசிவு உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
சம்பத் (காங்கிரஸ்):– அனைத்து வார்டுகளிலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தாஜுதீன் (தி.மு.க.):– 27–வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தெரு விளக்கு சீரமைப்புகாமராஜ் (தி.மு.க.):– 20–வது வார்டில் அனைத்து தெரு விளக்குகளும் நீண்ட காலமாக ஒளிரவில்லை. தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும்.
அசோகன் (தி.மு.க.):– காட்டுக்கார தெருவில் குடிநீர் குழாய் பழுதடைந்து இருப்பதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலையும் சீரமைக்கப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர் வசதியில் உள்ள குறைபாடுகளை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமையாக அகற்றப்படும்வரதராஜன் (சுயேச்சை):– ராஜா தெருவில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அப்பகுதியில் குடிநீர் வழங்கும் பணியும் கடந்த சில நாட்களாக சரிவர நடைபெறவில்லை.
ரவிச்சந்திரன் (நகரசபை தலைவர்):– திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும். திருவாரூரில் உள்ள ராணுவ நகரில் பாதாள சாக்கடை குழாய் கசிவை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மின்விளக்குகளை ஒளிர செய்ய தேவையான சாதனங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மின்சாதனங்கள் வந்தவுடன் பழுதடைந்த தெரு விளக்குகள் உடனே சீரமைக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் சீராகும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Saturday 30 May 2015

புகையிலை இல்லாத உலகம்!

‘புகையிலை இல்லாத உலகம்’ என்பது கனவல்ல நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார்கள் புகையிலைத் தடுப்பு போராளிகள். பொதுமக்கள் புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட, இந்திய அரசு பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. WHO நிறுவனத்தின் ஆர்டிகள் 5.3படி புகையிலை விற்பனை நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை  விதித்திருந்தது.  ஆனால் ஐடிசி உள்ளிட்ட சில நிறுவனங்கள் அவற்றை மீறி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு புகையிலையின் தீமைகள் மற்றும் தடைச்சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிச்சயம் தேவை என்றார் புகையிலைத் தடுப்பு மையத் தலைவர் டாக்டர் இ.விதுபாலா.
‘இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மற்ற அரசின் அனைத்துத் துறைகளின் கூட்டான பங்களப்பும் தேவை. பள்ளிக் குழந்தைகளுக்கு புகையிலைத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள், பரிசுக்கள் போன்றவற்றை நிராகரிக்க வேண்டும் என்றார் NFTE யைச் சேர்ந்த அதிகாரி சிறில் அலெக்ஸாண்டர். தவிர ஜி.ஓ 242 ஆணையின் படி தமிழ்நாடு கல்வித் துறையைச் சார்ந்த எந்த மாணவனும் புகையிலைத் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, அவர்கள் வழங்கும் உதவித் தொகையையோ, மாணவர்களுக்கு நடத்தும் போட்டிகளில் வழங்கும் பரிசு அல்லது சான்றிதழைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு ஆதாயம் தரும் நிகழ்வுகள் எதுவாக இருப்பினும் தவிர்க்கப்பட வேண்டும். என்றும் கூறினார்.
உலகின் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்பதுடன் அவர்களுடன் வியாபார கூட்டு அல்லது வேறு எவ்வகைத் தொடர்பும் இல்லாமல் அவர்களைத் வர்த்தகத்திலிருந்து துண்டிக்க வேண்டும் என்றார். இதன் மூலம், அவர்களுக்கு லாபம் குறைவதோடு மட்டுமின்றி பலமும் குறையும். சமூக அக்கறையின்றி செயல்படும் இதுப் போன்ற நிறுவனங்களின் அலட்சியமே பல உயிர்களைக் கொல்லும் புற்றுநோய் பாதிப்புக்களுக்கு முக்கிய காரணம்.
அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் புகையிலை ஒழுப்புச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வளரும் நாடுகளான பிலிப்பைன்ஸ், ப்ரேசில், இஸ்தோனியா போன்ற நாடுகளும் தொடர்ந்து புகையிலை அற்ற நாடுகளாக மாறிக்கொண்டிருக்க, நம் நாடும் அந்த இலக்கினை நோக்கி முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார் தொழில்நுட்ப நிபுணர் ப்ரணாய் லால்.
நம் நாட்டில் புகையிலை ஒழிப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு  உள்ளது. புகையிலைப் பொருட்கள் இல்லாத உலகம், மக்களின் ஆயுளை நீட்டிப்பதோடு, மகிழ்ச்சி நிரம்பியை வாழ்வையும் தரும் என்றார் டாக்டர் இ.மதுபாலா.

