Monday 31 December 2018

விடைபெறும் 2018ம் ஆண்டு


வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற சேக் ஹசீனா

வங்கதேசத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி, இதுவரை 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்சி முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட கூடுதலான இடங்கள் ஆகும்.
தேர்தல் முறைகேடு புகார்கள், வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இத்தேர்தலை ''ஒரு கேலிக்கூத்தான தேர்தல்'' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் இதுவரை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளை ஏற்காத எதிர்கட்சிகள் மறுதேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.
''இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தவிர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்'' என்று எதிர்க்கட்சி தலைவர் கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
''நடுநிலை அரசு ஒன்றின் மேற்பார்வையில் மிக விரைவில் ஒரு புதிய நாடாளுமன்ற தேர்தல் நடத்திட வேண்டும்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்தியாவில் முஸ்லிம்கள் சிறப்பாக வாழும் மாநிலம் குஜராத்தா? தமிழ்நாடா?

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நாட்டிலேயே மற்றெந்த பகுதியையும்விட குஜராத்தில்தான் முஸ்லிம்களின் நிலை சிறப்பாக இருக்கிறது எனக்கூறியிருந்தார். இதற்கு உதாரணமாக சச்சார் கமிட்டி அறிக்கையை சுட்டிக்காட்டினார்.
சமூக பொருளாதார நிலை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
உண்மையில் 2006 சச்சார் கமிட்டியின் அறிக்கையின்படி மற்ற மாநிலங்களிலும் குஜராத்திலும் முஸ்லிம்களின் நிலை குறித்து குறிப்பிடப்பட்டுளள்து என்ன என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.
கல்வி
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி (2006 சச்சார் கமிட்டி இதன் அடிப்படையில் தயாரிக்கப்ட்டது) இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வியறிவு 59.1 சதவீதம். ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி கல்வியறிவு 65.1 சதவீதம்.
குஜராத்தில் மொத்தமாக கல்வியறிவு விகிதம் 69% ஆனால் இஸ்லாமியர்களின் கல்வியறிவு 73.5%. இந்துக்களின் கல்வியறிவைவிட முஸ்லிம்களின் கல்வியறிவு குஜராத்தில் 4% கூடுதல்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் கல்வியறிவு இன்னும் உயர்ந்தது. இந்துக்களின் கல்வியறிவு 77 சதவீதமாக இருக்கும் நிலையில் முஸ்லிம்களின் கல்வியறிவு 81% ஆனது.
மாநில வாரியாக கல்வியறிவு சதவீதம்
ஆனால் மேலே சொன்ன ஒரு புள்ளிவிவரம் மட்டும் வைத்து நாட்டிலேயே குஜராத்தில் தான் முஸ்லிம்களின் கல்வியறிவு சதவீதம் அதிகம் எனக்குறிப்பிட முடியாது.
ஏனெனில் கேரளாவில் இஸ்லாமியர்கள் கல்வியறிவு 89.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 82.9 சதவீதமாகவும், சத்தீஸ்கரில் 83 சதவீதமாகவும் உள்ளது.
    7-16 வயதில் உள்ள முஸ்லிம்கள் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதை கணக்கில்கொண்டால் கேரளாவும், தமிழகமும் குஜராத்தை வீழ்த்திவிடுகின்றன.
    இவ்விரு மாநிலங்களில் மேற்கூறிய வயதிலுள்ள முஸ்லிம்கள் சராசரியாக 5.50 ஆண்டுகள் பள்ளியில் செலவிடுகின்றனர். குஜராத்தில் முஸ்லிம் குழந்தைக

