Sunday 29 June 2014

Kodikkalpalayam Ramadan 1435




நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல்களில் இன்று முதல் ரமலான் மாதம் துவக்குவதால் இஷா 9 மணிக்கும் தராவீஹ் 9:15 மணிக்கும்நடைபெறுகிறது .


பெண்கள் வழக்கம் போல தரை மற்றும் இரண்டாம் தளத்தில் இடம் வசதி செய்யப்பட்டு உள்ளது .


சஹர் சாப்பாடு இரு பள்ளிவாசலிலும் உள்ளத்தால் விருப்பம் உள்ளவர்கள் முறை செய்யவும் உணவு உண்ணவும் நிர்வாகத்தை அணுகலாம் .

Saturday 28 June 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 28/06/2014


நமதூர் தெற்குத்தெரு மிளகா கார வீட்டு முத்துகனி  அவர்களின் கணவர்  H ஹாஜா சேக் அலாவுதீன்  (திருமண ஆலோசகர் ) அவர்கள் காயிதே மில்லத் தெரு ஹலிக்குல் ஜமான் காலனியில் மௌத் .






இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் ஜனாஸா 28/06/2014  மாலை 
5   மணிக்கு நமது முஹ்யிதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .



நமதூர் மௌத் அறிவிப்பு 

Friday 27 June 2014

திருவாரூர் நகர போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திருவாரூர் நகர போலீஸ் நிலையத்துக்கு புதிய கட் டிடம் கட்டும் பணியை வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார்.

வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையம்

திருவாரூர் நகர போலீஸ் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கீழவீதியில் உள்ள ஓட்டு கூரை கட்டி டத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. ஓட்டு கூரை கட்டி டத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டதால், அங்கிருந்த ஆவணங்கள், ஆயுதங்களுக்கு போதிய பாதுகாப்பும், இட வசதியும் இல்லை. மேலும் குற்றவாளிகளை விசாரிக்க ஏதுவாக தனியாக அறை வசதி யும் இல்லை. மழை காலங்களில் ஆவணங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.

தொடர்ந்து பல ஆண்டு களாக வாடகை கட்டிடத் திலேயே இயங்கி வந்ததை யடுத்து நகர போலீஸ் நிலையத் துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து இடத்தை தேர்வு செய் யும் பணி கடந்த சில ஆண்டு களாக நடைபெற்று வந்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு திருவாரூர் நகர போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்படாததால், அந்த நிதி திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையம் கட்ட பயன்படுத் தப்பட்டது.

முதல்-அமைச்சர் உத்தரவு

இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங் களுக்குச் சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட் டார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஆலோசனையின்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமார் திரு வாரூர் நகர போலீஸ் நிலை யத்துக்கு புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். இதில் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவ லகம் அருகே இருந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை யடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி மணிமாறன், தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய் தார். இதைதொடர்ந்து சார் பதிவாளர் அருகே புதிய கட்டி டம் கட்ட முடிவு செய்து, அரசின் ஒப்புதல் பெறப்பட் டது.

பணிகள் தொடக்கம்

புதிய கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத் தை சமப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் உதவியு டன் நடைபெற்றது. இந்த பணியை போலீஸ் துணை சூப்பிரண்டு மதுரை சாமி, நகர போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ்குமார் பார் வையிட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட சுமார் 4 ஆயி ரம் சதுர அடி நிலத்தில் திரு வாரூர் நகர போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் ஆகியவற் றுக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங் கும் என போலீசார் தெரி வித்தனர்.

