Saturday, 28 December 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு

 வெளியூர் மௌத் அறிவிப்பு 


28.12.2024


நமதூர் வடக்கு தெரு ஒற்றையா வீட்டு அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் அடியக்கமங்கலம் கொள்ளிக்கட்டை வீட்டு பி.மு.அப்துல் காதர் அவர்களின் மகளாரும் ஜெஹபர் சாலிக் அவர்களின் மாமியாரும், முஹம்மது யூசுப் தீன்,ஹாஜா மெய்தீன் இவர்களின் பாட்டியாருமான செல்லதங்கம் என்கிற நவாஜ் பீவி அவர்கள் அடியக்கமங்கலம் ராஜா தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30  மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

மௌத் அறிவிப்பு




28.12.2024


நமதூர் 52 பணப்பகுதி நகர் மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மகனாரும்,S.முஹம்மது ஆரிப் (பண்டாரி) அவர்களின் சகோதரரும்,J.முஹம்மது இக்பால் அவர்களின் மச்சானும், ஜெஹபர் சாதிக்,ஹாஸ் ரிஸ்வானுதீன் மற்றும் அர்ஷத் பர்வேஸ் ஆகியோர்களின் தாய் மாமாவுமான ராஜா என்கிற ஹாஜி முஹம்மது (பண்டாரி) அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 17 December 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு


 16/12/2024, *வெளியூர் மௌவுத் அறிவிப்பு..* 

கொடிக்கால்பாளையம், முன்னாள் மதரஸா மத்தலபுல் ஹைராத் நாஜிர் மர்ஹும் மௌலானா, மௌலவி, அல்ஹாஜ்  *S.K.சுலைமான் பாகவி* ஹஜ்ரத் அவர்களின் மூத்த மகனாரும்,
S.K.S அஸ்லம் ஜான்,
S.K.S.ஆதம் சேட், ஹாஃபிழ்
S.K.S.அமீர் தங்கள் பாகவி,
S.K.S.முஹம்மது அலி ஹிஜாபி,
S.K.S.ஷாகுல் ஹமீது பாஷா,
S.K.S.அப்சல் ஹுசேன் M.Sc., B.Ed,
S.K.S.தமீமுல் அன்சாரி பாகவி, இவர்களின் சகோதரரும் மற்றும் 
A.அப்துர் ரஹ்மான் ஷிஃபிலி அவர்களின் தகப்பனாருமான
 *S.K.S.அப்துல் நசீர்* அவர்கள் தேனி மாவட்டம், கம்பத்தில்  மௌத்.

அன்னாரது ஜனாஸா  நாளை 17/12/2024, அஸர் தொழுகைக்குப் பிறகு கம்பத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..


Sunday, 15 December 2024

மருத்துவ முகாம்


 திருவாரூர் கொடிக்கால்பாளையம் அரசு  மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ,திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட காச நோய் மையம், திருவாரூர் மெடிக்கல் சென்டர் இணைந்து பொது மக்களுக்கு கண் இலவச பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம் சர்க்கரை காச நோய் மேலும் நுரையீரல்
 புற்றுநோய் பெண்கள் நலம் சார்ந்த நோய்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  சேட் ஜெஹபர் சாதிக் தலைமையில் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் துவக்கிவைத்தார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பெனாசீர் ஜாஸ்மின், கஸ்தூரி மணி ராவ், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் ஜெஹபர் சேக் அலாவுதீன், ஜமாஅத் ஆடிட்டர் முஹம்மது சுல்தான், ஹாஜி தி இப்ராம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி நிஜாமுதீன்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முஹம்மது ஆதம், அடியக்கமங்கலம் ஜமாஅத் தலைவர் புருகானுதீன், உதவும் கரங்கள் முஹம்மது அப்துல் வஹாப்,தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சலீம் மற்றும் மருத்துவர்கள்  கலந்து கொண்டனர்.
இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Saturday, 7 December 2024

அறிவியல் கண்காட்சி

 





















நமது மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் இஸ்லாமிய மற்றும் அறிவியல் கண்காட்சி இன்று காலையில் பள்ளி வளாகத்தில் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் பள்ளி தலைவர் ஹாஜி எம்.சுல்தான் அப்துல் காதர், ஜமாஅத் துணைத் தலைவர் எ.மா.அ.அஹமது உசேன், ஆடிட்டர் மெ‌.இ.பா.முஹம்மது சுல்தான்,52ப்பணப்பகுதி பொருளாளர் வி.எஸ்.என்.எம்.இஸ்ஹாக்,ஹாஜி.தி.இப்ராஹிம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டியும் மத்லபுல் ஹைராத் கல்வி நல குழுமம் நிர்வாக குழு உறுப்பினர் ப.இ.மு.நிஜாமுதீன், தெற்கு தெரு ஜமாஅத் பிரதிநிதியும் மத்லபுல் ஹைராத் கல்வி நல குழும நிர்வாக குழு உறுப்பினர் ‌ஹாஜி எம்.ஏ.முஹம்மது அப்துல் வஹாப், மத்லபுல் ஹைராத் கல்வி நல குழும பொருளாளர் எம்.முஹம்மது ஜலீல், நிர்வாக குழு உறுப்பினர்கள் எம்.முஹம்மது அன்சாரி,கே.ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட ஜமாஅத் தார்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.


இதில் புனித காபா பள்ளிவாசல்,ஜம்ஜம் நீருற்று, ஜனாஸா  நிலைகள் என இஸ்லாமிய விளக்கங்கள் முக்கிய இடம் பெற்றன. மேலும் அறிவியல் படைப்புகள் மாதிரிகளை 101 மாணவ மாணவிகள் தயார் படுத்திக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.


இதற்காக ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை அமருன்னிசா பேகம், உதவி தலைமை ஆசிரியை விஜயலக்ஷ்மி மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.


இதில் நமதூர் ஹாஜி.தி.இப்ராஹிம்ஷா ராவுத்தர் பெண்கள் அரபிக் கல்லூரி மாணவிகள் மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.