Wednesday, 11 September 2013

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் நாளை  வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் காலை 10.30 மணிக்கு www.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மதிப்பெண்களில் மாறுதல் உள்ள மாணவர்கள் மட்டும் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை ஒப்படைத்துவிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 16 முதல் 18 வரை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
மதிப்பெண்களில் மாறுதல் உள்ள மாணவர்களில் இதுவரை பதிவிறக்கம் செய்யப்பட்ட சலானை சமர்ப்பிக்காதவர்கள், பாரத ஸ்டேட் வங்கி சலானை கொடுத்தால் மட்டுமே புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment