Friday 28 February 2014

முஸ்லிம்களுக்கு S C அந்தஸ்து அளிக்குமா ?

 
       2004 ம் ஆண்டு இந்திய உச்ச நீதி மன்றத்தில் சிவில் ரிட் மனு எண் 180/2004 ஒன்று தாக்கல் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளா  நடைபெற்று வரும் வழக்கு இது .இதில் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களை  SC தகுதி அளிக்கவேண்டும் என வழக்கு பதிய பட்டு உள்ளது .
இதனால் நமக்கு தாழ்த்தப்பட்டோர் நிலை வருவதால் மேலும் பல சலுகை ,தனி தொகுதி , வேலை வாய்ப்பில் வயது தளர்வு என பல வாய்ப்புகள் கிடைக்கலாம் .இந்தியாவில் இந்து (சில சாதிகள்)  ,சீக்கியம் ,புத்த மதத்தை சேர்ந்தவர்கள் தாழ்த்த பட்டோர்கள்  என அரசியலமைப்பு கூறி உள்ளது .

       எனவே மைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முஸ்லிம்களுக்கு அளிக்க வாக்குறுதி கொடுத்த இடஒதுக்கிடு உச்ச நீதிமன்றம் வரை சென்றதால் அவைகள் நடைமுறைக்கு வரவில்லை .
எனவே இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறு வருவதால் மைய அரசு போதே நீதி மன்றத்தில் அப்பிட்டே பிரமான பத்திரம் தாக்கல் செய்தால் மேற்கொண்டு வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கலாம்.

    முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவ தலித்களுக்கும் இந்துக்களில் எஸ் சி  பிரிவினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெற அருகதை இல்லை என்று அறிவிக்கும் வகையில் 1950 ஆம் ஆண்டைய குடியரசுத்தலைவரின் ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது .அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தான் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது .அதில்தான் மத்திய அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது .கடந்த 2008ம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 8 வாரங்கள் காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவுட்டது .ஆனால் 6 ஆண்டுகளாக மதிய அரசு தாக்கல் செய்யவில்லை .

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது .அதுபோல சிறுபாண்மையினர்  தேசிய ஆணையகமும் .அட்டவணை பிரிவினருக்கான ஆணையமும் பரிந்துரை செய்து உள்ளது .அதற்காகவே ஒரு வரைவு அறிக்கை தயாரிப்பது மத்திய அரசின் சிறுபாண்மையினர் நலத்துறை தான் .அறிக்கை தயார் செய்து மத்திய அமைச்சரவை கூடி பிரமான பத்திரத்தை ஒப்புதல் அளித்து அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்
மத்திய அரசு   நீண்ட காலதாமதம் செய்வதால் இந்த 15வது மக்களவை முடிவு பெற்றது .வரும் புதிய அரசு யார் என்பதை பொறுத்து வழக்கின் தன்மை மாறும் .

பலகட்ட போராட்டம் கண்ட சமுதாய இயக்கங்கள் இந்த வழக்கு பற்றி மக்களிடம் எடுத்து சொல்லிருக்கிறதா ?

10 ஆண்டு காலமாக நடைபெற்று  வரும் வழக்கு முடிவு பெற வழி என்ன ?

இன்னும் அடிபட்ட மக்களாக இருக்கும் நம் சமுதாயம் ஒளிவு பெற போவது எப்போது ?

ஆளும் கட்சி ,ஆண்ட கட்சி எல்லாமே தங்கள் சுயநலம் கொண்டே செயல்படுகிறது .
பல கேள்விக்குறியுடன் வாழும் நம் மக்கள் என்று ஆச்சிரியக்குரியாக மாறுவது எப்போது ?

இட ஒதுக்கிடு முலம் பயன் என்ன ? அல்லது எஸ் சி தகுதி நன்மை பயக்குமா?
என்பதை சட்ட வல்லுனர்களும் சமுதாய தலைவர்களும் முடிவு செய்ய வேண்டும் .
தமிழ் நாட்டில் உள்ள 3.5% இட ஒதுக்கிடு முறையால் நாம் பெற்று வரும் பயன்கள் மற்றும் மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையை ஆகியவைகள் கருத்தில் கொள்ள வேண்டும் .


இறைவன் அருளால் அடுத்து வரும் மத்திய அரசு நமக்கு சாதகமான அரசாக அமைத்து நம் கோரிக்கை வென்று காட்டி வருங்கால சமுதாயம் கல்வி ,அரசியல் ,வேலை வாய்ப்பில் தனது உரிமையை பெற்று ஒளிமயமான எதிர்காலம் பெறட்டும் என துவா செய்வோமாக ஆமீன் .



 

Thursday 27 February 2014

KODIKKALPALAYAM -


 
 
 
 










KODIKKALPALAYAM - நமதூர் ரயில் நிலையம்


KODIKKALPALAYAM RAILWAY STATION 2009
நமது முன்னோர்கள் பயன்படுத்திய நமதூர் ரயில் நிலையம் இப்போது வெறும் செங்கற்கள் குவியலாக காட்சி தருகிறது .