    ன் சராசரி 3.96 ஆண்டுகள் என்பதை ஒப்பிடும்போது குஜராத் மேம்பட்ட நிலையில் உள்ளது.
    குஜராத்தில் மதரஸாக்களில் குறைவான முஸ்லிம்களே கல்வி பயில்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம்கள் 25%.
    குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாவது படித்த முஸ்லிம்களின் அளவை கணக்கில் கொண்டால் குஜராத் இந்தியாவில் முதலிடத்தைப் பிடிக்கவில்லை. சச்சார் கமிட்டி அறிக்கையின்படி தேசிய சராசரியை(23.9%) முந்தியிருக்கிறது குஜராத் (26.1%).
    ஆனால் ஆந்திராவில்தான் பத்தாம் வகுப்பு வரை படித்த முஸ்லிம்களின் அளவு அதிகம் (40%). மேற்கு வங்காளம்தான் (11.9%) இப்பட்டியலில் கடைசியில் உள்ளது.
    வேலை வாய்ப்பு
    இந்தியாவில் 64.4% மக்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக 2006 சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது. இந்துக்களில் 65.8 சதவீதத்தினர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம்களின் 54.9 சதவீதத்தினர் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
    குஜராத்தில் வேலை வாய்ப்பு பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்துக்களில் 71 சதவீதத்தினரும் இஸ்லாமியர்களில் 61 சதவீதத்தினரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
    இருப்பினும், இங்கும் குஜராத்துக்கு முதலிடமில்லை. ஆந்திராவில் 72% முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் 71 சதவீதம். குஜராத் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
    அரசுத் துறைகளில் முஸ்லிம்களின் பங்கு
    குறிப்பிட்ட மாநில அரசுத் துறைகளில் முஸ்லிம்களின் பங்கு எவ்வளவு எனப் பார்த்தால், குஜராத்தில் 5.4 சதவீத இஸ்லாமியர்கள் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
    இந்தியாவில் அசாமில்தான் அரசு துறைகளில் 11.2 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர். மேற்கு வங்கம் (2.1%) கடைசி இடத்தில் உள்ளது.
      குஜராத் மாநில அரசுத்துறைகளில் உயர்பதவிகளில் முஸ்லிம்களின் நிலையானது, இந்திய அளவில் கடைசி நிலையில் இருக்கிறது. அங்கு 3.4 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே குறிப்பிட்ட துறைகளில் உயர்பதவிகளில் உள்ளனர். சுகாதார துறையில் 1.7% முஸ்லிம்களும் கல்வித்துறையில் 2.2% முஸ்லிம்களும் உயர்பதவிகளில் உள்ளனர்.
      பீகாரில் தான் அரசுத்துறைகளில் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அதிகளவு உள்ளனர். அங்கே கல்வித்துறையில் 14.8% முஸ்லிம்கள் உயர்பதவியில் உள்ளனர். சுகாதாரத் துறையில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பது கேரளாவில்தான்.
        சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

        Saturday 29 December 2018

        தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் சட்டமன்ற தொகுதிகள்

        *🗳🗳🗳பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக*

        *இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல்*

         *1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி*

        1.கும்மிடிப்பூண்டி
        2. பொன்னேரி (தனி)
        3. திருவள்ளூர்
        4. பூந்தமல்லி (தனி)
        5. ஆவடி
        6. மாதவரம்

         *2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.*

        1திருவொற்றியூர்
        2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
        3. பெரம்பூர்4. கொளத்தூர்
        5. திரு.வி.க. நகர் (தனி)
        6. ராயபுரம்

         *3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.*

        1விருகம்பாக்கம்
        2. சைதாப்பேட்டை
        3. தியாகராயநகர்
        4. மயிலாப்பூர்
        5. வேளச்சேரி
        6. சோழிங்கநல்லூர்

         *4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி*

        1. வில்லிவாக்கம்
        2. எழும்பூர் (தனி)
        3. துறைமுகம்
        4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
        5. ஆயிரம் விளக்கு
        6. அண்ணாநகர்

         *5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி*

        1. மதுரவாயல்
        2. அம்பத்தூர்
        3. ஆலந்தூர்
        4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
        5. பல்லாவரம்
        6. தாம்பரம்

         *6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

        1. செங்கல்பட்டு
        2. திருப்போரூர்
        3. செய்யூர் (தனி)
        4. மதுராந்தகம் (தனி)
        5. உத்திரமேரூர்
        6. காஞ்சிபுரம்

         *7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி*

        1. திருத்தணி
        2. அரக்கோணம் (தனி)
        3. சோளிங்கர்
        4. காட்பாடி
        5. ராணிப்பேட்டை
        6. ஆற்காடு

         *8. வேலூர் பாராளுமன்ற தொகுதி*

        1. வேலூர்
        2. அணைக்கட்டு
        3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
        4. குடியாத்தம் (தனி)
        5. ஆம்பூர்
        6. வாணியம்பாடி

         *9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி*

        1. ஊத்தங்கரை (தனி)
        2. பர்கூர்
        3. கிருஷ்ணகிரி
        4. வேப்பனஹள்ளி
        5. ஓசூர்
        6. தளி

         *10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி*

        1. பாலக்கோடு
        2. பென்னாகரம்
        3. தர்மபுரி
        4. பாப்பிரெட்டிபட்டி
        5. அரூர் (தனி)
        6. மேட்டூர்