நமதூர் மௌத் அறிவிப்பு 30/05/2015

  
நமதூர் தெற்குத்தெரு சேனா வீட்டு பைரோஸ்  அவர்களின் தகப்பனாரும், கு செ  ,பக்கிர் முஹம்மது அவர்களின் மருமகனும் ,நிஜாமுதீன் அவர்களின் மாமானருமாகிய செய்யது அஹமது அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 30/05/2015 சனி  கிழமை மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

Friday 29 May 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 29/05/2015

  
நமதூர் புதுமனைத்தெரு ஷரிப் காலனி ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனார் ,சைக்கிள் கடை ஜெஹபர் அலி  அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 29/05/2015 வெள்ளிக் கிழமை மாலை 5  மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

நமதூர் மௌத் அறிவிப்பு 29/05/2015

  
நமதூர் வடக்கு  தெரு பாரிசன் காலனி போயாகட்டை வீட்டு முஹம்மது ரபி அவர்களின் மனைவியும் ,யூசுபதீன் அவர்களின்   தாயாருமான சகினா பீவி அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 29/05/2015 வெள்ளிக் கிழமை  காலை 10;30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

Thursday 28 May 2015

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
 முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரமாக அதிகரித்தது.
 விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
 பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
 பிற பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
 இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 1-ஆம் 
 தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 
 மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
 விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு தொடர்பாக தேர்வர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்த கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 
 8012594109, 8012594119, 8012594124, 8012594126 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 22 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம்: பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்குரிய முக்கியப் பாடமான இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக சரிந்தது. முந்தைய ஆண்டில் 2,710 பேர் முழு மதிப்பெண் பெற்ற நிலையில், அது இந்த ஆண்டு 124 ஆகக் குறைந்துவிட்டது.
 பிற முக்கியப் பாடங்களான வேதியியல், உயிரியல் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துவிட்டது.
 பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம் என்பதால், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 22 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 கடந்த ஆண்டு 87 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர்.

தமிழக மக்களை வாட்டி வதைத்த ‘கத்திரி’ வெயில் நாளையுடன் விடை பெறுகிறது


, 







தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) விடை பெறுகிறது. சென்னையில் வெயிலுக்கு முதியவர் பலியானார்.

கத்திரி வெயில்

அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் மழையுடன் தான் தொடங்கியது. ஆனால் அதற்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. பெரும்பாலான நகரங்களில் வெயிலின் அளவு 108 டிகிரியை தொட்டது.

குறிப்பாக சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுத்தது. சென்னை மீனம்பாக்கத்தில் இந்த ஆண்டின் அதிகபட்சமாக கடந்த 24 மற்றும் 25–ந்தேதிகளில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதுகடந்த 10 ஆண்டுகளில் அடித்த அதிகபட்ச வெயில் அளவுகளில் ஒன்று. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதையே தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். சிறுவர்களும் விளையாட செல்லாமல் வீட்டிலேயே டி.வி, முன்னால் அமர்ந்து பொழுதை கழித்தனர்.

அதிகபட்ச பதிவு

தமிழக மக்களை கடந்த 24 நாட்கள் வாட்டி வதைத்த அக்னிநட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) விடை பெறுகிறது. இனிவரும் நாட்களில் படிப்படியாக வெயிலின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழையும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே பருவமழை தொடங்கும் போது, தமிழகத்தில் வெயிலின் அளவு வெகுவாக குறையவாய்ப்பு இருக்கிறது. அக்னிநட்சத்திரத்தின் இறுதிக்கட்டமான நேற்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெப்பத்தின் அளவு குறைந்தே காணப்பட்டது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–

இடியுடன் கனமழை பெய்யும்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று காலை 8½ மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர கணக்கீட்டின்படி அதிகபட்சமாக வேலூரில் 2 சென்டிமீட்டர் மழை பெய்தது. வடதமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வடதமிழ்நாட்டில் கடற்கரை மாவட்டங்களை தவிர உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய காற்றுடன் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

ஜூன் 3–ந்தேதி பருவமழை

அக்னி நட்சத்திரம் முடிவடைந்து ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும். வரும் 31–ந்தேதி பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் மழையின் அளவையும், காற்றின் வேகத்தையும் அடிப்படையாக கொண்டு தான் பருவமழை தொடங்கும் நாட்களை குறிக்க முடிகிறது.

இதில் 4 நாள்கள் முன்பாகவோ, பின்பாகவோ பருவமழை தொடங்கலாம். அந்த வகையில் ஜூன் 3–ந்தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday 27 May 2015

திருவாரூர், மன்னார்குடியில் "அம்மா' உணவகம் திறப்பு


திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை "அம்மா' உணவகம் திறக்கப்பட்டது.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் ரூ. 43 லட்சத்தில் "அம்மா' உணவகம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல கூத்தாநல்லூர் பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் "அம்மா' உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகங்களை சென்னையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மன்னார்குடி.யில்... மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டையில் அம்மா உணவகத்தை ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கான கல்வெட்டை நகர்மன்றத் தலைவர் டி. சுதா அன்புச்செல்வன் திறந்து வைத்து, பொதுக்களுக்கு மலிவு விலை உணவை வழங்கி விற்பனையை தொடங்கிவைத்தார்.
நகர்மன்ற துணைத் தலைவர் த. வரலெட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் த. உதயக்குமாரி, துணைத் தலைவர் கா. தமிழச்செல்வம், கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, வட்டாட்சியர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4339 ஆசிரியர்கள் பணிகள்


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.)  பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 10
மொத்த காலியிடங்கள்: 4339
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அதிகாரிகள் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்: 585
1. துணை முதல்வர் - 30
2. நிதி அலுவலர் - 01
3. உதவியாளர் - 75
4. கிளார்க் (UDC)- 153
5. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 312
6. இந்தி மொழிபெயர்ப்பாளர் - 05
7. சுருக்கெழுத்தர் கிரோடு-II - 08
8. உதவி ஆசிரியர் - 01
ஆசிரியர் பணி மற்றும் காலியிடங்கள்: 3754

I . முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (குரூப் பி பணி) - 387
1. ஆங்கிலம் - 45
2. இந்தி - 20
3. இயற்பியல் - 38
4. வேதியியல் - 30
5. பொருளாதாரம் - 32
6. வணிகவியல்  - 68
7. கணிதம் - 28
8. உயிரியல் - 36
9. வரலாறு - 30
10. புவியியல் - 21
11. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 39

II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) (குரூப் பி பணி) - 654
1. ஆங்கிலம் - 72
2. இந்தி - 67
3. சமூக கற்கைகள் - 59
4. அறிவியல் - 61
5. சமஸ்கிருதம் - 62
6. கணிதம் - 70
7.  P&HE - 117
8.  AE - 60
9.  WE  - 86
III. இதர கற்பித்தல் பணியிலிருந்து (குரூப் பி பணி) - 74
1. நூலகர் - 74
IV. முதன்மை ஆசிரியர் மற்றும் மாற்ற அழைப்பு விடுத்தது (இசை) (குரூப் பி பணி) - 2639
1. ஆரம்ப பள்ளி ஆசிரியர் - 2566
2.  PRT (இசை) - 73

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
1. துணை முதல்வர் மற்றும் நிதி அலுவலர் பணிக்கு ரூ.1,200
2. மற்ற அனைத்து பணிகளுக்கு ரூ.750

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2015
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://kvsangathan.nic.in/EmploymentDocuments/EMP-NTC-18-05-15.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday 26 May 2015

ஆதார் எண் அளிக்காவிட்டாலும் வாக்களிக்க அனுமதி: தேர்தல் அதிகாரி விளக்கம்!












 ஆதார் எண்ணை அளிக்காத எந்த வாக்களார்களின் எந்தவொரு தேர்தல் சேவையும் மறுக்கப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''முற்றிலும் பிழைகளற்ற மற்றும் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டு இயதிய தேர்தல் ஆணையம் பணித்தவாறு தேசிய அளவில் வாக்காளர் பட்டியல்களை செம்மைப்படுத்தி வாக்காளர் விவரங்களை உறுதிபடுத்தும் திட்டம் ((NERPAP), 03.03.2015 முதல் தமிழ்நாட்டில் வெற்றிகரமான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் விவரங்களை இணைப்பதும் NERPAP திட்டத்தின் நோக்கமாகும். மேலும் வாக்காளர்களிடமிருந்து அவர்களது கைபேசி/மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பெற்று அவற்றை வாக்காளர் பட்டியல் தரவுதளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் தேர்தல் தேதி, வாக்காளர் பட்டியல் திருத்தக்கால அட்டவணை, பெயர்நீக்கல்/திருத்தலுக்கான அறிவிப்பு முதலியவற்றையும், மேலும் இதர உதவிச் சேவைகளையும் அவர்களுக்கு அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக வாக்காளர்களிடமிருந்து தகவல்களைப் பெற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்தனர். இதற்காகவும், படிவங்கள் 6,7,8 மற்றும் 8A ஆகியவற்றை வாக்காளர்களிடமிருந்து பெறுவதற்காகவும் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 13 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றை தீர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. 

24-05-2015 வரை, தமிழ்நாட்டிலுள்ள 5.62 கோடி வாக்காளர்களில் 5.54 கோடி (98.72%) வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 4.97 கோடி (88.48%) வாக்காளர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆயத்த நிலையில் உள்ளது. 

இந்நிலையில், ஆதார் எண்ணை அளிப்பது வாக்காளர்களின் சுய விருப்ப அடிப்படையிலானது என்று இயதிய தேர்தல் ஆணையம் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆதார் எண்ணை அளிக்காத காரணத்தினால் எந்த ஒரு வாக்காளருக்கும் தேர்தல் தொடர்பான எந்த ஒரு சேவையும் மறுக்கப்படாது. ஆதார் எண்ணை அளிக்காத காரணத்தினால், புதிதாய் பெயர் சேர்த்தல்/புதிதாய் பெயர் சேர்த்தலுக்கான ஆட்சேபணை தெரிவித்தல் அல்லது வாக்காளர் பட்டியலிலிருயது ஒரு வாக்காளரின் பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படமாட்டாது. வாக்காளர் பட்டியல்/வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை/வாக்காளர் சீட்டு ஆகியவற்றிலோ, பொதுமக்கள் பார்க்கத்தக்க வகையில் வலைதளத்திலோ, பொதுமக்களுடன் பகிரத்தக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் எந்த ஒரு ஆவணத்திலோ அல்லது பொதுத்தளத்திலோ, ஒரு வாக்காளரின் ஆதார் எண் காண்பிக்கப்படமாட்டாது'' எனக் கூறப்பட்டுள்ளது.

Monday 25 May 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 25/5/2015

 கொடிக்கால்பாளையம் கத்தார்வாசிகள் குழுவின் தலைவா் சி.பா.அ நஸீருதீன் அவர்களின் தகப்பானார் கொடிக்கால்பாளையம் ஜெயம்தெரு சி.பா .அப்துல் வஹாப் அவர்கள்
இன்று வ்ஃபாத் ஆகிவிட்டார் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன.."



அவர்களின் மறுமையின் வாழ்விற்கு அல்லா இடத்தில் தூவா செய்யவும்

அம்மா உணவகங்களை திறந்து வைத்து புதிய திட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்து

  • தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
    தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
  • அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
    அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா ஞாயிறன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததோடு புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இவருக்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், காவல்துறையினருக்கு வாகனங்களையும் கடலோர ரோந்து வாகனங்களையும் வழங்கினார்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மாநகராட்சியில் 45 அம்மா உணவகங்கள், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 4 அம்மா உணவகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள 124 நகராட்சிகளில் 128 அம்மா உணவகங்கள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 23 அம்மா உணவகங்கள், என மொத்தம் 201 அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 

ஜெயலலிதா ஆணை பிறப்பித்து கையொப்பமிட்ட ஐந்து திட்டங்கள் வருமாறு:

1. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்;

2. தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்;

3. பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம்;

4. 1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்; மற்றும்

5. மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம்;

ஆகிய திட்டங்களில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.