எல்லாம் காலத்தின் கோலம்
இதோ நம் காட்சிக்கு முன்னே இந்த தலைமுறை காணத நாம ஊரு ஸ்டேஷன் .
யாரும் செல்லாத காரணத்தால் முடு பட்டு அகலப்பாதை திட்டத்தில் நிலையம் எடுக்கப்பட்டது .


KODIKKALPALAYAM  STATION 2014

Kodikkalpalayam - அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கொடிக்கால் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 






நமதூர் கு சி முஹம்மது நத்தர் நகராட்சி மருத்துவமனை நன்கொடையாளரின் முயற்சியால் துவக்கப்பட்டு இன்று நகர்புற  அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி உள்ளது .
 
மருத்துவர்கள் இல்லாமல் இருந்ததை நமது நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர் முயற்சியால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி யில் இருந்து தினமும் காலை வேளையில் வருவதால் மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது .
பழைய கட்டிடம் பிரதானமாக உள்ளது மற்றும் சிறு சிறு கட்டிடங்களும் பயன் அற்று காட்சி தருகிறது .மகளிர் மகப்பேறு வசதி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை ஆகும் .
 
 
 

Kodikkalpalayam - நினைவுகள்

MUNICIPAL QUILD E MILLATH PARK- KODIKKALPALAYAM

HASSBAVA DHARGAH MASJID - KODIKKALPALAYAM
 
மேலத்தெரு பள்ளிவாசல் திறப்பு விழா 

ஜமாஅத் அடக்கஸ்தல பூங்காவில் மரம் நாடும் விழா 2008


ஜமாஅத் நாட்டாண்மை கோ மு உபையதுல்லா அவர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் 

23/5/2008 அன்று முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் திறப்பு விழா வில் அமைச்சர் மைதீன் கான் 

அரசினர் உயர்நிலை பள்ளி பழைய அலுவலகம் 







Kodikkalpalayam - பாச்சோற்று பெருவிழா 2013

     பாச் சோற்று பெருவிழா கொடிக்கால் பாளையத்தில் ஜமாத்தில் அவ்வல் மாதம் பிறை 9 அன்று மாலை 3மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஹசும் மஹாலில் பெரும் பாத்திஹா நிகழ்ச்சி நடைபெறும் .இதில் 5 படி பச்சை அரிசி , 5 கிலோ வெல்லம் ,கொண்ட பாச் சோற்று சமைத்து சட்டி களை மாடகள் என்று அழைப்பர்













முஸ்லிம் சமுதாயம் மட்டும் இல்லாமல் அணைத்து மக்களும் சமைத்து வருவார்கள் .
இவைகள் மகாசும்  சாஹிப் என்ற பெரியவர் நினைவாக நடைபெறு கிறது .

 

Wednesday 26 February 2014

Thiruvarur Central University of Tamil Nadu


திருவாரூர் மத்திய பல்கலைகழகம் தமிழ் நாடு கடந்த 2009 நாடாளுமன்ற தில் சட்டம் முலமாக இப்பல்கலை கழகம் கொண்டுவர்றபட்டது 
 

Kodikkalpalayam - சிமெண்ட் சாலையின் அவலங்கள்

     2007ம் ஆண்டு திருவாரூர் நகர பகுதியில் துவக்க பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தால் தோண்டப் பட்ட நமதூர் தெருக்களில் பெரும் போராட்டகளுக்கு பிறகு சிமெண்ட் சாலைகள் போடப்பட்டன .ஜெயம் தெரு .மலாயா தெரு .வடக்கு தெரு ,புதுமனைத்தெரு  ஆகியன முதலிலும் பிறகு தெற்கு தெரு .தினா இப்ரம்ஷா தெரு அடுத்தும் போட பட்டன .கடைசியாக மேலத்தெரு ,நடுத்தெரு என நமதூரில் பர்மா தெருவை தவிர்த்து அனைத்து தெருக்களும் சிமெண்ட் சாலைகள் தான் .

மேலத்தெரு சிமெண்ட் சாலை தார் சாலையாக மாற்றபட்டது சில மாதத்திலேயே தார் சாலையாக காட்சி தந்தது .ஆனால் கடைத்தெரு
 நடுத்தெரு சந்திப்பு , பு துமனை தெரு வடக்குத்தெரு ,தெற்கு தெரு என மிகவும்  மோசமான பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத சூழ்நிலையில் உள்ளது .சல்லிகள் போர்த்து வாகனங்கள் செல்ல
முடியாத நிலையில் இருக்கிறது .தெருவில் நடக்கமுடியாத நிலையில் இருக்கிறது .

நகரமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும் நகராட்சி
 நிர்வாகம் இதில் அக்கறை கொண்டு விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  தெரு மக்களின் கோரிக்கை செய்வார்களா ?



 
தெற்குத்தெரு பள்ளி சொல்லும் பிள்ளைகள்
புதுமனை தெரு