Saturday 24 November 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 24/11/2018



நமதூர் புதுமனைத்தெரு மர்ஹூம் உமர் ஆலிம் அவர்களின் மனைவியும் பிஸ்மில்லாஹ் அவர்களின் தாயாருமான மஹமுதா பீவி அவர்கள் மெளத்.



அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் ஞாயிறு காலை 10:30 மணிக்கு நடைபெறும்.

நமதூர் நிக்காஹ் தகவல் 25/11/2018

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் M. அப்துல் ஜலீல் அவர்களின் மகனார் அசாருதீன் மணமகனுக்கு கூத்தாநல்லூர் T.S.அமீர் சுல்தான் அவர்களின் மகளார் ஆயிஷா குர்ஷித் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1440 ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பிறை 16(25/11/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு கூத்தாநல்லூர் திருமணகூடத்தில் நிறைவேற்ற பட உள்ளது.

Kodikkalpalayam - கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது


Friday 23 November 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 23-11-2018

*கடும் மழையில் மின்சாரம் தாக்கி மரணம்*

கொடிக்கால்பாளையம் குச்சாப்பீடி வீட்டு சேக் தாவுது அவர்களின் மனைவியும் முத்துப்பேட்டை ஜெய்னுலாபுதீன் அவர்களின் மகளாருமான ரஜபுநிசா பேகம் அவர்கள் தெற்கு தெரு  தனது இல்லத்தில்  மிக்ஸியை பயன்படுத்தும் போது மின்சாரம் தாக்கி மௌத்.



இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் சனிக்கிழமை முற்பகல்11:30 மணிக்கு

நமதூர் மௌத் அறிவிப்பு 23-11-2018

நமதூர் மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மகனாரும் டீக்கடை ரஹ்மத்துல்லா ஜெஹபர் சாதிக் இவர்களின் சகோதருமான ஜாஹிர் ஹூசேன் அவர்கள் புதுமனைத்தெரு ஷரீப் காலணியில் மௌத்.



அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் இன்று மாலை 4:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும்.

Sunday 18 November 2018

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம்



நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் இன்று காலை 10:15 மணிக்கு நடைப்பெற்றது.

இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்றும், பள்ளிக்கேனி மதில் சுவர் கட்டுவது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோருவது பற்றிய அறிக்கை தயார் செய்வது என்றும் ,ஜமாஅத் பைலா மற்றும் மத்லபுல் கைராத் கல்விகுழுமம் பைலா திருத்துவது குறித்த பொருளை ஒத்திவைப்பது என்றும், மௌலீது தப்ருக் பகலில் தருவதுற்கு ஒப்புதல் அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதி 4வது பொருள் பற்றி சச்சரவு குழப்பம் ஏற்பட்டதால் நிகழ்வுகளை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதில் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ,துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் தெருபிரதிநிதிகள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

 18.11.2018

நமதூர் மௌத் அறிவிப்பு 18/11/2018



நமதூர் ஜெயம் தெரு மர்ஹூம் சி.ப.அ.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும் நசுருதீன் அவர்களின் தாயாரும் முஹம்மது ஹாரிஸ் அவர்களின் பாட்டியாருமான ஹசீனா பீவி அவர்கள் தெற்கு தெரு மருத்துவ மனை எதிரே தனது இல்லத்தில் மௌத்.



அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday 16 November 2018

டெல்டாவில் புயல்


நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது. அப்போது திருவாரூர் மாவட்டத்தில் புயல் காற்று வீச தொடங்கியது. படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்ததால் பொதுமக்கள் விடிய,விடிய பீதியில் உறைய நேரிட்டது.

பலத்த காற்று காரணமாக திருவாரூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அதேபோல வீடுகளின் கூரைகளும் பறந்தன. காற்றின் பேரிரைச்சல், திருவாரூர் மாவட்ட மக்களை இரவு முழுவதும் விழித்திருக்க செய்து விட்டது. நள்ளிரவு தொடங்கிய புயல் காற்று காலை 8 மணியை தாண்டிய பின்னரும் வீசியது.

புயல் காற்று வீச தொடங்குவதற்கு முன்பாகவே திருவாரூர் மாவட்டத்தில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை வரை மின் வினியோகம் சீராகவில்லை. மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நீடாமங்கலம் பகுதியில் நேற்று காலை பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது. நீடாமங்கலம் காஞ்ஜான் திடல் பகுதியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 300 மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. 2 ஆயிரம் மரங்கள் சேதம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பத்தூர், அரசமங்கலம், விஸ்வநாதபுரம், செட்டி சிமிலி, திருமதிகுன்னம், பெருமாளகரம் ஆகிய 6 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கொரடாச்சேரி, முசிறியம் உள்ளிட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையிலான தி.மு.க.வினர் மேற்கொண்டனர்.

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, பழையனூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் புயலில் சிக்கி சாய்ந்தன. வடபாதிமங்கலம்-திருவாரூர், வடபாதிமங்கலம்-மன்னார்குடி பிரதான சாலைகளில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து கிடந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

கூத்தாநல்லூர் பகுதியில் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், தாசில்தார் செல்வி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து இருந்தனர். கூத்தாநல்லூர் பகுதியில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்தது.

