Tuesday, 29 December 2015

திருவாரூரில் வேலைவாய்ப்பு முகாம்கள்



திருவாரூர் மாவட்டத்தில் டிச.29, 30-இல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்த ஆண், பெண் இருபாலருக்குமான வேலை வாய்ப்பு முகாம் டிச.29-இல் வலங்கைமான் அருணாசலம் கார்டன் திருமண மண்டபத்திலும், டிச.30-இல் நன்னிலம் அருகே பனங்குடி ஊராட்சி ஆண்டிப்பந்தல் ஜேஆர்எஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 8 முதல் பிளஸ்-2 மற்றும் டிப்ளமோ வரை படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாம்களில் முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

விரும்புவோர் தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் நகல்கள் குடும்ப அட்டை இருப்பிடச் சான்று நகல், தகுதி விவரக்குறிப்பு அசல் மற்றும் நகலுடன் 2 மார்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

No comments:

Post a Comment