         *11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி*

        1. ஜோலார்பேட்டை
        2. திருப்பத்தூர்
        3. செங்கம் (தனி)
        4. திருவண்ணாமலை
        5. கீழ்பெண்ணாத்தூர்
        6. கலசப்பாக்கம்

         *12. ஆரணி பாராளுமன்ற தொகுதி*

        1. போளூர்
        2. ஆரணி
        3. செய்யார்
        4. வந்தவாசி (தனி)
        5. செஞ்சி
        6. மைலம்

         *13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

        1. திண்டிவனம் (தனி)
        2. வானூர் (தனி)
        3. விழுப்புரம்
        4. விக்கிரவாண்டி
        5. திருக்கோயிலூர்
        6. உளுந்தூர்பேட்டை

         *14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி*

        1. ரிஷிவந்தியம்
        2. சங்கராபுரம்
        3. கள்ளக்குறிச்சி (தனி)
        4. கங்கவல்லி (தனி)
        5. ஆத்தூர் (தனி)
        6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

         *15. சேலம் பாராளுமன்ற தொகுதி*

        1. ஓமலூர்
        2. எடப்பாடி
        3. சேலம் (மேற்கு)
        4. சேலம் (வடக்கு)
        5. சேலம் (தெற்கு)
        6. வீரபாண்டி

         *16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி*

        1. சங்ககிரி
        2. ராசிபுரம் (தனி)
        3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)
        4. நாமக்கல்
        5. பரமத்தி வேலூர்
        6. திருச்செங்கோடு

         *17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி*

        1. குமாரபாளையம்
        2. ஈரோடு (கிழக்கு)
        3. ஈரோடு (மேற்கு)
        4. மொடக்குறிச்சி
        5. தாராபுரம் (தனி)
        6. காங்கேயம்

         *18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி*

        1. பெருந்துறை
        2. பவானி
        3. அந்தியூர்
        4. கோபிச்செட்டிபாளையம்
        5. திருப்பூர் (வடக்கு)
        6. திருப்பூர் (தெற்கு)

         *19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி*

        1. பவானிசாகர் (தனி)
        2. உதகமண்டலம்
        3. கூடலூர் (தனி)
        4. குன்னூர்
        5. மேட்டுப்பாளையம்
        6. அவிநாசி

         *20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி*

        1. பல்லடம்
        2. சூலூர்
        3. கவுண்டம்பாளையம்
        4. கோயம்புத்தூர் (வடக்கு)
        5. கோயம்புத்தூர் (தெற்கு)
        6. சிங்காநல்லூர்

         *21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி*

        1. தொண்டாமுத்தூர்
        2. கிணத்துக்கடவு
        3. பொள்ளாச்சி
        4. வால்பாறை (தனி)
        5. உடுமலைப்பேட்டை
        6. மடத்துக்குளம்

         *22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி*

        1. பழனி
        2. ஒட்டன்சத்திரம்
        3. ஆத்தூர்
        4. நிலக்கோட்டை (தனி)
        5. நத்தம்
        6. திண்டுக்கல்

         *23. கரூர் பாராளுமன்ற தொகுதி*

        1. வேடசந்தூர்
        2. அரவக்குறிச்சி
        3. கரூர்
        4. கிருஷ்ணராயபுரம் (தனி)
        5. மணப்பாறை
        6. விராலிமலை

         *24. திருச்சி பாராளுமன்ற தொகுதி*

        1. ஸ்ரீரங்கம்
        2. திருச்சி (மேற்கு)
        3. திருச்சி (கிழக்கு)
        4. திருவெறும்பூர்
        5. கந்தர்வகோட்டை (தனி)
        6. புதுக்கோட்டை

         *25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி*

        1. குளித்தலை
        2. லால்குடி
        3. மண்ணச்சநல்லூர்
        4. முசிறி
        5. துறையூர் (தனி)
        6. பெரம்பலூர் (தனி)

         *26. கடலூர் பாராளுமன்ற தொகுதி*

        1. திட்டக்குடி (தனி)
        2. விருத்தாசலம்
        3. நெய்வேலி
        4. பண்ருட்டி
        5. கடலூர்
        6. குறிஞ்சிப்பாடி

         *27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

        1. குன்னம்
        2. அரியலூர்
        3. ஜெயங்கொண்டம்
        4. புவனகிரி
        5. சிதம்பரம்
        6. காட்டுமன்னார்கோவில் (தனி)

         *28மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி.*

        1. சீர்காழி (தனி)
        2. மயிலாடுதுறை
        3. பூம்புகார்
        4. திருவிடைமருதூர் (தனி)
        5. கும்பகோணம்
        6. பாபநாசம்

         *29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

        1. நாகபட்டினம்
        2. கீழ்வேலூர் (தனி)
        3. வேதாரண்யம்
        4. திருத்துறைப்பூண்டி (தனி)
        5. திருவாரூர்
        6. நன்னிலம்

         *30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி*

        1. மன்னார்குடி
        2. திருவையாறு
        3. தஞ்சாவூர்
        4. ஒரத்தநாடு
        5. பட்டுக்கோட்டை
        6. பேராவூரணி

         *31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி*

        1. திருமயம்
        2. ஆலங்குடி
        3. காரைக்குடி
        4. திருப்புத்தூர்
        5. சிவகங்கை
        6. மானாமதுரை (தனி)

         *32. மதுரை பாராளுமன்ற தொகுதி*

        1. மேலூர்
        2. மதுரை கிழக்கு
        3. மதுரை வடக்கு
        4. மதுரை தெற்கு
        5. மதுரை மையம்
        6. மதுரை மேற்கு

         *33. தேனி பாராளுமன்ற தொகுதி*

        1. சோழவந்தான் (தனி)
        2. உசிலம்பட்டி
        3. ஆண்டிபட்டி
        4. பெரியகுளம் (தனி)
        5. போடிநாயக்கனூர்
        6. கம்பம்

         *34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி*

        1. திருப்பரங்குன்றம்
        2. திருமங்கலம்
        3. சாத்தூர்
        4. சிவகாசி
        5. விருதுநகர்
        6. அருப்புக்கோட்டை

         *35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி*

        1. அறந்தாங்கி
        2. திருச்சுழி
        3. பரமக்குடி (தனி)
        4. திருவாடானை
        5. ராமநாதபுரம்
        6. முதுகுளத்தூர்

         *36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி*

        1. விளாத்திகுளம்
        2. தூத்துக்குடி
        3. திருச்செந்தூர்
        4. ஸ்ரீவைகுண்டம்
        5. ஒட்டபிடாரம் (தனி)
        6. கோவில்பட்டி

         *37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி*

        1. ராஜபாளையம்
        2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
        3. சங்கரன்கோவில் (தனி)
        4. வாசுதேவநல்லூர் (தனி)
        5. கடையநல்லூர்
        6. தென்காசி

         *38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி*

        1. ஆலங்குளம்
        2. திருநெல்வேலி
        3. அம்பாசமுத்திரம்
        4. பாளையங்கோட்டை
        5. நாங்குநேரி
        6. ராதாபுரம்

         *39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி*

        1. கன்னியாகுமரி
        2. நாகர்கோவில்
        3. குளச்சல்
        4. பத்மநாபபுரம்
        5. விளவன்கோடு
        6. கிள்ளியூர்

        வெளியூர் மௌத் அறிவிப்பு 29/12/2018


        Friday 28 December 2018

        தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 1ந்தேதி முதல் அமல்



        சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

        இதற்காக தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.  இந்த நடைமுறை வருகிற ஜனவரி 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

        இதன்படி, மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

        அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 

        பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

        பிளாஸ்டிக் தடையை மீறினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 

        தொடர்ந்து சட்டத்தை மீறினால், நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.

        எனவே, பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர இன்னும் சில நாட்களே இருப்பதால், பொதுமக்கள், ஒத்துழைப்பு தருமாறு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

        திருவாரூர் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் ரூ.23½ லட்சம் கையாடல் - பெண் உள்பட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

        திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் பிரிவில் நகராட்சி, ஊராட்சி உள்பட பல்வேறு அரசு துறைகளில் மின் கட்டணம் செலுத்தப்படுவது வழக்கம். இந்த பிரிவில் அதிக பணம் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.


        இந்த நிலையில் வருவாய் பிரிவில் உள்ள கணக்குகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மின் கட்டணம் செலுத்த அரசு துறை சார்பில் வழங்கப்படும் தொகையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று இருப்பது தெரிய வந்தது.

        இதில் மன்னார்குடி மின்வாரிய அலுலகத்தில், வருவாய் பிரிவில் பணிபுரியும் வருவாய் மேற்பார்வையாளர் பர்வீன்நிஷா(வயது 38) என்பவர் ரூ.18 லட்சம் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது. இதேபோல் திருவாரூர் வருவாய் பிரிவு வருவாய் மேற்பார்வையாளர்கள் ஆனந்த்(35) என்பவர் ரூ.5 லட்சமும், அருள்நாதன்(50) என்பவர் ரூ.50 ஆயிரமும் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது.