Thursday 26 June 2014

ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி

 

 

அந்த மனிதருக்கு வயது 65. நல்ல உடல் நலம். ஒரே ஒரு மகன். அவன் படித்து நல்ல நிலையில் இருக்கிறான். 20 வருடத்திற்கு முன்னரே அவரது வங்கி வைப்புத்தொகை 10 லட்சங்கள். இன்னும் நல்ல முறையில் வணிகம் செய்து கொண்டுதான் இருக்கிறார். எப்போது சந்தித்தாலும் எப்படி இருக்கிறீர்கள்? என்ற என் கேள்விக்கு சோர்வான முகத்துடன் ‘ஒண்ணும் இல்லப்பா’ என உதட்டை பிதுக்கிக் கொண்டே பதில் சொல்வார்.
பொதுவாக நமது வாழ்க்கையில் நாம் எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலானவர்களுக்குச் சலித்த மன நிலையுடன்தான் ஒவ்வொரு நாளும் கழிகின்றது.
இந்தச் சலிப்பு மன நிலையானது பல சமயம் பேராசையாகவும் , விரக்தியாகவும் இன்னும் பல எதிர்மறை எண்ணங்களாகவும் செயல்களாகவும் வெளிப்பட்டு சமூகத்தைச் சீரழிக்கிறது.
வாழ்வின் ஆசைகளையும் தேவைகளையும் நிறைவு செய்வற்காக மனிதர்கள் ஓடும் முடிவற்ற ஓட்டத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க அகிலங்களை படைத்த இறைவன் செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் நோன்பாகும்.
நோன்பின் மூலமாக மறுவுலகில் மன மகிழ்வான கூலி என்பதோடு இறைவன் நிறுத்திடவில்லை. அவற்றின் வாயிலாக ஏராளமான இவ்வுலகப் பயனையும் மனித குலத்திற்கு அள்ளித்தருகிறான் இறைவன். நோன்பாளியான மனிதர் ஒருவர் உண்ணுதல் , பருகுதல் , உடல் வேட்கைகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். அந்த மனிதர் இவற்றிலிருந்து உண்மையாகவே விலகி இருக்கின்றாரா என்பதை இறைவனைத்தவிர யாரும் கண்காணிக்கப் போவதில்லை. இதன் மூலம் அந்த மனிதரின் மனசாட்சியானது தூய்மைப்படுத்தப்படுகிறது. மனிதன் தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படுகிறது.
உணவும் பானமும் வாழ்க்கைத் துணைவரும் மனிதரின் முழு முதல் உரிமையாகும். நோன்பின் பகல் காலங்களில் இவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று வரும்போது இந்த மூன்றின் மீதான மனிதரின் தனி உரிமை என்பது இல்லை என்று ஆகின்றது.
இதன் உண்மையான முழு முதல் உரிமையாளன் இறைவன் ஒருவனே. இவற்றின் மீதான மனிதருக்குள்ள உரிமையெல்லாம் தற்காலிகமானதே என்பதும் நிறுவப்படுகின்றது.
அன்றாட வாழ்வில் மனிதருக்குள்ள பங்கிற்கே இதுதான் நிலை எனும்போது உலகின் வளங்களைச் சுரண்டும் பேரவாவிற்கும் பெருந் திட்டங்களுக்குமான அரிச்சுவடி ஓசையின்றி கலைக்கப்படுகின்றது.
குப்பையில் உணவைத் தேடும் பிச்சைக்காரர்கள் , குடி நீரை தேடி பல மைல் தூரம் அலைவோர், முதிர் கன்னிகள், வாழ்க்கை துணையை இழந்த முதியவர்கள் போன்ற காட்சிகளை எவ்வித உறுத்தலுமின்றி நாம் அன்றாடம் கடந்து செல்கின்றோம்.
நோன்போ அவற்றை அனைவருக்குமான கட்டாய அனுபவமாக மாற்றுதன் மூலம் சக மனிதரின் துயர் துடைப்பதை இறை வணக்கத்தின் இன்றியமையாத பக்கமாக உருவாக்குகின்றது
அன்றாடம் எவ்வித சிரமுமின்றி நாம் களிக்கும் வாழ்க்கையானது உலகில் எத்தனையோ பேருக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. என்ற அப்பட்டமான உண்மையை நோன்பானது நமக்கு உணரச்செய்வதோடு நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும் புரிய வைக்கும்.
பல வித வண்ணக் கோலங்களுடனும் ஈர்ப்புகளுடனும் நம்முன் திறந்து விடப்படும் ஒரு நாளின் பகல் பொழுது என்ற வாழ்க்கைத் திடலில் மூச்சிரைக்கும்படியான ஒரு ஓட்டத்தை ஓடியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நம் முதுகின் மீது சுமையாய் கனக்கின்றது.
நோன்பின் பகல் பொழுதுகளில் உயிர் வாழ்தலின் அத்தியாவசியத் தேவைகளைக்கூடத் தவிர்க்கும்போது குடும்ப வாழ்விற்குள்ளாகவே ஒரு துறவறப் பட்டறிவு வாய்க்கின்றது. அது நீர்த்திரளின் மேல் மிதக்கும் நெய்ப் படலம் போல வாழ்வை மாற்றுகின்றது .
நம்முடைய சொந்த வாழ்க்கையை நாமே விலகி நின்று பார்வையாளர்களைப்போலப் பார்க்க முடிகின்றது . இதன் மூலம் நம் வாழ்வின் மீது கவிழ்ந்துள்ள ஆடம்பரங்களின் பட்டியல் நம் புலன்களுக்கு மெல்ல மெல்லத் தட்டுப்படத் தொடங்குகிறது.
மொத்தத்தில் நோன்பானது மனிதனுக்குள் தொலைந்து போன இறைத்தன்மையை மீட்டெடுக்கும் ஒரு ஆன்மிகப் பயிற்சி. குணங்களிலும் நடத்தைகளிலும் மாற்றங்களை கொண்டு வராத நோன்பு என்பது பசியும் , தாகமும் நிரம்பிய வெறும் சடங்கின் தொகுப்பாக மட்டுமே மிஞ்சும்.