Saturday 23 May 2015

தமிழக அமைச்சர்கள் பட்டியல்

தமிழக அமைச்சர்கள் மற்றும் துறைவாரியான  பெயர் பட்டியல்கள் கீழ்வருமாறு:
முதல்வர் ஜெ. ஜெயலலிதா
பொதுத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை.
தமிழக அமைச்சர்கள்
1. திரு ஒ .பன்னீர்செல்வம்
நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர்தல், பொதுப்பணித் துறை)
2. திரு ஆர்.வைத்திலிங்கம்
வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை
3. திரு எடப்பாடி கே . பழனிசுவாமி
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், வனத்துறை
4. திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன்
மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
5.திருமதி பி.வளர்மதி
சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை
6.  திரு செல்லூர் கே . ராஜு
கூட்டுறவுத் துறை
7. திருமதி. எஸ். கோகுல இந்திரா
கைத்தறி மற்றும் ஜவுளி துறை
8. திரு பி .மோகன்
ஊரகத் தொழில் துறை
9. திரு பி .பழனியப்பன்
உயர் கல்வித் துறை
10.  திரு ஆர் .காமராஜ்
உணவு மற்றும் இந்து சமய அறநிலைத் துறை
11 திரு எம்.சி. சம்பத்
வணிகவரி துறை
12. திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம்
சுற்றுச்சூழல் துறை
13. திரு டி .பி.பூனாச்சி
காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்
14. திரு பி .வி . ரமணா
பால்வளத் துறை
15. திரு எஸ். பி . சண்முகநாதன்
சுற்றுலாத்துறை
16. திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி
செய்தி, சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை
17. திரு டி.கே.எம். சின்னய்யா
கால்நடைப் பராமரிப்புத் துறை
18. திரு பி.தங்கமணி
தொழில் துறை
19. திரு. சுந்தர ராஜ்
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை
20. திரு. எஸ்.பி.வேலுமணி
நகராட்சி நிர்வாகம், கிராம மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை
21 கே .சி .வீரமணி
பள்ளிக்கல்வித் துறை
22 திரு.சி. விஜய பாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத் துறை
23. திரு வி . செந்தில் பாலாஜி
போக்குவரத்துத் துறை
24. திரு கே .ஏ. ஜெயபால்
மீன்வளத்துறை
25. முக்கூர் திரு என் .சுப்ரமணியன்
தகவல் தொழில்நுட்பத் துறை
26 திரு. என்.சுப்பிரமணியன்
ஆதிதிராவிடார் துறை
27. திரு. ஆர்.பி.உதயகுமார்,
வருவாய்த் துறை
28. எஸ்.அப்துல் ரஹீம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம்.

Friday 22 May 2015

13 மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடம்


திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 13 மாணவர்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
2014-2015 ஆம் கல்வியாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில், தேர்வெழுதிய 18,926 மாண வ, மாணவிகளில் 15,857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில் 74.6 சதவீதம், மாணவிகளில் 93.6 சதவீதம் என 83.78 மொத்த சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இதில் மன்னார்குடி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெ. ஜோஸ்வின் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தைப் பிடித்தார்.
முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ, முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி முபிதாபர்வீன், திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. சோபியா ஆகியோர் 498 மதிப்பெண் பெற்று மாநி ல மற்றும் மாவட்ட அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தனர்.
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. காயத்ரி, மன்னார்குடி செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. பிரித்தா, திருவாரூர் வாழச்சேரி மதர் இந்தியா மேல்நிலைப் பள்ளி (சுயநிதி) மாணவி ஆர்.கே. பர்கீஸ் தஸ்லிமா, திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ். ஸ்ரீஜனனி, மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். சபரிநாதன், மன்னார்குடி அசோகா சிசு விகார் மெட்ரிக் பள்ளி மாணவர் பி. ஹரிராம்பிரசாந்த், மாணவி பிரித்தி, திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி ஜே. சீதாளபிரியா, திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. சஸ்டிகா ஆகியோர் 497 மதிப்பெண் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்: மாவட்ட அளவில் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.ஜெ. வர்ஷா, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. சுவாதி ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும், உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். பவ்யா 493 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அன்னபூரணி 492 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர். திருவாரூர் மாவட்ட அளவில் நிகழ் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 83.78 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் 84.12 தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 21 May 2015