        இதனை தொடர்ந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன், வருவாய் மேற்பார்வையாளர்கள் ஆனந்த், அருள்நாதன், பர்வீன்நிஷா ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவி்ட்டார். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது. 

        Thursday 27 December 2018

        2019-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை ஜனவரி 2-ந்தேதி கூடுகிறது

        இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 2-ந்தேதி (புதன் கிழமை) தொடங்குகிறது.

        இது 2019-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் 2-ந்தேதி கூட்டத்தில் கவர்னர் பன்வாரி லால் புரோகித் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்.

        இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டு உள்ளார்.

        இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக கவர்னர், சட்டசபை கூட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கூட்டி இருக் கிறார். அன்று காலை 10 மணிக்கு அவர் உரை நிகழ்த்த உள்ளார்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

        தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவது இது 2-வது முறை ஆகும். கவர்னர் உரையில் அரசின் சாதனைகள், வளர்ச்சித்திட்ட பணிகள், எதிர்கால திட்டங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.

        சட்டசபையில் உரையாற்றுவதற்காக வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, சபாநாயகர் ப.தனபால், செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்று, சட்டசபைக்குள் அழைத்துச்செல்வார்கள். சபாநாயகர் அமரும் மேடையில் கவர்னருக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டு இருக்கும். அதில் அமர்ந்தபடி அவர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அவர் தனது உரையை முடித்ததும், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடையும்.

        2-வது நாளான 3-ந்தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாநிதி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அது முடிந்ததும் அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

        இதற்கிடையே, அலுவல் ஆய்வுக்குழு கூடி கவர்னர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு எடுக்கும்.

        அலுவல் ஆய்வுக்குழு குறிப்பிட்டு இருக்கிற நாட்களில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரைக்கு பிறகு, தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து பேசுவார்.

        இந்த கூட்டத்தொடரில் கஜா புயல் நிவாரண பணிகள், ஸ்டெர்லைட், மேகதாது, விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கூட்டத் தொடரில் சூடான விவாதத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

        மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் அரசின் கவனத்தை ஈர்த்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

        இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கவர்னர் உரையை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

        Wednesday 26 December 2018

        கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 26/12/2018

        நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும் குத்புதீன், ஹாஜி முஹம்மது, சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாருமான மரியம் பீவி அவர்கள் ஆசாத் நகர் தனது இல்லத்தில் மௌத்.

        இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜீஊன்.

        அன்னாரின் ஜனாசா 27/12/2018 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

        Tuesday 25 December 2018

        உள்ளாட்சி தேர்தல் வரும் மே மாதம் நடைப்பெற வாய்ப்பு உள்ளது.

        உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை வரும் 2019 மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் ஃபெரோஸ் கான் தெரிவித்தார்.
        தமிழகத்தில் 2016 அக்டோபரில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், திமுக தொடர்ந்த வழக்கின் காரண மாக தள்ளிப்போனது. இந்நிலை யில் 2017 நவ.17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன் றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் அமல் படுத்தவில்லை எனக்கூறி திமுக சார் பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இதேபோல வார்டு மறு வரையறை தொடர்பாக திமுக சார் பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.
        இந்த சூழலில் மாநிலத் தேர்தல் ஆணையரான எம்.மாலிக் ஃபெ ரோஸ்கான் ‘இந்து தமிழ்’ நாளிதழி டம் கூறியது: தமிழகத்தில் உள்ள மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஏற்கெனவே 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இத் தனை ஆண்டுகள் கழித்து தற்போது தான் வார்டு மறுவரையறைப் பணிகள் பூகோள ரீதியாகவும், மக்கள் தொகை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு, கடந்த டிச. 15-ல் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வார்டுகளின் எண் ணிக்கை எந்த விதத்திலும் குறைக் கப்படவில்லை.
        தற்போது 12,524 கிராம ஊராட்சி கள், 388 ஊராட்சி ஒன்றியம், 31 மாவட்ட ஊராட்சி என கிராமப்புறங் களில் 12,943 தலைவர் பதவிகளுக் கும், ஒரு லட்சத்து ஆயிரத்து 450 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுபோல நகர்ப்புறங்களில் 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி என மொத்தம் 664 தலைவர் பதவிக ளுக்கும், 12 ஆயிரத்து 820 உறுப்பி னர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
        இதேபோல நகர்ப்புறங்களில் மேயர், தலைவர் போன்ற பதவிக ளுக்கு நேரடித்தேர்தல் என அறிவிக் கப்பட்டுள்ளதால், மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக 2 மடங்கு தேவைப்படுகிறது. அவற்றை தயார்படுத்தும் பணிக ளில் ஈடுபட்டு வருகிறோம்.
        வார்டு மறுவரையறை முடிந்து விட்டதால் அடுத்தகட்டமாக பெண் கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின வார்டுகளை சரியாகக் கண்ட றிந்து இடஒதுக்கீடு வழங்க வேண் டும். இப்பணிகளை முடிப்பதற்கு எப்படியும் 6 வார காலம் தேவை. ஏனெனில் ஏற்கெனவே உள்ள மக் கள் தொகை பட்டியலும், தற்போது வார்டு மறுவரையறைக்குப்பின்பு உள்ள பட்டியலும் முற்றிலுமாக மாறுபட்டவை. அதன்படி இடஒதுக் கீடு பணிகள் முடிவடைவதற்கு 2019 பிப். முதல் வாரம் ஆகிவிடும்.
        அதன்பிறகு நாங்கள் தயாரித் துள்ள வரைவு வாக்காளர் பட்டி யலை, இந்திய தேர்தல் ஆணையம் 2019 ஜனவரியில் வெளியிடும் பிரதான வாக்காளர் பட்டியலுடன் பொருத்திப்பார்த்து சரிபார்க்க வேண்டும். இந்த வாக்காளர் பட்டி யல் சரிபார்ப்பு பணியை ரூ. 12 லட் சம் செலவில் தேசிய தகவல் மையத் தின் (என்ஐசி) பொறுப்பில் ஒப்ப டைத்துள்ளோம். இப்பணி முடிவ டைவதற்கு 95 நாட்கள் தேவை என என்ஐசி தெரிவித்துள்ளது. இப்படி ஒவ்வொரு பணியையும் யாருமே கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அறிவியல் பூர்வமாக துல்லியமாக செய்து வருகிறாம்.
        அதன்படி எப்படி பார்த்தாலும் வரும் மே முதல் வாரத்தில் தான் எங்களால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட இயலும். அதன்பிறகு 2 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப் பட்டு அனைத்துப் பதவிகளுக்கும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். இதற்கிடையே உயர் நீதி மன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தா லும் அதையும் ஏற்க வேண்டிய சூழலில் உள்ளோம் என்றார்.
        நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே வந்துவிட்டால் உள் ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதா என கேட் டதற்கு, உள்ளாட்சித் தேர்தலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் 2016-ல் எப்படி தயாராக இருந் தோமோ அதே நிலையில் தான் தற் போதும் இருந்து வருகிறோம், என் றார். மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உடனிருந்தார்.

        Sunday 23 December 2018

        நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் தகவல்

        உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

        இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

        உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள் ளது. எனவே அனைத்து தேர்தல் அலுவலர்களும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.

        மேலும் கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் டெபாசிட் பணம் கட்டியிருந்தனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் பணத்தை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் சில பகுதிகளில் வேட்பாளர்களுக்கு டெபாசிட் பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. அதனால் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். எனவே டெபாசிட் பணம் செலுத்திய அனைத்து வேட்பாளர்களுக்கும் உடனடியாக பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

        இவ்வாறு அவர் கூறினார்.

        கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 24/12/2018


        Saturday 22 December 2018

        28 சதவீத உச்சபட்ச 28 சதவீத ஜி.எஸ்.டி. பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன - அருண் ஜெட்லி

        சரக்கு மற்றும் சேவை வரியினால் 2017 ஜூலை மாதத்திலிருந்து 2018 செப்டம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையான மூன்றாயிரத்து 230 கோடி ரூபாயினை மத்திய அரசு அளிக்க வேண்டும். ஐந்தாயிரத்து 454 கோடி ரூபாய் நிலுவைத் தொகையினை உடனடியாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

        மேலும் தமிழக வர்த்தகர்கள் முன்வைத்துள்ள சில வரி குறைப்பு கோரிக்கைகளும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

        கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது என இதற்கான கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 2 சதவீதத்தில்  இருந்து 18 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது.  மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12  சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

        கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

        * இன்றைய கூட்டத்தில் 33  பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது. 28 சதவீத உச்சபட்ச  ஜி.எஸ்.டி.  பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன.

        * டிவி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது.