திருவாரூர் மாவட்ட செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்





 


திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையினரின் செய்தியாளர் மீதான காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது

 

Tuesday 24 June 2014

திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்கள் அத்துமீறல்




பேரளம் காவல் துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து நடத்திய அத்துமீறல் தாக்குதல் தினமலர் நிருபர் மீது மனிதாபம் அற்ற நிகழ்வு








 

Monday 23 June 2014

இளம் நோபல் பெண்

 

 
 
  • தவக்குல் கர்மான்
    தவக்குல் கர்மான்

மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். பெண்களுக்கென கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.
மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பிப்ரவரி மூன்றாம் நாளை ‘பெருங்கோப நாள்’ என்று அறிவித்தார்.
 
மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பிப்ரவரி மூன்றாம் நாளை ‘பெருங்கோப நாள்’ என்று அறிவித்தார்.
 
பெண்களின் பாதுகாப்புக்காக, ‘சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’ என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் ‘இரும்புப் பெண்மணி’ ‘புரட்சித் தாய்’ என அழைக்கப்படுகிறார்.
 
2011-ம் ஆண்டு லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாது காப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அராபியப் பெண்ணாகவும், இரண்டாவது இஸ்லாமியப் பெண்ணாகவும் வரலாறு படைத்துள்ளார் தவக்குல் கர்மான். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். தான் பெற்ற நோபல் பரிசை ஏமன் நாட்டு பெண்களுக்கு அர்பணிப்பதாகக் கூறியிருக்கிறார் தவக்குல் கர்மான்

Sunday 22 June 2014

மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுப்பது நியாயமற்றது

 
 
 
 
அனைத்து வசதிகளும் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எம்சிஐ அனுமதி மறுப்பது நியாயமற்றது என்றார் இக்கல்லூரியின் முதல்வர் ஆர்.சின்னப்பன்.

திமுக தலைவர் கருணாநிதி 2006-ல் முதல்வராக பதவி யேற்றபோது, அவரது சொந்த ஊரான திருவாரூரின் வளர்ச்சிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற பேச்சு இருந்து வந்தது. இதையடுத்து அவருடைய முயற்சியால் திருவாரூரில் 2009-ல் மத்திய பல்கலைக் கழகமும், 2010-ல் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.

தற்போது 4 ஆண்டுகளை கடந்துள்ள இந்தக் கல்லூரியில், ஆண்டுக்கு 100 மாணவர்கள் வீதம் 400 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து படித்து வரு கின்றனர்.

மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்காக அருகிலேயே மருத்துவமனையும் தொடங்கப் பட்டது.

இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரியில் போதிய பேராசிரியர்கள், பரிசோதனை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ) நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள் ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி முதல்வர் நம்பிக்கை…

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.சின்னப்பனிடம் கேட்டபோது, “கல்லூரியில் தற்போது 114 கல்வி யாளர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், எம்சிஐ 122 பணியிடங்கள் வேண்டும் என்று தவறாக மதிப்பிட்டுள்ளது. வழக்கமாக -10 புள்ளிகளுக்கு மேல் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் அனுமதி மறுக்கப்படும். ஆனால், திருவாரூர் அரசுக் கல்லூரிக்கு -6.4 புள்ளிகளே உள்ளன. ஆனால், எம்சிஐ குழு 14.6 புள்ளிகள் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பேராசிரியர்கள், மாணவர்கள், பரிசோதனைக் கூடங்கள், கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, நோயாளிகள் எண்ணிக்கை என அனைத்திலும் இக்கல்லூரி தன்னிறைவுடனே உள்ளது. எம்சிஐ குழுவினரின் மதிப்பீடு தவறானது, நியாயமற்றது. இங்கு ஆய்வு செய்த எம்சிஐ குழு, அதன் பொதுக்குழுவில் இந்த அறிக்கையை முன்வைக் கவில்லை. எங்களுக்கும் இதுவரை தெரிவிக்கவில்லை. ‘தி இந்து’ மூலம்தான் நானும் தெரிந்துகொண்டேன். எம்சிஐ தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி விரைவில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பெற்றுவிடுவோம்” என்றார்.

Friday 20 June 2014

கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்






திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின் மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை படிக்கும் கிறிஸ்துவர், இஸ்ஸாமிய, பௌத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் குடும்ப ஆண்டு வருமானம்
ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதித் தேர்வில் (9-ம் வகுப்பு நீங்கலாக) 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் நலவாரியங்கள் மூலம் 2014-2015-ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை எதுவும் பெற்றிருத்தல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் ஒருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரி மை வழங்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
www.momascholorship.gov.in

என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆக.1-ம் தேதிக்குள் பெற்று கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஆக. 15-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

Thursday 19 June 2014

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கைக்கு அனுமதி மறுப்பு


திருவாரூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு 100 இடங்களுடன் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி, சேலம் கல்லூரி யில் கூடுதலாக அனுமதி வழங்கப்பட்ட 75 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 175 எம்பிபிஎஸ் இடங்கள் குறைந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த 2013-2014 கல்வி ஆண்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 2,172 இடங்கள் மாநில அரசுக்கு இருந்தன. இந்த 2,172 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டை போலவே 2014-2015ம் கல்வி ஆண்டிலும் 2,172 இடங்களுக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடை பெறும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் (டிஎம்இ) தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக அனுமதி வழங்கிய மருத்துவக் கல்லூரி மற்றும் இடங்கள் அதிகரிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது திருவாரூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு 100 இடங்களுடன் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய பேராசிரியர்கள், பரிசோதனைக் கூடங்கள், உள்கட்டமைப்பு உள்ளிட்டவை இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் அங்கு மாணவர் சேர்க்கையை எம்சிஐ நிறுத்தி வைத்துள்ளது.

அதே போல கடந்த கல்வி ஆண்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 எம்பி பிஎஸ் இடங்கள் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுத லாக 25 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. ஆனால் இந்த இரண்டு கல்லூரி களில் போதுமான வசதிகள் இல்லாததால், இந்த கல்வி ஆண்டில் 75 எம்பிபிஎஸ் இடங் களில் மாணவர் சேர்க்கை நடத்துவ தற்கான அனுமதியை எம்சிஐ நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 18-ஆக குறைந்துள்ளது. இந்த 18 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசுக்கு 2,023 எம்பிபிஎஸ் இடங் களே உள்ளன. எம்சிஐ அனு மதி வழங்காததால். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 175 எம்பிபிஎஸ் இடங் கள் குறைந்துள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாக அனுமதி வழங்கப்பட்ட கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒரு முறை வீதம், 5 ஆண்டுகளுக்கு எம்சிஐ குழுவினர் ஆய்வு செய்வார் கள். மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு மீண்டும் எம்சிஐ குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இரண்டாம்கட்ட கவுன்சலிங் தொடக் கத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும்.

அதே போல திருச்சி அரசு மருத்து வக் கல்லூரியில் 50 கூடுதல் இடங் கள் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 25 கூடுதல் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தனியார் கல்லூரிகளுக்கும் அனுமதி மறுப்பு

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டாக சுமார் 900 இடங்கள் கிடைத்தன. ஆனால் இந்த கல்வி ஆண்டில் 5 தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனு மதியை எம்சிஐ நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டாக 498 இடங்கள் மட்டுமே உள்ளன. மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி கிடைக்கவில்லை.

 

விசில்கள் பறக்கட்டும்

பெரிய சர்ச்சைகள், போராட்டங்களைக் கடந்து உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டி பிரேசிலில் தொடங்கி யிருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஆழ்ந்துள்ள நாட்டுக்கு, இது மிகப் பெரிய சுமை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. கிரேக்கத்தை ஒரு ஒலிம்பிக் போட்டி எப்படித் திவாலாக்கியது என்பதைக் கண்ணெதிரே பார்த்த பிரேசிலியர்களுக்கு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் பதைபதைப்பு நியாயமானது. ஆனால், எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து, போட்டிகளும் தொடங்கிவிட்ட நிலையில், இதை விவாதிப்பதில் பயன் இல்லை. இனி, போட்டிகளை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடிப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் 1930 முதல் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் 13 நாடுகள் பங்கேற்றன. இந்த 20-வது உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. முதல்முறையாக ‘கோல்-லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பந்து கோலை நெருங்கியபோது என்ன நடந்தது என்பது நவீன கேமராக்களின் உதவியுடன் ஆட்ட நடுவருக்குத் துல்லியமாக உடனே தெரிவிக்கப்பட்டுவிடும். எனவே, முடிவுகளைத் தவறின்றியும் விரைவாகவும் எடுத்துவிட முடியும். இந்தப் போட்டியில் முதலில் கிடைத்திருக்கும் நன்மை இது.

ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி சொந்த மண் வலிமையோடு களம் இறங்குகிறது. லூயி பிலிப் ஸ்கோலரி தலைமையில் பிரேசில் அணியை எல்லா விதத்திலும் சமநிலை பெற்ற அணி என்று சொல்லலாம். நெய்மார் சிறந்த முன்கள வீரராகத் திகழ்கிறார். இப்போதைய சாம்பியனான ஸ்பெயின் அணியின் தரமும் திறமும் அச்சுறுத்தலாகவே திகழ்கிறது. அத்துடன் சமீபத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அது வென்று அதே உத்வேகத்தில் நிற்கிறது. லயோனல் மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா தாக்குதல் திறன் மிகுந்து காணப்படுகிறது. பிரேசிலின் ஆட்டக் களங்கள் அதற்கு நன்கு பரிச்சயமானவை. ஜெர்மனி அணியின் நடுக்கள வீரர்கள் சக்திவாய்ந்தவர்கள். ஆனால், பந்தை எதிர்அணி கோலில் செலுத்தத் திறமையான முன்கள வீரர்கள் இல்லை. இத்தாலி அணியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதன் ஆட்ட உத்திகள் நவீனமானவை. எனவே, அவர்களையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

கடந்த உலகப் போட்டியில் இரண்டாவது இடம்பெற்ற நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளும் கடுமையான போட்டிகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிலி, பெல்ஜியம், போஸ்னியா-ஹெர்சகோவினா, ஜப்பான் அணிகளையும் பத்தோடு பதினொன்றாகக் கருதினால் ஆபத்துதான். கால்பந்து ஆட்டத்தின் நுணுக்கங்களை அறிந்து ரசிக்கும் விமர்சகர்களும், ஆட்டத்தின் போக்கில் லயித்து யார், எவர் என்ற பூர்வோத்திரமெல்லாம் பார்க்காத பாமர ரசிகர்களும் விரும்புவது தரமான, நல்ல நட்புறவுடன் கூடிய மகிழ்ச்சியான போட்டிகள்தான். தகுதியுள்ள அணிகளும் வீரர்களும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம்!