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் 83.78 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 94.04 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:
வருவாய் மாவட்டம்
தேர்வு எழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம்
பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு
30,014
29,425
98.04
342
விருதுநகர்
30,534
29,918
97.98
333
திருச்சி
39,315
38,379
97.62
407
கன்னியாகுமரி
27,979
27,215
97.27
407
பெரம்பலூர்
9,714
9,447
97.25
133
சிவகங்கை
20,684
20,011
96.75
261
தூத்துக்குடி
26,248
25,392
96.74
290
ராமநாதபுரம்
19,542
18,833
96.37
232
நாமக்கல்
26,995
25,870
95.83
305
கரூர்
14,048
13,453
95.76
184
கோவை
45,643
43,659
95.65
510
திருப்பூர்
30,157
28,718
95.23
320
திருநெல்வேலி
48,037
45,265
94.23
458
மதுரை
45,660
43,015
94.21
460
தஞ்சாவூர்
37,374
35,200
94.18
394
ஊட்டி
10,451
9,833
94.09
178
சென்னை
56,972
53,579
94.04
581
தருமபுரி
24,687
23,205
94
293
கிருஷ்ணகிரி
28,206
26,510
93.99
368
சேலம்
50,042
46,641
93.2
498
திண்டுக்கல்
28,737
26,718
92.97
325
புதுச்சேரி
19,419
18,050
92.95
291
காஞ்சிபுரம்
56,680
52,592
92.79
579
புதுக்கோட்டை
25,645
23,532
91.76
304
தேனி
18,319
16,646
90.87
194
அரியலூர்
11,759
10,665
90.7
153
திருவள்ளூர்
52,821
47,803
90.5
594
நாகப்பட்டினம்
24,047
21,467
89.27
267
வேலூர்
56,559
50,155
88.68
581
விழுப்புரம்
50,685
44,358
87.52
534
கடலூர்
39,561
34,280
86.65
398
திருவண்ணாமலை
35,380
30,223
85.42
459
திருவாரூர்
18,926
15,857
83.78
206
துபாயில் ஒரே பள்ளியைச் சார்ந்த 26 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 26 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், துபாய் பள்ளி 100 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: செயல் திட்டத்தை வகுத்தது தேர்தல் ஆணையம்


வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களது சொந்த ஊர்களில் நடைபெறும் தேர்தல்களில், மாற்று நபர் அல்லது இணைய சேவையின் மூலம் வாக்களிப்பதற்கு உரிமை அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான செயல் 
 திட்டத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
 அந்தச் செயல்திட்ட அறிக்கை தற்போது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தில்லியில் புதன்கிழமை பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்த செயல்திட்டத்தை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
 தேர்தல் ஆணையத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சம் 12,000 வெளிநாடுவாழ் இந்தியர்கள் மட்டுமே தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களிக்க அதிகப் பணம் செலவாகும் என்பதால் பலர் வருவதில்லை.
 இணையதள வாக்குச்சீட்டு: மனு தாக்கல் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை 14 நாள்கள் இடைவெளி உள்ளது. 
 இந்த இடைப்பட்ட காலத்தில், அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களுக்கான வாக்குச் சீட்டை அச்சடித்து அனுப்பி வைப்போம். அதில் வாக்களித்து வாக்காளர் திருப்பி அனுப்பி வைப்பார்.
 இந்தக் கால விரயத்தை குறைக்கும் வகையில், வாக்குச் சீட்டை இணையதளம் மூலம் அனுப்பி வைக்கலாம் என சட்ட அமைச்சகத்துக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்றார் நஸீம் ஜைதி.
 இதுகுறித்து சட்ட அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
 புதிய திட்டத்தின்படி, இணையதளத்தில் அனுப்பி வைக்கப்படும் வாக்குச்சீட்டை வாக்காளர் பதிவிறக்கம் செய்வதற்கான ஒருமுறைப் பயன்பாட்டு கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வேர்டு) வழங்கப்படும்.
 அந்தச் சீட்டில் வாக்களித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்காளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
 இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சீட்டை, அருகிலுள்ள இந்தியத் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கலாம் என்ற யோசனையும் பரிசீலனையில் உள்ளது.
 அந்த வாக்குச்சீட்டுகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அல்லது தேர்தல் ஆணையத்துக்கு, இந்தியத் தூதரகங்கள் அனுப்பிவைக்கும்.
 பின்னர், அந்த வாக்குச்சீட்டுகள் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சட்ட அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சட்டத் திருத்தம்: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில், 1950, 51 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
 மாற்று நபர் மூலம் வாக்களிக்கும் உரிமை (பதிலி வாக்குரிமை) பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வருகிறது.
 "தங்களது சொந்தத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாராகும்போது, வெளிநாடுவாழ் வாக்காளர் என்று பதிவு செய்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும்' என தேர்தல் ஆணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 வாக்காளருக்கான தகுதி: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெறாதவராக இருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இந்தியாவில் வாக்குரிமை பெற முடியும்.
 இதேபோல், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் எந்தவொரு பகுதிக்கு குடிபெயர்ந்தாலும், அங்குள்ள தொகுதிகளில் பொதுமக்கள் வாக்குரிமை பெறலாம்.