        *  மானிட்டர்கள் மற்றும் தொலைக்காட்சி திரைகள், டயர்கள், லித்தியம்-அயன் பேட்டரிகளின் ஜி.எஸ்.டி.  28 சதவீதத்தில் இருந்து  18 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளன.

        * கட்டுமான துறைக்கு உதவும் வகையில் சிமெண்ட் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.

        *  ரூ.100க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில்  இருந்து 18 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டு உள்ளது. ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில்  இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

        அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

        புதுஅரிசி கொண்டு பொங்கலிடும் இந்நன்னாளில் அனைவரின் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருக மனமார வாழ்த்துகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

        இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.

        புரட்சித்தலைவி அம்மா அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன் பெற்று பொங்கல் திருநாளை பாரம்பரிய முறைப்படி சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும். 

        இப்பயனைப் பெற்று பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் இனிதே கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.

        கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 23/12/2018


        Friday 21 December 2018

        வெளியூர் மௌத் அறிவிப்பு 21.12.2018





        நமதூர்   நடுத்தெரு மர்ஹூம் மு.இ.மு.அப்துல் மாலிக் அவர்களின் மகளும், அப்துல் ரெஜாக், பாபு என்கிற சேக் அலாவுதீன் இவர்களின் மூத்த சகோதரியும் , புலிவலம் மர்ஹூம் சேக் அலாவுதீன்  அவர்களின்  மனைவியும்  துரை என்கிற யூசுப்தீன் அவர்களின் தாயாருமான ஜெஹபர் நாச்சியா அவர்கள்  புலிவலம் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத் .




         இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன்.


        அன்னாரின் ஜனாசா சனிக்கிழமை காலை 11 மணிக்கு புலிவலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

        நமதூர் மௌத் அறிவிப்பு 21/12/2018





        நமதூர்   தெற்குத் தெரு மர்ஹூம் கா.செ.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் மருமகளும் , தா.அ  அப்துல் ஜலீல் அவர்களின் மகளும், தங்கப்பா என்கிற கா.செ.மு.அ. சுல்தான்  அப்துல்  காதர்  அவர்களின்  மனைவியும்  பிஸ்மித்தீன் அவர்களின் தாயாருமான பிர்தவ்ஸ் பேகம் அவர்கள் மௌத் .

         இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன்.

        அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

        Wednesday 19 December 2018

        தலக்கட்டு சோறு விநியோகம்



        கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 19/12/2018




        நமதூர்  மலாயாத்  தெரு மர்ஹூம் செ.மு.முஹம்மது ஆரிப் அவர்களின் மகனரும் மர்ஹூம் மு.ப.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும் , முஹம்மது சுல்தான் ஹாஜா நஜிபுதீன் இவர்களின் தகப்பனாருமான செ.மு.மு. பதுருத்தீன்  அவர்கள் மௌத்.

         இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன்.

        அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.

        Sunday 16 December 2018

        கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 17/12/2018


        நகராட்சி வார்டுகள் அரசிதழில் வெளியீடு

        தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு அதுகுறித்த விவரங்கள் தமிழக அரசிதழில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
        தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகள் முறையாக
        மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது.
        இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அட்டவணைகளை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம், வார்டு மறுவரையறை பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள உத்தரவிட்டது.
        மாநிலத் தேர்தல் ஆணையப் பணி: மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறைப் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனிடையே, வார்டு மறுவரையறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
        அறிவிப்பின்படி அரசிதழில்...வார்டு மறுவரையறைப் பணிகளை மாநகராட்சி, நகராட்சி வாரியாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில், தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை விவரங்களை டிசம்பர் 15-ஆம் தேதி வெளியிடப் போவதாக அண்மையில் அறிவித்தது. அதன்படி, சனிக்கிழமை (டிச. 15) தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நகராட்சியிலும் உள்ள வார்டுகளின் எல்லை வரையறைகள் அதாவது தெருக்களின் விவரங்கள் உள்பட அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
        இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், நகராட்சிகளின் வார்டுகள் எல்லை மறுவரையறை பட்டியல் என்பது சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாகும். இந்த விவரங்கள் அனைத்தும் விரைவில் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், தமிழக அரசின் எழுது பொருள் அச்சுத் துறையிலும் உரிய கட்டணத்தைச் செலுத்தி அதன் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.