Wednesday 18 June 2014

Kodikkalpalayam - வடக்குதெரு ஜெயம் தெரு சந்திப்பில் வேகத்தடை அமைக்குமா ?

தெற்குத் தெரு 
 
சங்கம் முன்பாக 
     நமதூரில் பாதாள சாக்கடை திட்டத்தால் தெருவில் நடக்க கூட முடியாத நிலை காணப்பட்டது .பின் சிமெண்ட் சாலை யாக படிபடியாக போடப்பட்டது .கொஞ்சம் நாட்களில் ஜல்லி வேறு கழண்டு  ரோடு முழுவதும் நடக்கமுடியாத சூழ்நிலை ஏற்றப்பட்டது . பின்னர் மேலதெரு முதல் பள்ளிவாசல் வரை தார் ரோடு போடப்பட்டது

இப்ப புதுமனைத்தெரு முதல் பள்ளிவாசல் வரை ஒரே நாளில் 24 மணி நேரத்தில் போடப்பட்டுள்ளது.7 மற்றும் 8 வது நகரமன்ற உறுப்பினர்கள் கூட்ட செய்த முயற்சிக்கு பலன் கிடைத்து உள்ளது .


வடக்குதெரு ஜெயம் தெரு புதுமனைத்தெரு செல்லும் சந்திப்பு விபத்தை தடுக்க  சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் .


தெற்குதெரு சங்கம் 

மலாயாத் தெரு 

ஜெயம் தெரு வடக்கு தெரு சந்திப்பு 

புதுமனைத்தெரு 

Tuesday 17 June 2014

சூரிய மின்சக்திக்கு அரசு மானியம் உண்டா?

(கோப்புப் படம்/என்.ஸ்ரீதரன்)

சூரிய மின்சக்தி குறித்த தகவல்களை எங்கே பெறலாம்?
சூரிய மின்சக்தி குறித்து தெரிந்துகொள்ள, தமிழக எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.teda.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 
சென்னை தவிர மற்ற மாவட்டத்தினர் யாரை தொடர்பு கொள்வது?
சென்னையைத் தவிர மற்ற மாவட்டத்தினர், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சென்னை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை 044-28224830, 28236592, 28222973 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த தனியார் நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாமா?
சூரிய மின்சக்திக்கான சாதனங்கள் விற்கும் கடைகள், நிறுவனங்களை பொதுமக்கள் அணுகலாம். தனியார் நிறுவன முகவரி தெரியாதவர்கள், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையைத் தொடர்பு கொண்டு சூரியமின் சக்தி பிரிவு அதிகாரிகளை சந்தித்தால், அவர்கள் மூலம் சூரிய மின்சக்தி பொருத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
 
சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த அரசின் மானியம் உண்டா?
சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த ஆகும் செலவில், மத்திய அரசு சார்பில் 30 சதவீதம் மானியம் கிடைக்கும். இதை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலமே பெற முடியும்.
 
தமிழக அரசின் மேற்கூரை சூரிய மின் திட்டம் என்பது என்ன?
தமிழக முதல்வரின் மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டத்தில், ஒரு கிலோவாட் சூரியசக்தி மின் உற்பத்தி உபகரணங்களை பொருத்தி, அதில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் வாரிய கேபிளுடன் இணைத்து பயன்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன், தமிழக அரசின் சார்பில் 20 சதவீதம் கூடுதல் மானியம் கிடைக்கும்.
 
நெட் மீட்டர் (இருவழிக் கணக்கீடு) என்பது என்ன?
சூரிய மின்சக்தி பொருத்தும் இடங்களில், நெட் மீட்டர் எனப்படும் இருவழிக் கணக்கீடு மீட்டர் பொருத்தப்படும். இருவழிக் கணக்கீடு மீட்டர் மூலம், சூரிய மின்சக்தி உற்பத்தியின் அளவு மற்றும் சம்பந்தப்பட்ட மின் இணைப்பில் பயன்படுத்திய மின்சார அளவு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் கணக்கிடப்படும்.
 