மன்னார்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த மின் கம்பங்களை சீரமைத்து மின் வினியோகம் செய்வதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கொடிக்கால்பாளையம் புயல் பாதிப்பு


Monday 12 November 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 12/11/2018

நமதூர் வடக்கு  தெரு  சேனா. ஜெக்கரியா அவர்களின் மனைவியும், சேனா M.இணையத்துல்லாஹ் அவர்களின் தாயாருமாகிய  அஸ்மா நச்சியா தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்



அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் மாலை 4:30 மணிக்கு நடைபெறும்.

Saturday 10 November 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 10/11/2018



நமதூர் நடுத்தெரு மு.இ. மு.அ. முஹம்மது அலி சகோதரர்களின் இளைய மச்சான் சு.செ.மு.பதுருதீன் அவர்களின் அண்ணனும், நடுத்தெரு A.M.அப்துல் ரெஜாக் அவர்களின் சகலரும், வடக்கு தெரு சேனா M.இணையத்துல்லாஹ்  மற்றும் தெற்குத்தெரு சி.அ.ஜு.ஜபருல்லாஹ் இவர்களின் சம்மந்தரும், ஜலாலுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய (கண்மணி ஸ்டோர்)  *சு.செ.மு.முஹம்மது ஜுபைதுல்லாஹ்* அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேனி தெரு ( தபால் நிலையம் பின்புறம்)   
வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறும்.

Friday 9 November 2018

நமதூர் நிக்காஹ் தகவல் 11/11/2018

நமதூர் ஜெயம் தெரு T.M.M.A. அக்பர் ஹுசேன் அவர்களின் மகளார் ரஹ்மத்துல் சபினாஸ் மணமகளுக்கும் புலிவலம் M.E.S.உபைதுர் ரஹ்மான் அவர்களின் மகனார் முஹம்மது யாசர் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1440ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பிறை 2 (11/11/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!


கொடிக்கால்பாளையம்: மௌத் அறிவிப்பு 9/11/2018

நமதூர்  நடுத்தெரு  Y.M. ஜபருல்லா.  அவர்களின் தங்கையும் வேளாங்கண்ணி ஹாஜா மெய்தீன் அவர்களின் மனைவியுமான  ரெஜீயா பேகம் மௌத்.

ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும்.

Thursday 8 November 2018

தமிழகத்தில் அனேக இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை அருகில் நீடிக்கிறது. மேலும் அதே பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், தெற்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

இந்த வானிலை மாற்றத்தால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வரை சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை இருக்கும்.

சென்னையை பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும். நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ராமேசுவரம், ராமநாதபுரம், பாம்பன், இரணியல், திருச்செந்தூர், குளச்சல் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

Wednesday 7 November 2018

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 1,500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு


ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினாலும் 2018ல் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. காற்று மாசை குறைப்பதற்காக இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் ஆணை போட்டது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே வருத்தம் அடைந்தனர்.

சென்னை நகரம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை வானில் வண்ண வண்ண நிறங்களில் ஒளிகள் மின்னின. அந்த 1 மணி நேரத்தில் ஏராளமான புகையும் காணப்பட்டது .

ஆனால், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் 285 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், கோவையில் 184 பேர் மீதும், விழுப்புரத்தில் 160 பேர் மீதும், மதுரையில் 109 பேர் மீதும், திருவள்ளூரில் 105 பேர் மீதும், சேலத்தில் 100 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெளியூர் மௌத் அறிவிப்பு 7/11/2018



நமதூர் புதுமனைத்தெரு வாவாகனி வீட்டு ஹனிப் முஹம்மது மற்றும் மலாயத்தெரு சிராஜ் பாய் அவர்களின் மகனார் பஷீர் அஹமது இவர்களின் மாமனார் ஹாஜி கு.மு.மு. கமாலுதீன்
அவர்கள்,  விஜயபுரம் ஜின்னா தெரு தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்!

ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 4:30 மணிக்கு விஜயபுரத்தில் நடைபெறும்.
KOM NEWS ONLY

Tuesday 6 November 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 6/11/2018

 
திருவாரூர் விஜயபுரம் தியாகராஜ அக்ரஹரம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும்
அடியக்கமங்கலம் கீழச்செட்டித்தெரு  K..M.ஹாஜா சிராஜீதின்  அவர்களின் மருமகன்,
திருவாரூர் காய்கறி கடை SMA.ஜபருல்லா
அவர்கள்,  தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜிவூன்!

 ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு விஜயபுரத்தில் நடைபெறும்.


Monday 5 November 2018

டெங்கு கொசு உற்பத்தி: திரையரங்கு உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் திருவாரூர் கலெக்டர் நடவடிக்கை



திருவாரூர், 

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகி உள்ளதா? என்பது பற்றி மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திரையரங்கு ஒன்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திரையரங்கின் உரிமையாளருக்கு, கலெக்டர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அதேபோல டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த பழைய இரும்பு கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரமும், குடியிருப்பு உரிமையாளர்கள் 2 பேருக்கு மொத்தம் ரூ.1,500-ம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

தேவையற்ற டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகளை வீடுகளில் தேங்க விடக்கூடாது. குடிநீர் தொட்டிகளை கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை குடிநீர் தொட்டிகளை பிளச்சிங் பவுடர் மூலம் தேய்த்து கழுவ வேண்டும்.

இவற்றை பின்பற்றினால் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த முடியும். திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 1,603 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 450 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட மலேரிய தடுப்பு அலுவலர் பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Kodikkalpalayam - நிலவேம்பு கசாயம் வழங்கல்





Friday 2 November 2018

கொடிக்கால்பாளையம்


திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்துவங்கியுள்ளது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.