        Friday 14 December 2018

        நமதூர் மௌத் அறிவிப்பு 14/12/2018




         *நமதூர் தெற்கு தெரு கருந்துணி வீட்டு மர்ஹூம் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும் முஹம்மது ஜெஹபர் ,இனாயத்துல்லா ,மர்ஹூம் சேக் அலாவுதீன் இவர்களின் தாயாரும் ,டாக்டர் ஹாஜா அப்துல் நசீர் , முஹம்மது கலிபுல்லா Ex.MC இவர்களின் பாட்டியாருமான ராபியத்து பஜ்ரியா அவர்கள்  குருக்கத்தியில் மௌத்.*

         *இன்னாஇல்லாஹி*
         *வா இன்னாஇலைஹி*
         *ராஜுஊன்*

         *அன்னாரின் ஜனாசா 15/12/2018 சனிக்கிழமை காலை10மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்*

        Kodikkalpalayam


        Tuesday 11 December 2018

        5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம்:ராஜஸ்தான், சத்திஸ்கர் காங்கிரஸ் ஆட்சி


        ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

        ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்னும் 9 மாதங்கள் பதவி இருக்கும் நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை, சொந்த காரணம் என்று மட்டுமே தெரிவித்துள்ளார்.  
        அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘‘தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக நான் எனது தற்போதைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன். இத்தனை வருடங்கள் நான் பல்வேறு பொறுப்புகளில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியது பெருமைக்குரியது, மரியாதைக்குரியது. வங்கியின் சமீபகால மகத்தான சாதனைகளுக்காக என்னுடன் கடினமாக உழைத்த அலுவலர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

        ஆனாலும் இந்த ராஜினாமாவுக்கு ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் தான் காரணம் என்றும், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் முயற்சியே இது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். உர்ஜித் படேல் ராஜினாமா தொடர்பாக மத்திய அரசு பல்வேறு தரப்பில் விமர்சனங்களை எதிர்கொண்டது.

        சக்தி காந்த தாஸ் நியமனம்

        இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் நிதித்துறை செயலாளரும், தற்போதைய நிதி கமிஷனின் உறுப்பினருமான சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர். சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் மூன்று ஆண்டுகள் இருப்பார்.

        Friday 7 December 2018

        கொடிக்கால்பாளையம் ஜமாஅத் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்






         **நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் சார்பாக திரண்ட ப்பட்ட சுமார் ₹1.50 லட்சம் மதிப்புலான கஜாபுயல் நிவாரண பொருட்களை  நாகை மாவட்டம் வாய்மேடு துளசியா பட்டினம் வேட்டைக்காரன் இருப்பு பகுதி மக்களுக்கு விநியோகம் செய்ய இன்று அனுப்பி வைக்கப்பட்டது.*

         *இதில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் ,செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணைத்தலைவர்* *ஹபிபுல்லாஹ் , பொருளாளர் முக்தார் ஹூசேன், தெருபிரதிநிதிகள் பஜலுதீன், அசரப்அலி, முஹம்மது அலி,* *முஹம்மது அப்துல் வகாப், சிராஜூதீன், முஹம்மது ஜெஹபர் மற்றும் அலுவலக கணக்கர் ஜபருல்லா பணியாளர்கள் அப்துல்லா ,பக்கீர் முஹம்மது, அன்வர் மற்றும் தன்ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.*


        Saturday 1 December 2018

        கஜா புயல்; 2வது கட்ட நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.353.70 கோடி ஒதுக்கீடு

        கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

        ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நிவாரண பொருட்கள் ஆகியவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

        சமீபத்தில் புதுடெல்லி சென்ற தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி புயல் நிவாரண நிதியாக பிரதமர் மோடியிடம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார்.  இதனை அடுத்து மத்திய அரசு புயல் ஆய்வு பணிக்காக மத்திய குழு ஒன்றை அமைத்தது.

        தொடர்ந்து, மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது.  இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது.

        அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார்

        அமெரிக்க  முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ  புஷ் காலமானார். அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 41 வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெபார்ட் வாக்கர் புஷ், கடந்த மே மாதம், இரத்த அழுத்த குறைவு மற்றும் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,   ஜார்ஜ் ஹெச். டபிள்யூ  புஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

        Saturday 24 November 2018

        நமதூர் மௌத் அறிவிப்பு 24/11/2018



        நமதூர் புதுமனைத்தெரு மர்ஹூம் உமர் ஆலிம் அவர்களின் மனைவியும் பிஸ்மில்லாஹ் அவர்களின் தாயாருமான மஹமுதா பீவி அவர்கள் மெளத்.



        அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் ஞாயிறு காலை 10:30 மணிக்கு நடைபெறும்.