தமிழக அரசின் சூரிய மின்சக்தி திட்டத்தில் யாருக்கு அனுமதி உண்டு?
தமிழக அரசின் மேற்கூரை சூரியசக்தி திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஒரு இணைப்புக்கு ஒரு கிலோவாட் மட்டுமே மானியத்துடன் அனுமதி கிடைக்கும். மற்றவர்கள் மத்திய அரசின் மானியத்துடன் மட்டும், எத்தனை கிலோவாட் வேண்டுமானாலும் சூரியசக்தி பொருத்தலாம்.

நமதூர் மௌத் அறிவிப்பு 17/06/2014

நமதூர் தெற்குத்தெரு ஆஸ்பத்திரி எதிரில் செல்லப்பா PSM முஹம்மது ஜெஹபர்  அவர்களின் சகலரும் ,அமீன் என்கிற செய்யது புஹாரி அவர்களின் தகப்பனாருமான அ செ மு முஹம்மது இப்ராஹிம் அவர்கள் மௌத் .




இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 17/06/2014 செவ்வாய்க்கிழமை மாலை புதன்  
இரவு   8.45  மணிக்கு நமது முஹ்யிதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .



நமதூர் மௌத் அறிவிப்பு 17/06/2014

Monday 16 June 2014

நமதூர் நிக்காஹ் தகவல் 18/06/2014


நமது முஹியித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தால்  நடைபெறும் நிக்காஹ் :



நமதூர் புதுமனைத்தெரு Y  முஹம்மது தாஜுதீன்   அவர்களின் மகளார்  M நூருல் ஐன்   அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ஷபான் பிறை 19 (18/06/2014 ) அன்று புதன் 
பகல் 12:05 மணிக்கு புதுமனைத்தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

நமதூர் நிக்காஹ் தகவல் 18/06/2014
 

கடந்த 4 மாதங்கள் காலமாக நகர்மன்ற கூட்டம் இல்லாத திருவாரூர்









கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக நடைபெற்றது திருவாரூர் நகர்மன்ற கூட்டம் . அதன்பின் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கூட்டம் நடக்கவில்லை .பின்னர் சென்ற மே மாதம் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் மற்ற ஊர் நகராட்சிகள் கூட்டம் நடத்தி உள்ளன .

ஆனால் திருவாரூர் நகராட்சி மட்டும் கூட்டம் நடத்தவில்லை .மேலும் இந்த நாள் வரையிலும் ஜூன் மாத கூட்டமும் கூட்டவில்லை .மக்கள் பிரச்சனை குறித்து பேசும் சூழ்நிலை இல்லை என்பதால் கூட்டம் நடக்க வில்லை போலும் .

நகராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரும் செந்தில் திமுக துணை தலைவராக இருக்கிறார்கள் .

காரணம் என்ன ? மக்கள் முன் நிற்கும் வேள்வி இதுதான் .

 

ஆதார் அட்டை திட்டத்தைக் கைவிட முடிவு?

கோப்பு படம்

 
ஆதார் அட்டை திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஆதார் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டது. இத் திட்டத்தை செயல்படுத்த தனி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் சட்ட அங்கீகாரம் இன்றி தொடங்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக பிரவீண் தலால் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் ஆணையத்தின் அரசியல் சாசன அந்தஸ்து குறித்து ஆரம்பம் முதலே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இதுதவிர ஆதார் அட்டை திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆதார் அட்டை திட்டத்தை தொடருவதா, வேண்டாமா
என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இதுதொடர்பாக மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அண்மையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதார் அட்டை திட்டத்தைக் கைவிட பெரும்பாலானோர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. அச்சுதன் சில நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.), ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்பட்ட ரகசிய தகவல்களை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இந்தப் பின்னணியில் ஆதார் அட்டை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனினும் இதற்கு மாற்றாக அனைத்து குடிமக்களுக்கும் பன்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத் திட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday 15 June 2014

திருவாரூர் மாவட்டத்தில் 12,968 பேர் பங்கேற்பு




திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் 12,968 பேர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களில் 62 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருவாரூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 16,665 பேர் தேர்வு எழுத அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 3,697 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 12,968 பேர் தேர்வெழுதினர். திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


Saturday 14 June 2014

திருவாரூரில் அம்மா உணவகம் விரைவில் துவக்கம்

திருவாரூரில் அம்மா உணவகம் இடம் தேர்வு 
 
 
 
 திருவாரூர் நகராட்சி எல்லையில் அம்மா உணவகம் அமைக்க படும் என அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்தார்கள் .இதற்கு இடம் திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்ட் ,இரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் ,பழைய உழவர் சந்தை ஆகிய இடங்கள் ஆய்வு செய்ய பட்டது
அமைச்சர் ஆர் காமராஜ் ,கலெக்டர் மதிவாணன், டாக்டர் கோபால் எம் பி  ஆய்வு செய்தார் .


இன்று குருதிக் கொடையாளர் தினம்

 

கோப்பு படம்
கோப்பு படம்
 
இன்று உலகம் முழுவதும் குருதிக் கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
 
அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களுக்கு நோயால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விபத்து காலங்களில் மனிதன் முதலில் அதிக குருதிப் போக்கை சந்திக்கிறான்.
 
மருத்துவத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக குருதி அணுக்கள் பிரிக்கப்பட்டு டெங்கு மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேறு காலத்தில் அதிக குருதிப் போக்கால் தாய்மார்கள் உயிரிழப்பதை குறைக்கவும் குருதி தேவைப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சாதனைகளைப் படைத்த மனிதனால் இன்று வரை செயற்கையாக குருதியை உருவாக்க முடியவில்லை. அதனால் இதை, ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இங்குதான் குருதிக் கொடை முக்கியத்துவம் பெறுகிறது. குருதிக் கொடை வழங்கும் ஒவ்வொரு வரும் கதாநாயகன்தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குருதிக் கொடை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குருதிக் கொடை அளிப்போரை கவுரவிக்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் உலக குருதிக் கொடையாளர் தினத்தை அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
 
உலகம் முழுவதும் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் ஆண்டுதோறும் குருதிக் கொடை வழங்குகின்றனர். இந்த வகையில் ஆண்டுதோறும் 10.80 கோடி அலகுகள் குருதிக் கொடையாக பெறப்படுகிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 18 முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்கள் 41 சதவீதம் பேரும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் 20 சதவீதம் பேரும் குருதிக் கொடை வழங்குகின்றனர். இத்தகவல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை தெரிவித்து குருதிக் கொடையை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு “தாய்மார்களை காப்பாற்ற பாதுகாப்பான குருதி” என்ற கருத்தை முன்னிறுத்தி குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடுகிறது.
 
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 800 தாய்மார்கள் பேறு காலத்தின்போது ஏற்படும் குருதிப் போக்கால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க வேண்டுமென்றால் குருதிக் கொடையாளர்கள் குருதி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கூறிய கருத்தை உலக சுகாதார நிறுவனம் முன்னிறுத்தியுள்ளது.
 
கடந்த 1999- 2001-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரசவங்களில் 1 லட்சம் பிரசவத்திற்கு 327 பேர் பேறு கால குருதிப் போக்கால் உயிரிழந்துள்ளனர். இதை குறைக்கும் விதமாக மத்திய அரசு, தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை (என்.ஆர்.எச்.எம்.) தொடங்கி கர்ப்பிணித் தாய்மார்கள் கட்டாயம் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்தான் பிரசவம் செய்துகொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக 2007-2009-ம் ஆண்டுகளில் இறப்பு 212 ஆக குறைந்துள்ளது. தற்போது இந்த அளவு மேலும் குறைந்திருக்கும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் தன்னார்வ குருதிக் கொடை பிரிவு ஆலோசகர் சம்பத் கூறியதாவது:
தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பு மிகக் குறைவு. இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக இருப்பது குருதிக் கொடை. அது குருதிக் கொடையாளர்களாலேயே சாத்தியமாகிறது. அதனால் அவர்களை கவுரவிப்போம். நாமும் குருதிக் கொடை வழங்குவோம். தாய்மார்களை காப்பாற்றுவோம். சனிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உலக குருதிக் கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தவும், குருதிக் கொடையாளர்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று கவுரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
2



வாசகர் கருத்து(1)
Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
3. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.